Advertisment

டூரிங் டாக்கீஸ்! மோசமான போலீஸ்கள் உருவாவது எப்படி? படம்பிடித்துக் காட்டிய டாணாக்காரன்!

dd

வுடி போலீஸ்களையும் சூப்பர் ஹீரோ போலீஸ்களையும் அதிகம் பார்த்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு காவலர்களின் வாழ்க்கை குறித்த வித்தியாசமான ஒரு பரிமாணத்தை முன்வைத்துள்ளது ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள "டாணாக்காரன்' திரைப்படம். காவல்துறை பணியி லிருந்து விலகி உதவி இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கிய தமிழ், தனது முதல் படைப்பிலேயே காவல் துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அரசியலை பேசி ரசிக்க வைத்திருக் கிறார். விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.

Advertisment

இப்படக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட "ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற முயற்சியின் மூலம் தன்னலமற்ற உழைப்பை சமூகத்திற்காக வழங்கிய காவலர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவலர்கள் தங்களின் பணிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், வேலைக்காகத் தனிப்பட்ட முறையில் அவர்கள் செய்ய நேர்ந்த தியாகங்கள், அவர்களின் குடும்ப மற்றும் பணி வாழ்க்கையின் சமநிலை போன்ற பல விஷயங்கள

வுடி போலீஸ்களையும் சூப்பர் ஹீரோ போலீஸ்களையும் அதிகம் பார்த்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு காவலர்களின் வாழ்க்கை குறித்த வித்தியாசமான ஒரு பரிமாணத்தை முன்வைத்துள்ளது ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள "டாணாக்காரன்' திரைப்படம். காவல்துறை பணியி லிருந்து விலகி உதவி இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கிய தமிழ், தனது முதல் படைப்பிலேயே காவல் துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அரசியலை பேசி ரசிக்க வைத்திருக் கிறார். விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.

Advertisment

இப்படக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட "ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற முயற்சியின் மூலம் தன்னலமற்ற உழைப்பை சமூகத்திற்காக வழங்கிய காவலர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவலர்கள் தங்களின் பணிக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், வேலைக்காகத் தனிப்பட்ட முறையில் அவர்கள் செய்ய நேர்ந்த தியாகங்கள், அவர்களின் குடும்ப மற்றும் பணி வாழ்க்கையின் சமநிலை போன்ற பல விஷயங்களை இம்முயற்சி மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளனர் படக்குழுவினர். 35 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காத போலீஸ்காரர், வேலை காரணமாகத் தனது குழந்தை களின் மழலைப் பருவத்தை அனுபவிக்க முடியாத போலீஸ்காரர் என, பல நிஜக்கதைகளை இந்த "ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ்' முயற்சி வெளிக்கொண்டு வந்துள்ள சூழலில், இப்படத்தின் இயக்குநர் தமிழிடம் படம் குறித்துப் பேசினோம்.

Advertisment

நடிகராக நன்கு பரிச்சயமான பிறகு தற்போது இயக்குநராக முதல் படம் வெளியாகியிருக்கிறது. அந்த உணர்வு எப்படி இருக்கிறது..?

tt

நான் முதன்முதலாக வெற்றிமாறன் சார் கூட சேர்ந்தது "விசாரணை' படத்தில்தான். "அசுரன்' பண்ணிட்டு இருக்கும்போதே "டாணாக்காரன்' கதை பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் "ஜெய்பீம்' வாய்ப்பு வந்தது. என்னோட முதல் மேடை, முதல் புகழ், முதல் வெற்றி எல்லாமே ஒரு இயக்குநராகத் தான் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனால், ஒரு நடிகராக எனக்கு இதெல்லாம் கிடைச்சுது. ஆனால், ஓர் இயக்குநராக கிடைத்த இந்த அங்கீகாரம்தான் எனக்கு பெரிய கொண்டாட்டம்.

வெற்றிமாறனிடம் பணியாற்றிய அனுபவம் இப்பட உருவாக்கத்திற்கு எவ்வளவு உதவியாக இருந்தது..?

ஒரு அழுத்தமான கதையை கமர்ஷியலா எப்படி கொடுக்கலாம்னு வெற்றிமாறன் யோசிப்பார். அதுதான் அவரோட சக்ஸஸுக்கு காரணம். அதே மாதிரிதான் "டாணாக்காரன்' ஒரு அழுத்தமான கதைக்களமாக இருந்தாலும், அதை எப்படி கமர்ஷியலா கொடுக்கலாம்னு நான் யோசிச்சேன். எங்க அக்கா படம் பாத்துட்டு அழுது... "படத்துல வெற்றி மாறனை உரிச்சு வச்சிருக் கய்யா'ன்னு சொன்னாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

காவலர்கள் பயிற்சியில் நடக்கும் அர சியலை மையப் படுத்தி படம் எடுக்கவேண்டும் என்ற யோசனை எப்படி ஆரம்பித்தது..?

