க்ரீன் சிக்னல்!
"காஞ்சனா' வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கிவந்த ராகவா லாரன்ஸ், கடைசியாக ‘"காஞ்சனா 3'’ படத்தை இயக்கியிருந்தார். இதன் அடுத்த பாகமான ‘"காஞ்சனா 4'’ படத்தை இம்மாதம் தொடங்க திட்டமிட்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளிலும் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தார். ஸ்கிரிப்ட் பணிகள் இப்போதுதான் நிறைவடைந் துள்ளது. படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். இதற்காக ஹீரோயின் தேடும் பணியில் இருக்கும் லாரன்ஸ், மற்ற மொழி ஹீரோயினைத் தான் தேர்வு செய்வேன் என உறுதியாக இருக்கிறார். காஞ்சனா முதல் பாகத்தில் தொடங்கி கடைசி பாகம்வரை வேதிகா, லட்சுமிராய், டாப்சி, ஓவியா என மற்ற மொழி நடிகைகளை கமிட் செய்துவந்த லாரன்ஸ், இந்த படத்திற்கும் முதலில் மிருணாள் தாக்கூரை அணுகியுள்ளார். அவர் ரெட் சிக்னல் கொடுத்ததால் அடுத்ததாக பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் க்ரீன் சிக்னல் கொடுத்ததால் ஹேப்பியாக இருக்கிறார் லாரன்ஸ். மேலும் படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருக்கிறார். கோல்ட் மைன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
காஜல் ஓ.கே!
திருமணத்திற்கு பிறகு ஒரு பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்ற கவலை காஜல் அகர் வாலிடம் இருந்து வருகிறது. அதைத் தீர்க்கும் வகையில் "இந்தியன் 2' அமையும் என எதிர்பார்த்த அவருக்கு படத்தின் ரிசல்ட் பெரும் அப் செட்டை உண் டாக்கியது. அதோடு அவர் நடித்த காட்சி கள் "இந்தியன் 3' படத்தில்தான் வரு வதால் அதை மலை போல் நம்பியிருக்கிறார். இதனிடையே ஏ.ஆர் முருகதாஸ் காஜலிடம் பேசி, அவர் இயக்கி வரும் சல்மான்கான் படமான ‘"சிக்கந்தர்'’ படத்தில் ஒரு முக்கியமான ரோல் இருப்பதாக சொல்லியுள்ளார். சல்மான்கான் படம் என்பதாலும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதாலும் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் "சிக்கந்தர்' மூலம் தன்னை நிரூபித்துக்கொள்ள லாம் என முடிவுசெய்து ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஓ.கே. சொல்லியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெற்றிப்படமாக அமைந்த "துப்பாக்கி' படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
கேங்ஸ்டர் ரவி!
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "அகிலன்', "பொன்னியின் செல்வன் 2', "இறைவன்', "சைரன்' என அனைத்துப் படங்களும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி யைப் பெறவில்லை. இதையடுத்து "பிரதர்', "ஜீனி', "காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் "பிரதர்' படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் நிலையில், மற்ற இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படி படங்களை அடுத்தடுத்து கமிட் செய்துவரும் ஜெயம் ரவி, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். சமீபத்தில் இதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்கிறார். இந்தப் படமும் அவரது வழக்கமான ஸ்டைலில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகுமென கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. அவர் சூர்யாவை வைத்து தற்போது படம் இயக்கிவரும் நிலையில் அதை முடித்தவுடன் இந்தப் படத்தின் பணிகளை தொடங்கவுள்ளார்.
சிம்ரன் ஹேப்பி!
தனது செகண்ட் இன்னிங்ஸில், முன்னதாக ஜோடி போட்ட நடிகர்களோடு மீண்டும் நடிக்க ஆர்வம்காட்டி வருகிறார் சிம்ரன். அந்த வகையில் "மகான்' படத்தில் விக்ரமுடனும், "ராக்கெட்ரி' படத்தில் மாதவனுடனும், "அந்தகன்' படத்தில் பிரசாந்துடனும் நடித்தார். இதையடுத்து "குட்-பேட்-அக்லி' படம் மூலம் அஜித்துடன் நடிக்கிறார். அவரது ஆசைப்படி எல்லா ஹீரோவுடனும் நடித்துவிட்ட நிலையில்... விஜய்யுடன் நடிக்கவில்லையே என்ற கவலை அவருக்கு இருந்திருக்கிறது. விஜய்யும் கடைசி ஒரு படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளதால் அப்படத்தில் இடம்பெற்றுவிட வேண்டும் என எண்ணியுள்ளார். இதற்காக அவரது பவரை பயன்படுத்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். சிம்ரனின் ஆசைக்கு செவிசாய்த்த விஜய், இயக்குநருக்கு ஓ.கே. என்றால் தனக்கும் ஓ.கே. எனச் சொல்லியுள்ளார். உடனே இந்தப் படத்தை இயக்கவுள்ள வினோத்திடம் சிம்ரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வினோத்தும் அவருக்காக ஒரு கதாபாத்திரம் இருப்பதாகத் தெரிவித்து, சிம்ரனுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதனால் ஏகப்பட்ட மகிழ்ச்சியிலிருக்கிறார் சிம்ரன்.
-கவிதாசன் ஜெ.