மனிதன் மகத்தானவன்... என்பது உண்மை. மனிதன் மகா கேவலமானவன் என் பதும் அதே அளவு உண்மை. அறியாத, பழகாத இன்னொரு மனிதன் மீது ஒருவன் கொள் ளும் இரக்கம், அன்புபோல வேறு உன்னதமான விசயம் எது? ஆனால், அந்த அன்பைக் காட்டும் அதே மனித இனத்தில், தாங்கள் வாழ யாரை வேண்டுமானாலும் கொல்லத் துணிகிறார்கள். இயக்குனர் ராஜுமுருகன், இந்த இரு வகை மனிதர்களையுமே தன் படைப்புகளில் காட்டுபவர். ஆனால், அன்பு காட்டும் மனிதனாகவே நம்மை வாழ வலியுறுத்துபவர். ராஜு முருகனின் "மை லார்ட்'டும் இந்தப் பணியை செய்கிறது.
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆபீசில் வேலை செய்து வாழும் எளிய மனிதன் முத்துச் சிற்பியாக சசிகுமார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்து, அவரால் தான் பெற்ற உறவான முத்துச் சிற்பியுடன் சேர்ந்து குடும்பமாகி, ஒரு ரேசன் கார்டு எடுத்து தாங்கள் வளர்ந்த வள்ளலார் இல்லத்தில் ஒட்டிவைத்துப் பெருமைகொள்ள வேண்டுமென்பதை தன் லட்சியமாகக் கொண்ட எளிய அழகுப்பெண் சுசீலாவாக சைத்ரா. பிறப்பால் பெற்ற சொந்தங்கள் இல்லாத இவர்களுக்கு வாழ்க்கை தந்த சொந்தங்களோடு அழகாக வாழ்ந்துவருகிறார் கள். திடீரென ஒருநாள் சுசீலாவின் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்குப் போக, கிட்னி திருடும் கும்பலிடம் சிக்குகிறார்கள். தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக அவர்கள் புரிந்த போராட்டம்தான் "மை லார்ட்'.
AI, Chat GPT, ரீல்ஸ் என்று நேரம் கடத்திக் கொண்டு, விடுமுறை நாட்களில் செல்ல புதுப் புது வெளிநாடு தேடும் கவலை மட்டுமே உள்ள பலரை ஒரு நிமிஷம் நில்லுயா என்று நிற்க வைத்து, நாம் வாழும் தமிழ் நாட்டிலேயே நாம் வாழும் காலத்திலேயே ரேசன் கார்ட் பெறுவதை கனவாகவும், கடனை அடைக்க காசில்லாமல் கிட்னியை விற்க வேண்டிய நிலையை நிதர்சனமாகவும் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டு கிறார் இயக்குனர். கிரிக்கெட் வெறியரான ஃபைனான் சியர், இனிமையான கொங்கு மொழியில் மரியாதையாகப் பேசி காரியம் சாதிக்கும் மேனேஜர் பாத்திரம், பத்திரிகை யாளர் நா.க., வள்ளலாரின் வழிப்படி எல்லா உயிர்களின் மீதும் பேரன்பு காட்டி வாழும் திருநா என படத்தின் பாத்தி ரங்கள் அனைத்தும் சுவாரசியமாகவும் விதவிதமாகவும் எழுதப்பட்டுள்ளன.
ராஜூமுருகன் படத்தில் அரசியல் இல் லாமலா? மக்களுக் கான அரசியல் படம் நெடுகிலும் சின்னச் சின்ன சிரிக்கவைக் கும் வசனங்க ளாலும், சிந்திக்கவைக்கும் பெரிய சித்தாந்தங்களாகவும் இருக்கின்றன. "விட்னஸ்' -நா.க இருவரும் பேசும் இடங்கள், சின்னச் சின்ன அரசியல் பாடங்கள். எவ்வளவு எளியவர் களாக இருந்தாலும் அவர்களுக்குத் துணை நிற்க ஆள் இருக் கிறது என்ற நம்பிக்கையை தரும் பாத்திரங்கள். இதே போல சசிகுமார் -சைத்ரா பாத்திரங்கள் வாழும் அருட் பெருஞ் சோதி இல்லத்தில் இருக்கும் மனிதர்கள் சொல்லும் விசயம்... எளிய மனிதர்கள் எளிதாக ஒருவருக்கொருவர் துணை யாகிக்கொள்கின்றனர். படிப்பு -வேலை -பதவி -பணம் -அதிகாரம் என எல்லாம் சேர்ந்து கனமாகிப்போனவர்கள் ஒரு குடும்பத்துக்குள்ளும் தனித்து நிற்கிறார்கள். இது பெரும்பாலும் உண்மைதானே?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/tt1-2026-02-19-18-21-55.jpg)
கிட்னி திருட்டு நெட் வர்க் குறித்த காட்சிகள் அதிர வைக்கின்றன. பீகாரில் இரண்டு கிட்னி யையும் விற்றுவிட்டு மரணத்தை எதிர்நோக் கிக் காத்திருக்கும் பெண் ஒரே நொடி வந்தாலும் நம்மை அதிர வைக்கி றாள். சாதாரணமான வர்களுக்கு ஒரு அடையாள அட்டை கிடைப்பதே சாதனையாக இருக்கும் இதே நாட்டில்தான் பவர் ஃபுல் மனிதர்களுக்கு உடல் உறுப்புகள் கூட கியூ வில் நிற்காமல் கிடைக்கின்றன. இந்த இடைவெளி யை, இந்த சமநிலையின்மையை இந்தப் படைப் பிலும் சொல்லியிருக்கிறார் ராஜூமுருகன். ஊழல் செய்பவர்கள் மட்டுமல்ல, தவறான சித்தாந்தத்தில் அதிகப்படியான தீவிரத்துடன் இருப்பவர்களும் வில்லன் கள்தான் என்று ஆஷாசரத் பாத்திரம் சொல்கிறது.
தொடர்ந்து நம்மை துன்புறுத்தும் வாழ்க் கைக்கு நாம் எப்படித்தான் பதிலடி தரமுடியும்? அந் தத் துன்பத்தை மதிக்காமல் சிரித்துக் கடப்பது தானே மிகப்பெரிய பதில். அதை முத்துச்சிற்பி பாத் திரமாக மிக சிறப்பாக நடித்துச் செய்திருக்கிறார் சசிகுமார். "அயோத்தி', "நந்தன்', "டூரிஸ்ட் பேமிலி', "மை லார்ட்' என ஒரு தனித்தன்மையான பயணத் தை மேற்கொண்டிருக்கிறார்... சிறப்பு! கன்னட படங்களில் மனசுக்கு நெருக்கமான பாத்திரங்களில் நடித்த சைத்ரா, ஒரிஜினல் கோவில்பட்டி கடலை மிட்டாய் போல ஒரிஜினல் கோவில்பட்டிப் பெண்ணாக அதிகம் பேசாமலேயே ஈர்க்கிறார். குரு சோமசுந்த ரம் குறித்து சொல்லவே தேவையில்லை, சொன்னா லும் போதாது. ஆஷா சரத், ஜெயப்ரகாஷ், கோபி நயினார் என எல்லோரும் மனதில் பதிய, அவர்கள் எல்லோரையும் தாண்டி படம் முடிந்தும் "என்னங் முத்து' என்று ஒருவரது வசனங்கள் காதில் ஒலிக்கின்றன. அவர் ராம்குமார் பிரசன்னா.
சசி குமார் போலவே இன்னொரு அழகான பட வரிசையில் வருபவர் ஷான் ரோல்டன். அவரது பொறுமைக்குக் கிடைத்த பரிசுகள் இத்தகைய படங்கள். நல்ல படங்களை தயாரிக்கும் அம்பேத் தயாரித்துள்ள "மை லார்ட்'க்கு நல்ல படங்களுக் குக் கை கொடுக்கும் நடிகர் சூரியாவின் 2D என்டர்டைன்மெண்ட் கை கொடுத்து வெளி யிட்டுள்ளது. திரைக்கதை தொய்வு, லாக் (lag) என்ற வார்த்தைகளெல்லாம் தாண்டி படம் முடியும்போது நெகிழ்ச்சியையும், மிகப் பெரும் நம்பிக்கையையும் தருகிறது மை லார்ட். ஒரு கேள்வி எழுகிறது... அதிகாரம், பணம் உள்ளவர் கள் மட்டும் சுயநலத்துக்காக என்ன வேணாலும் செய்றாங்க... சாதாரண மக்கள் மட்டும் அவுங் களுக்கு நல்லதே நினைக்கணுமா? அதற்கும் ராஜு முருகனே பதில் சொல்லியிருக்கிறார்.. அது அவுங்க புத்தி, நம்ம அப்படி வளரலை?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t111433448z-vas-2026-02-07-16-44-29.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/tt-2026-02-19-18-21-39.jpg)