Advertisment

டூரிங் டாக்கீஸ்! இளையராஜா-வெங்கட்பிரபு கூட்டணி!

cc

இளையராஜா-வெங்கட்பிரபு கூட்டணி!

"மாநாடு' ஹிட் கொடுத்த கையோடு டோலிவுட்டிற்குச் சென்ற வெங்கட் பிரபு, அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார். இது தெலுங்கில் அவரது அறிமுகப் படமாகும். இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்க, ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தற்காலிகமாக "என்.சி. 22' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசைஞானி இளைய ராஜா இசையமைக்கவுள்ளாராம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக வெங்கட் பிரபுவின் படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துவந்த நிலையில், "என்.சி 22' மூலம் முதன்முறையாக இளையராஜா-வெங்கட் பிரபு கூட்டணி இணையவுள்ளது.

Advertism

நெருக்கடியில் ஹரி!

நேட்டிவிட்டி கதைக்களத்தில் அதிரடி ஆக்ஷன் படங்கள் இயக்குவதில் கில்லாடியான ஹரி, அருண் விஜய்யை வைத்து "யானை' படத்தை இயக்கியுள்ளார். அவரின் முந்தைய படங்களான "சாமி 2', "சிங்கம் 3', "பூஜை' ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடத் தவறியதால் ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார் ஹரி. குறிப்பாக "சாமி-2' படத்திற்கு கிடைத்த வணிக ரீதியான பின்னடைவு ஹரிக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்ததாம். சாமி முதல் பாகம் இன்றுவரை ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் ஆக்ஷன் படமாக இருக்கும் நிலையில், தேவையில்லாமல் இரண்டாம் பாகத்தை எடுத்து சொதப்பிவிட்டோமே என தன்னுடைய உதவி இயக்குநர்களிடம் ரொம்பவே வருத்தமும் பட்டாராம். இப்படியான சூழலில்தான் அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ளது "யானை'. இப்படம் ஜுன் 17-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ஜுலை 1-ஆம் தேதிக்கு ரீலிஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கமல் நடிப்பில் வெளியான "விக்ரம்' திரைப்படம் ஆல் இந்திய ஹிட்டாக பெர்ஃபார்ம் பண்ணிக் கொண்டிருப்பதால் "யானை' படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

Advertisment

vv

வில்லனாகும் ஆரி!

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலிவுட், டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம்வந்தவர் ஹன்ஸிகா. அவரது 50-ஆவது படமான "மஹா' விரைவில் வெளியாகவுள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான எந்தப் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததாலும், இளம் நடிகைகளின் புதிய வரவாலும் ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்தது. தற்போது சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் ஏதும் கைவசம் இல்லை என்றான பிறகு, சின்ன பட்ஜெட் பட வாய்ப்பு கிடைத்தாலும் ஓகே சொல்லிவிடுகிறாரம். அந்த வகையில், அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளியான "கலாபக் காதலன்' படத்தை இயக்கிய இகோர் இயக்கும் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படமாக உருவாகவுள்ள இப்படத்தில் ஆரியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறதாம்.

பிரம்மாண்ட "சர்தார்!'

cc

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் "சர்தார்' திரைப்படம் உருவாகி வருகிறது. அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்க, வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. அந்நாட்டின் பாராளுமன்றத்தில் மிகப்பிரமாண்டமாக வில்லன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கியது. அதனைத் தொடர்ந்து, ஜார்ஜியா நாட்டிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த இரு இடங்களில் நடந்த படப்பிடிப்பிற்காக மட்டும் ரூபாய் 4 கோடிவரை செலவு செய்யப் பட்டுள்ளதாம். "படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களுக்கு அந்தப் பிரம்மாண்ட காட்சிகள் நிச்சயம் விருந்தாக அமையும்' என்கிறார்கள் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தினர்.

எதிர்பார்ப்பில் "புஷ்பா-2'

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான "புஷ்பா' திரைப்படம், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலை வாரிக்குவித்தது. அதோடு, தென்னிந்திய சினிமாவிற்கு பான் இந்தியா மார்க்கெட்டையும் திறந்துவிட்டது. "புஷ்பா இரண்டாம் பாகம்' குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்... இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதாம். முழுக்க முழுக்க அல்லு அர்ஜுன் மற்றும் பகத் ஃபாசிலுக்கு இடையேயான மோதலை விவரிக்கும் படமாக இரண்டாம் பாகம் அமையவுள்ளதாம். முதல் பாகத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்த நிலையில், அடுத்த பாகத்தில் முடிந்த அளவிற்கு அதைத் தவிர்க்கும் முடிவோடு கதை விவாதத்தில் கவனம் செலுத்தி வருகிறாராம் சுகுமார்.

-இரா.சிவா

nkn180622
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe