"அடுத்த சன்னிலியோன் அமலாபால்' என நீலப்பட நடிகையை, மைனாவுக்கு உதாரணம் காட்டுகிற அளவுக்கு...ரத்னகுமார் இயக்கிவரும் "ஆடை' படத்திற்காக அமலாபால் கொடுத்திருக்கும் போஸ் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
ரத்தக்காயமும், வலியுமாக, குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் அமலாபாலின் மேனியில், ஆடைக்குப் பதிலாக... காகித டேப் சுற்றப்பட்டுள்ளது.
பார்க்க ரணகளமாக இருந்தாலும், அதை கவர்ச்சியுடன் ஒப்பிட்டு சமூக வலைப்பக்கங்களில் பரவலாக பேசுகிறார்கள்.
அமலா இப்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். அதற்காக ரிஸ்க்கும் எடுக்கிறார்.
"அதோ அந்த பறவைபோல' என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தில் டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்து சமீபத்தில் கையை உடைத்துக்கொண்டார்.
இப்போது "ஆடை' படத்திற்காக துணிந்து இப்படி நடிக்கிறார்.
அது விமர்சிக்கப்படுவதில் அமலாவுக்கு வருத்தமில்லை.
""காரணமில்லாமல் இப்படி நான் நடிக்கவில்லை. படம் பார்க்கும்போது... நான் இப்படி நடித்ததற்கான நியாயம் ரசிகர்களுக்குப் புரியும்'' என விளக்கம் சொல்லியுள்ளார் அமலா.
இது பாதிக்கப்பட்ட பெண்ணின் பழிவாங்கல் படம் என்று சொல்கிறார்கள்.
ஹாலிவுட் சினிமா மற்றும் சீரியலில் பிரபலமானவர் நடிகை வனீஸா மார்க்கஸ்.
49 வயதான வனீஸா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்துவந்தார்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகை வீட்டில் வசித்துவந்த... வனீஸா உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அதாவது... "அனொரெக்ஸியா' எனப்படும் ஈட்டிங் டிஸ்ஸாடர் நோயினால் அவருக்கு பாதிப்பு.
"சாப்பிட்டால்... உடம்பு சதை போடுமோ? தனது ஃபிட்டான உடல் அழகு கெடுமோ?' என்கிற அச்சத்தில் சரியாக உண்ணாமல், மன உளைச்சலுக்கு ஆளாவார்களாம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
வீட்டில் வனீஸா நடந்துகொண்ட விதம், கத்துதல், கூச்சலிடுதல் ஆகியவற்றால்... ஏதோ விபரீதமாகப்பட... வீட்டின் உரிமையாளர், போலீஸாரைத் தொடர்புகொண்டு "வனீஸாவுக்கு மருத்துவ உதவி தேவை' என தெரிவித்திருக்கிறார்.
விசயத்தை ஓரளவு கிரகித்துக்கொண்ட போலீஸார், உடனடியாக மனநல மருத்துவர் ஒருவருடன்... வனீஸாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
"தாங்கள் போலீஸ் என்பதாகவும், உதவ வந்திருப்பதாகவும்' போலீஸார் தெரிவிக்க...
வனீஸாவோ கதவைத் திறக்கவில்லை.
ஒருமணி நேர விவாதத்திற்குப் பின்... கதவைத் திறந்து போலீஸாரை நோக்கி துப்பாக்கியைக் காட்ட... தற்காப்பிற்காக வனீஸாவை போலீஸார் சுட்டதில், இறந்துவிட்டார் வனீஸா.
வனீஸா தன் கையில் வைத்திருந்தது ஏர் கன் எனப்படும் பொம்மைத் துப்பாக்கி என்பது... பிறகுதான் தெரிந்திருக்கிறது.
திரையுலகில் ஆணாதிக்கம் என்கிற குற்றச்சாட்டை அடிக்கடி சுமத்தி வந்தவர் வனீஸா. உலகம் முழுக்க ஏராளமான ரசிகைகளை... பாலிவுட்டில் வித்யாபாலன், கோலிவுட்டில் குஷ்பு உட்பட... ரசிகைகளை பெற்றிருக்கிற ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி உடன் சேர்ந்து நடித்தபோது, வனீஸா அவர்மீது பாலியல் தொந்தரவு அளித்து புகார் அளித்ததும், அதை க்ளூனி மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
சுவரை வைத்துத்தான் சித்திரம்... உடலை வச்சுத்தான் நட்சத்திரம். தேக அழகு முக்கியம்தான். அதற்காக... மனஉளைச்சல் உண்டாகிற அளவிற்கு... தேக அழகையேவா சிந்தித்துக் கொண்டிருப்பது?
-ஆர்.டி.எ(க்)ஸ்