என்னோட நண்பர்கள் நிறையபேர் கூட போலீஸ் ட்ரெய்னிங்ல நடந்தது பற்றி நிறைய சிரிச்சு சிரிச்சு பேசுவோம். அதை அப்படியே ஒரு காமெடி படமா எடுக்கணும்னு பிளான் பண்ணிதான் ஆரம்பிச்சோம். ஆனால், இதை ஆழமா பார்த்தா அது காமெடியா இருக்காது. சிஸ்டத்துக்குள்ள போலீஸ் எப்படி உருவாகுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியப்படுத்தணும். அதோட வெளிப்பாடுதான் "டாணாக்காரன்'.

ஓர் அறிமுக இயக்குநராக முதல் படமே காவல்துறையில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என்றபோது தயாரிப்பாளர்களிடம் இருந்து என்ன மாதிரியான ரியாக்ஷன் வந்தது..?

இந்தக் கதையை மட்டும் ரெண்டு வருஷமா பலரிடம் சொல்லியிருக்கேன். இந்தக் கதையில் சொல்லப்படும் பிரச்சினையே பலருக்கு பிரச்சினையா இருந்தது. இது எப்படி மக்களுக்கு புரியுமென்ற கேள்வி அவங் களுக்கு இருந்துச்சு. இது மக்கள்கிட்ட ஜெயிக்கும் அப்படின்னு முதன்முதலாகச் சொன்னது வெற்றி மாறன்தான். அதேபோல என்னை முழுமையா நம்பியது பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம்.

இப்படி ஒரு கதையைப் படமா எடுக்கப் போறதா சொன்னப்போ, உங்க காவல்துறை நண்பர்கள் என்ன மாதிரியான யோசனைகள் கொடுத்தாங்க..?

அவங்க எல்லாரையுமே உட்காரவச்சு நான் கதை சொன்னேன். அப்போ அவங்களுக்கு நடந்த விஷயங்களை என்னிடம் சொன்னாங்க. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான கதைகள் இருக்கும். இந்த கதை என் நண் பர்கள் வாழ்க்கையில இருந்து எடுத்ததுன்னு கூடச் சொல்லலாம்.

"அசுரன்', "ஜெய்பீம்' போன்ற படங்களில் நடிகராக உங்களுக்குக் கிடைத்த அனுபவம் இப்படத்தில் எப்படி பயன்பட்டது..?

"டாணாக்காரன்' எடுத்து முடிச்சிட்டுத்தான் "ஜெய்பீம்' நடிக்கப் போனேன். ஆர்ட்டிஸ்ட்க ளிடம் எப்படி வேலை வாங்கணும், அவங்களை எப்படி நடத்தணும் இதுமாதிரியான விஷயங்களை எல்லாம் வெற்றிமாறனிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன். அவர் எப்போதும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கமாட்டார். அவங்களோட நடிப்பை மெரு கேத்துறது மட்டும்தான் பண்ணுவார். நானும் அப்படித்தான்.

சாத்தான்குளம் போன்ற சம்பவங்களால் மக்கள் மத்தியில் காவலர்கள் என்றாலே எதிர்மறை பார்வை உருவாகி இருக்கும்போது, அவர்களின் கஷ்டங்களைப் படமா எடுத் திருக்கீங்க. இதை மக்கள் எப்படி ரிஸீவ் பண்ணிப்பாங்கன்னு உங்க ளுக்கு தோணுச்சு..?

நான் அவங்களுடைய கஷ்டத் தைப் படமா எடுக்கல. போலீஸ் காரங்க எப்படி உருவாக்கப்படுறாங்க அப்படிங்கிறதைத்தான் எடுத்திருக் கேன். நாம காவல்துறை மேல வைக் கும் விமர்சனங்களுக்குப் பின்னால் என்ன மாதிரியான காரணங்கள் இருக்குன்னு ஆராயணும் இல் லையா..? காரணத்தை கண்டு பிடிச்சால்தானே பிரச்சினையைத் தீர்க்க முடியும். அதுக்கான விவா தத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்.

-கிருபாகர்

nkn160422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe