டோண்ட் ஒர்ரி ராஷ்மி!

திரைத்துறையில் குறுகிய காலத்தில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு, ரசிகர் களின் ஃபேவரைட் நாயகியாக வலம்வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் விஜய்யின் "வாரிசு' படத்தில் நடித்துவரும் ராஷ்மிகா, அடுத்த தாக அல்லு அர்ஜுனின் "புஷ்பா 2' படத்தில் நடிக்க வுள்ளார்.

cc

இப்படி ஜெட் வேகத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என தனது மார்க்கெட்டை உயர்த்தி வந்த ராஷ்மிகா தற்போது கவலையில் இருக்கிறாராம். ஏனென்றால், சோசியல் மீடியாக்களில் இவரைப் பற்றி பரவும் ட்ரோல்கள்தான் காரணமாம். "நான் சொல்லாததை வைத்தெல்லாம் என்னை கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாக்குகிறார்கள். தவறான விஷயங்களைப் பரப்புவதால் அது என் சினிமா கேரியரையும் மார்க்கெட்டையும் டேமேஜ் செய்கிறது'' என வருத்தப்படுகிறாராம். அதேசமயம் "என்னை யாரும் விமர்சிக்கவே கூடாது என்று சொல்லவில்லை. விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருந்தால் சரி, அத்தகைய விமர்சனங்கள் உண்மையில் என்னை வளர்க்கும்'' என பாசிட்டிவாகவும் பேசுகிறாராம். இது தொடர்பான விஷயங்களும் சோசியல் மீடியாவில் பரவ, "ரஞ்சிதமே... கவலைப் படாதீங்க நாங்க இருக்கோம்' என ஆறுதல் கூறுகின்றனர் ரசிகர்கள்.

அவதார் உங்கள் சாய்ஸ்!

உலகப் புகழ்பெற்ற "அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 16-ஆம் தேதி "3-டி'யில் 160 மொழிகளில் வெளியாகிறது. முதல் பாகத்திலே பல பிரம்மாண்டத்தை காட்டிய ஜேம்ஸ் கேமரூன், இரண்டாம் பாகத்தில் அதனை இன்னும் மெருகேற்றியிருக்கிறார். அதனால் இரண்டாம் பாகத்திற்கு ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை தந்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.

Advertisment

cc

"அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இரண்டாம் பாகத்தின் வசூலைப் பொறுத்தே இருக்கும். நான் கதை எழுதிய காலகட்டத்துக்கும் இப்போது இருக்கும் காலகட்டத்துக்கும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, பெருந்தொற்று, ஓ.டி.டி. என ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால், மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது'' என்று விளக்கியிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.

கை கொடுப்பாரா சிங்கம்?

தமிழ் சினிமாவில் விறுவிறு காட்சிகள், அடுக்கு மொழியில் வசனம், தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என ஒரு ட்ரேட் மார்க் ஸ்டைலை ஃபாலோ பண்ணி படம் எடுத்து வருபவர் இயக்குநர் ஹரி. இந்த ஸ்டைல் "சாமி' படத்தில் தொடங்கி "ஆறு', "வேல்', "சிங்கம்' என... "யானை' வரை தொடர்ந்தது. ஆனால் ஹரியின் வழக்கமான ஸ்டைல், "சாமி 2', கடைசியாக "யானை' ஆகிய படங்களில் வொர்க் அவுட் ஆகவில்லை. இதனால் கவலையில் இருக்கும் ஹரி, இழந்த மார்க் கெட்டை மீட்டெடுக்க வேண்டி ஹெவியாக ஹார்ட்ஒர்க் செய்து வருகிறாராம்.

அதற்காக ஹரி தனது ஆதர்ச நாயகனான சூர்யாவின் உதவியை நாட திட்டமிட்டுள்ளாராம். தனது இமேஜை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்த "சிங்கம்' படத்தினை மீண்டும் கையில் எடுத்திருக்கிறாராம்.

அதன்படி சிங்கம் படத்தின் 4-ஆம் பாகத்தின் கதையை தனது இயக்குநர்கள் குழுவுடன் விவாதித்துவரும் ஹரி, பக்காவாக முழுக் கதையையும் முடித்து விட்டு, சூர்யாவிடம் சொல்லி ஓ.கே. வாங்கிவிட வேண்டும் என ப்ளான் போட்டுள்ளார். இதனிடையே சிறுத்தை சிவாவின் "சூர்யா 42', பாலாவின் "வணங்கான்', வெற்றிமாறனின் "வாடிவாசல்' என தனது லைன்-அப்பில் பிஸியாக இருந்துவரும் சூர்யா, ஹரியின் ப்ளானுக்கு செவி சாய்ப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பலத்த பாதுகாப்பில் இந்தியன்-2

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் "இந்தியன் 2' படம் உருவாகிவருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்து மூன்றுபேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, அதன் பிறகு ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு இப்போது மீண்டும் படப் பிடிப்பை தொடங்கிய படக்குழு, சென்னை யில் தற்போது ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தி வருகிறார்கள். சென்றமுறை மாதிரி எந்தவிதமான விபத்து மற்றும் அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என ஷங்கர் ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை களை ஸ்டிரிக்ட்டாக கடைப்பிடித்து வருகிறார். மேலும் தயாரிப்பு தரப்பிலிருந்து படப் பிடிப்புத் தளத்தில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அனைவருக்கும் விபத்துக் காப்பீடு தந்துள்ளார்களாம். இதை மீறி ஏதாவது விபத்து நடந்தால் உடனடி சிகிச்சைக்காக ஒரு மருத்துவக் குழுவையும், ஆம்புலன்ஸ் வசதியையும் படக்குழு அமைத்துள்ளதாம்.

-கவிதாசன் ஜெ.