காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ள பிடிகொடுக்காமல் நழுவுவதாக ஆண்கள் மீது பெண்கள் குற்றம் சுமத்துவார்கள். அதிலும் சில பெண்கள் விபரீத முடிவை எடுப்பார்கள்.
டி.வி. நடிகை விஷயத்தில்... டி.வி.சீரியல் உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
"பிரியமானவளே'’ உட்பட சில சீரியல்களில் நடித்துவருபவர் நிலானி.
ஒரு சீரியலில் போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனராக நடித்துக்கொண்டிருந்த நிலானி... அந்த கேரக்டருக்காக காக்கி யூனிஃபார்ம் அணிந்த நிலையில்... ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் போலீஸாரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு... இந்த காக்கி யூனிஃபார்ம் அணிவதே அவமானமாக இருப்பதாகவும் சொல்லி ஒரு வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்-ஆப் மூலம் வெளியிட்டார்.
இதனால் நிலானி மீது வழக்குப்பதிவு செய்

இதனால் நிலானி மீது வழக்குப்பதிவு செய்த வடபழநி போலீஸார்... நிலானியை குன்னூரில் வைத்து கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
"பிரபலமாவதற்காக நான் இப்படிச் செய்தேன்'’ என நிலானி சொன்னதால்... சொந்த ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில்...
நிலானி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர். குழந்தைகளும் உண்டு நிலானிக்கு.
நிலானிக்கும், சீரியல் உதவி இயக்குநர் காந்தி லலித்குமாருக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது, மனஸ்தாபமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த காந்தி லலித்குமார், உதயநிதி நற்பணி இயக்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளார்.
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியிருக்கிறார் லலித். ஆனால்... "இப்போதைக்கு திருமணம் வேண்டாம்'’என்பது நிலானியின் நிலைப்பாடு.
மைலாப்பூரில் ஒரு படப்பிடிப்பில் இருந்த நிலானியைச் சந்தித்து... திருமணத்திற்கு வற்புறுத்தினார் லலித்.
அப்போது, கேனில் பெட்ரோலையும் கொண்டு சென்றிருக்கிறார் லலித். இது இருவருக்கும் இடையே சச்சரவை ஏற்படுத்த... மைலாப்பூர் காவல் நிலையத்தில், "தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாகவும், அவதூறாக பேசியதாகவும்' லலித் மீது புகார் அளித்தார் நிலானி.
போலீஸார் லலித்தை அழைத்து விசாரித்தபோது... "இனிமேல் நிலானியிடம் வம்பு செய்ய மாட்டேன்'’என உத்தரவாதம் அளித்தார்.
தன் மீது நிலானி போலீஸில் புகார் அளித்ததால் மனமுடைந்த லலித், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில், தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட லலித், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
""அம்மு... நீதான் என் வாழ்க்க’’
“நீ எனக்கு குடுத்த வலிதான் அதிகம்’’
சிங்கம் மாதிரி வாழ்ந்தேன்... உன்னயவிட்டு நான் பிரியணுமாம். ஸ்டேஷன்ல வச்சு, ஷூ காலால மிதிச்சாங்க தெரியுமா?''’’
""நீ ஏதாவது ரூடா பேசீருப்ப''’’
""நான் உன்னைப்பத்தி எதுவுமே சொல்லல... ஆனா நீ என்னைப் பத்தி சொல்லீருக்க''’’
""நான் எதுவுமே சொல்லல... ‘நாங்க பழகுனோம். அப்புறம் அவரோட கேரக்டர் எனக்கு பிடிக்கல. கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி வற்புறுத்தினாரு. நான் யோசிச்சிட்டு சொல்றேன்னு சொன்னேன். அடிக்கடி ‘"தற்கொலை செய்துக்குவேன்னு சொல்லி மிரட்றாரு'ன்னுதான் சொன்னேன்''’’
""என் காதல் உண்மைங்கிறத உனக்கு புரிய வைப்பேன்''’’
""உண்மைனு எனக்கு புரியுது. ஆனா... கொடுமையா இருக்கு''’’
""என்னைவிட்டா உன்னை நேசிக்க ஆளில்லனு நீ உணரணும்... உணர வைப்பேன்''’’
""உன்னோட சைக்கோத்தனமான முன்கோபம்தான் எனக்குப் பிடிக்கல''“
""நான் சாப்பிடல... எனக்கு காசு கொண்டுவந்து குடு''’’
""எனக்கு உடம்புக்கு முடியல. நான் வரமுடியல. ஒரு வண்டி புடிச்சிட்டு வாங்க. காசு கடன் வாங்கி வச்சிருக்கேன். சம்பளம் வந்ததும் தர்றேன். என் காரையும் நீங்களே வச்சுக்கங்க. ஸ்டேண்ட் பண்றவரைக்கும் காரை நீங்களே வச்சுக்கங்க. நீங்க அடிக்கடி தற்கொலை மிரட்டல்விட்டு டார்ச்சர் பண்றதுக்கு முடிவு கட்டணும். நீங்க அப்புறமாவது திருந்தணும்னுதான் நான் புகார் கொடுத்தேன்''’’
""நீ என்னைத் தேடி வருவ''’’
""ஏதாவது நல்ல விஷயமா பண்ணுங்க தேடி வர்றேன். முட்டாள்தனமா ஏதாவது பண்ணாதீங்க''
இப்படி நிலானிக்கும், லலித்துக்குமான உரையாடல் நடந்திருக்கிறது.
இருவரும் ஒருவரை இருவர் ரொம்ப நேசித்திருக்கிறார்கள் என்கிறபோதும்... அதையும் தாண்டிய பிடிவாத உணர்வுகள் இரு தரப்பிலும் நீடித்திருந்த நிலையில், அந்த உணர்வே இருவரில் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டது.
-கீரன்