Advertisment

டூரிங் டாக்கீஸ்! சூர்யா சம்மதம்!

rashmika

sss

சூர்யா சம்மதம்!

Advertisment

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘"புரூஸ் லீ'’படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் பாண்டியராஜுக்கு முதல் படமே படுதோல்வியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த பிரசாந்த் பாண்டியராஜ், பலரின் ஃபேவரேட் இயக்குநராக மாறியுள்ளார். இவர் இயக்கிய ‘"விலங்கு'’வெப் சீரிஸ் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடிக்க, பிரசாந்த் பாண்டியராஜ் கெரியரை மட்டுமல்ல, விமலின் கெரியரிலும் வெளிச்சம் பாய்ச்சியது. பிரசாந்த் பாண்டியராஜின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சத்தமே இல்லாமல் தனது படத்திற்கு கமிட் செய்துள்ளார் சூர்யா. ‘கங்குவ

sss

சூர்யா சம்மதம்!

Advertisment

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘"புரூஸ் லீ'’படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரசாந்த் பாண்டியராஜுக்கு முதல் படமே படுதோல்வியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த பிரசாந்த் பாண்டியராஜ், பலரின் ஃபேவரேட் இயக்குநராக மாறியுள்ளார். இவர் இயக்கிய ‘"விலங்கு'’வெப் சீரிஸ் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடிக்க, பிரசாந்த் பாண்டியராஜ் கெரியரை மட்டுமல்ல, விமலின் கெரியரிலும் வெளிச்சம் பாய்ச்சியது. பிரசாந்த் பாண்டியராஜின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சத்தமே இல்லாமல் தனது படத்திற்கு கமிட் செய்துள்ளார் சூர்யா. ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யாவுக்கு, கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், சுதா என அடுத்தடுத்து படங்களுக்கான இயக்குநர்கள் கமிட்டாகி உள்ள நிலையில், தற்போது அந்த லிஸ்டில் பிரசாந்த் பாண்டியராஜும் இணைந்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் சொன்ன ஒன் லைன் சூர்யாவுக்கு பிடித்துப்போக, தானே தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இத்தனை கோடியா?

"கீதா கோவிந்தம்'’படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா, அடுத்தடுத்த படங்களின் மூலம் நேஷனல் க்ரஷ்ஷாகி தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். "அனிமல்'’ படம் மூலம் இந்தி மார்க்கெட்டிலும் கதவைத் திறந்துவைத்தார் இயக்குநர் சந்தீப்ரெட்டி வங்கா. வசூலில் வாரிக்குவித்த ‘அனிமல்’ படத்தில் நடிக்க ராஷ்மிகாவிற்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் -சல்மான்கான் கூட்டணியில் உருவாகும் ‘சிக்கந்தர்' படத்தில் நடிக்க ராஷ்மிகாவிற்கு ரூ.13 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. இத்தனை கோடி சம்பளமா என வாயைப் பிளக்கிறார்களாம் முன்னணி நடிகைகள்.

சல்மான் உத்தரவாதம்!

காதல் கதை மூலம் அறிமுகமாகி கமர்ஷியல் கதையைக் கையிலெடுத்து 5 படங்களில் இந்தியளவில் டாப் இயக்குநர்கள் பட்டியலில் இருக்கிறார் அட்லீ. ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியில் நுழைந்த அட்லீ, அங்கேயே செட்டில் ஆவதற்கான வேலைகளைப் பார்த்து வருகிறார். ‘ஜவான்’ படத்தின் வசூல் ரூ.1000 கோடியைத் தாண்டியதால் அட்லீயின் ரேட்டும் எகிறியது. அதனால் மீண்டும் ஒரு கமர்ஷியல் கதையை எழுதிய அட்லீ, அல்லுஅர்ஜுனிடம் சொல்லி ஒப்புதலும் வாங்கியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகப் படத்தின் பணிகள் நடந்துவந்த நிலையில், அட்லீயின் சம்பள பிரச்சனை தொடர்பாக அல்லு அர்ஜூன் படம் கைவிடப்பட்டுள்ளது. சளைக்காத அட்லீ மீண்டும் பாலிவுட்டிற்கு யூடர்ன் அடித்து அதே கதையை சல்மான்கானிடம் கூறியிருக்கிறார். கதை பிடித்துப்போக, அட்லீ கேட்கும் சம்பளமும் தரப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிரச்சினை இல்லை!

Advertisment

"சூரரைப்போற்று’ படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவை வைத்தே ‘"புறநானூறு'’ படத்தைத் தொடங்கினார் சுதா கொங்கரா. புறநானூறு’ தற்போது தொடங்க வாய்ப்பே இல்லை; தாமதமாகும் என சூர்யா அறிக்கை விட, கோலிவுட் முழுவதும் கருத்து வேறுபாடு காரணமாகத்தான் படம் கிடப்பில் போடப்பட்டது என்ற டாக் பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து விசாரித்தபோது, ‘புறநானூறு’ படம் தொடர்பாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை, சூர்யாவிற்கு கமிட்டான படங்கள் இருப்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிறது. இதனிடையே சுதாவும் ஒரு அழகான காதல் ஸ்க்ரிப்ட் தயார் செய்து, துருவ் விக்ரமை வைத்து முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளார்.

nkn220624
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe