Monogamy
""ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கட்டாயப்படுத்தக்கூடாது'' என்று சொல்லியுள்ளார் கல்யாணமான "கபாலி' ராதிகா ஆப்தே.
""நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் போது உணர்ச்சிவயப்படுவது உண்மைதான். சினிமா என்றில்லை... வேறு துறைகளில் உள்ள ஆண் களாக இருந்தாலும் உடற் கவர்ச்சியோ அல்லது வேறு விஷயங்களிலோ... பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். நான் ஒரே நேரத்தில் பலருடன் நெருக்கமாக இருப்பதை விரும்ப லாம். அது சூழ்நிலையைப் பொறுத்தது.
"ஒருவனுக்கு ஒருத்தி' என்பதை ஆண்களிடமோ, பெண்களிடமோ நிர் பந்தப்படுத்தக்கூடாது. "மோனோகெமி' என்பது சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் இருக்கவேண்டும்''.
Age Gap
மணிரத்னத்தின் "உயிரே' படத்தில் ரயில் பாட்டுக்கு ஆடி... ரசிகர்களை வசீகரித்தவர் மலைக்கா அரோரா. சல்மான்கானின் தம்பி அர்பாஸ்கானை மணந்து, ஒரு டீன்ஏஜ் மகனுக்குத் தாயான மலைக்கா சட்டப்படி கணவனைப் பிரிந்துவிட்டார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூருக்கும், அவரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர் அர்ஜுன்கபூர்.
பாலிவுட்டில் பிர பலமாக இருக்கும் அர்ஜுன்கபூரும், மலைக்கா அரோ ராவும் தீவிரமாக காதலித்துக்கொண்டி ருக்கிறார்கள். மலைக்காவுடன் இருக்கும் பழக் கத்தை கைவிடும்படி போனிகபூர் கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி... கேட்டுக் கொண்டும் மறுத்துவிட்டார் அர்ஜுன் கபூர்.
"சின்னப்பய கூட சகவாசம் வேணாம்' என தனக்குச் சொல்லப்பட்ட அட்வைஸை மலைக்கா ஏற்கவில்லை.
இவர்களின் உறவுக்கு எதிர்ப்பு ஏற்படக் காரணம்... அர்ஜுன்கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர். கிட்டத்தட்ட இது... ஒரு தலைமுறை கால இடைவெளி.
இருவரும் விரும்பி காதலித்தாலும் "சின் னப் பயல வளைச்சதாக' மலைக்கா மீதுதான் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
இத்தகைய விமர் சனங்களுக்கு பதில் சொல்லாத மலைக்கா... முதன்முதலாக "ஏஜ் கேப்' பற்றிச் சொல்லியிருக்கிறார்.
""இருவரின் இத யங்களும், இருவரின் மனங்களும் இணைந் திருக்கையில் வயது வித்தியாசம் தடையில்லை. ஆனால் முற்போக் கான விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு இளம்பெண்ணும், அவளைவிட அதிக வயது கொண்ட ஒரு ஆணும் ரொமான்ஸ் செய்வதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் பெண் வயதில் மூத்தவளாக இருந்தால்... மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்''.
Skin Suit
"ஆடை' படத்தில் நிர்வாணமாக அமலாபால் நடித்திருப்பதாகச் சொல்லப் பட்டாலும்... அமலாவின் உடலளவுக்கு ஏற்ப பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட "ஸ்கின்சூட்' அணிந்துதான் நடித்திருக் கிறார்.
உடற்தோலின் நிறத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கின்சூட்... பார்ப்பதற்கு ஆடையின்றி இருப்பது போலவே காட்சி தரக்கூடியது.
Tattoo
தனக்கு விசேஷமான நபரின் பெயரை பச்சை குத்திக்கொள்ளும் கிராமத்து பழக்கம் இப்போது "டாட்டூ' குத்துவதாக மாறியுள்ளது.
சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரை தனது உடலின் வலதுபக்க விலாவில் "டாட்டூ'வாக குத்தியிருந்தார்.
சமீபத்தில் கையை உயர்த்திக் கொண்டு சமந்தா கொடுத்த போஸில் மேலாடை கொஞ்சம் மேலே ஏறியதில் டாட்டூ தெரிய... அதை அலசி ஆராய ஆரம்பித்துவிட்டார்கள்.
"நான் மறைச்சு வச்சிருந்த ஒரு ரகசியமும் வெளிய வந்துருச்சு' என ஜாலி மூடில் சொல்லியுள்ளார் சமந்தா.
-ஆர்.டி.எ(க்)ஸ்