பலத்த யோசனை!

"தனி ஒருவன்' படம் மாபெரும் வெற்றி பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு வீடியோ அமைந்தது. வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்பதை ரிவீல் செய்யவில்லை. ஆனால், முதல் பாகத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்ததால், அதில் நடித்த அரவிந்தத்சாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் பிரபலமடைந்து விட்டதால் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதல் பாகத்தில் அரவிந்த் சாமி இறந்துவிடுவது போல் காட்சி அமைந்ததால் அவரை இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க முடியாதது போல் ஒரு சூழல் படக்குழுவிற்கு. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக பேச்சுகள் எழுகிறது. அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆனால் பகத் ஃபாசிலோ, "மாமன்னன்' படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், அது விமர்சனத்துக்குள்ளானதால், வில்லன் கதாபாத்திரம் என்றாலே அதன் பின்விளைவுகளை சற்று யோசித்துதான் முடிவெடுக்கிறாராம்.

மீண்டும் மல்டி ஸ்டார்ஸ்!

சமீப காலத்தில் மல்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்ட் ட்ரெண்ட்டாக இருந்து வருவதால், அதற்கேற்றவாறு கதைகளை தேர்வு செய்கின்றனர் டாப் ஹீரோக்கள். அந்த வகையில் கமலின் விக்ரம், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து விஜய்யின் "லியோ' வெயிட்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஃபார்முலாவை தனது அடுத்த படத் திற்கும் ஃபாலோ செய்கிறார் கமல். மணி ரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத் தில் கமிட்டாகியுள்ள கமல், அ.வினோத் படத்தை முடித்துவிட்டு நடிக்கவுள்ளார். இதனால் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் மணிரத்னம் இறங்கியுள்ளார். இப்படத்தில் சிம்புவை நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் அது கை கூடாமல் போனது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானை தற்போது கமிட் செய்துள்ளார். அது போக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியை புக் செய்துள்ளார். இரு நடிகர்களும் ஏற்கனவே மணிரத்னம் டைரக்ஷனில் நடித்துள்ள தால், அவர் கேட்டதும் உடனே ஓ.கே. சொல்லிவிட்டார்களாம்.

Advertisment

c

விரைவில் "விடாமுயற்சி!'

அஜித்தின் "விடாமுயற்சி' டீம், படப்பிடிப்பை விரைவில் தொடங்க தீவிர முயற்சி செய்து வருகிறது. அநேகமாக இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நிச்சயம் தொடங்கிவிடவுள்ளதாக முடிவெடுத்திருக்கிறது. பலமுறை திட்டம் தீட்டியும் அது நடக்காமல் போனதால் இந்தமுறை அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்கிறது தயாரிப்பு நிறுவன வட்டாரம். முதற்கட்டமாக அபுதாபியில் படப்பிடிப்பை ஆரம்பித்து பல்வேறு கட்டங்களாக பல லொகேஷனில் நடத்தவுள்ளார்களாம். கதாநாயகியாக த்ரிஷாவைத்தான் இறுதியாக படக்குழு புக் செய் துள்ளதாம். முன்னதாகவே இந்த தகவல் வெளியான நிலையில் அதற்கடுத்து த்ரிஷாவுக்கு பதில், தமன்னா நடிக்கவுள்ளதாகவும், பின்பு ஏற்கெனவே அஜித்துடன் நடித்த ஹுமாகுரேஷி நடிக்க வுள்ளதாகவும் பரவலாக பேசப்பட, அது வெறும் பேச்சுதானாம். அஜித்துடன் ஐந்தாவது முறையாக த்ரிஷா ஜோடி போடவுள்ள நிலையில், முதல்முறையாக அஜித்துடன் சஞ்சய்தத் மற்றும் அர்ஜுன்தாஸ் வில்லன்களாக மோதவுள்ளனர்.

க்ரீன் சிக்னல்!

விஜய்யின் 68வது படத்தை இயக்கவுள்ள வெங்கட்பிரபு, பரபரவென ஆரம்பக்கட்ட வேலை களை கவனித்துகொண்டிருக்கிறார். மளமளவென நடிகர் நடிகைகளை புக் செய்துவரும் வெங்கட் பிரபு தற்போது அவரது நெருங்கிய நண்பரான வைபவையும் உள்ளே இழுத்துப் போட்டுள்ளார். ஏற்கனவே ஜெய், அபர்ணாதாஸ், பிரியங்காமோகன் உள்ளிட்ட பிரபலங்களை ஒப்பந்தம் செய்துள்ளார். கதைப்படி அப்பா, மகன் என இரண்டு கதாபாத் திரத்தில் விஜய் நடிக்கவுள்ள நிலையில் அப்பா விஜய்க்கு ஜோடியாக அவருடன் ஆரம்ப காலகட்டத் தில் ஹீரோயினாக நடித்த நடிகைகள் நடித்தால் கரெக்ட்டாக இருக்கும் என வெங்கட்பிரபு நினைத் தார். அதற்காக விஜய்யுடன் ஏற்கனவே டூயட் பாடிய ஜோதிகாவை முதலில் புக் செய்தார். அது சில காரணங்களால் கைகூடாமல் போக, பின்பு சிம்ரனை அணுகினார். அவரிடம் இருந்து ரெட் சிக்னல் வர, பின்பு சினேகாவை அணுகினார். சினேகாவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது அது சுமூகமாக முடிந்துள்ளது. சினேகா க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

-கவிதாசன் ஜெ.