samantha

சமந்தா ஹேப்பி!

தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வந்த சமந்தாவுக்கு மையோசிடிஸ் (தசை அழற்சி பாதிப்பு) இருப்பது கண்டறியப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சமந்தா, அடுத்து நடிக்க வேண்டிய படங்களில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் தெலுங்கில் "பங்காரா'’ என்ற படத்தைத் தயாரித்து நடிக்கிறார். பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இயக்குநரான ராஜ்குமார் கிரானி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு இணையான கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். தேசப்பற்றை மையமாகக் கொண்டு இப்படத்தை ராஜ்குமார் கிரானி இயக்கவுள்ளார். இதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார் இருக்கிறார் சமந்தா.

Advertisment

விஜய் உறுதி!

மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிய விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு படங்களை முடித்துவிட்டு புல்டைம் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். தற்போது ‘"தி கோட்'’ படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுக்கும் குறைவாக இருப்பதால் எச்.வினோத் படத்தைக் கைவிட்டு, தீவிர அரசியலில் ஈடுபட விஜய் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் தீயாகப் பரவியது.

Advertisment

இது குறித்து விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, "இது முற்றிலும் தவறான செய்தி என்று மறுத்தவர்கள், எச்.வினோத் படம் கைவிடப்படவில்லை; விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்' என்றனர். அடுத்தது அரசியல் பிரவேசம் என்பதால், அரசியல் படமாகவும், அதில் ஆழமான அரசியல் வசனங்களும் இடம்பெற வேண்டும் என விஜய் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாம்.

ரஜினிக்கு ஸ்கெட்ச்!

காதல், கமர்ஷியல் என கலந்து கட்டியடிக்கும் அட்லீ, பழைய படங்களை தூசிதட்டி மிரட்டலான மேக்கிங் மூலம் திரைத்துறையில் கோலோச்சி வருகிறார். முதல் படத்திற்குப் பிறகு விஜய்யை மட்டுமே வைத்து படமெடுத்த அட்லீ, டாப்கியரில் மும்பைக்குப் பறந்து ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார். அடுத்தாக அல்லு அர்ஜூனை இயக்கும் ஆசையில் டோலிவுட்டிற்கு திரும்பிய அட்லீக்கு பட்ஜெட் பிரச்சனை ஏற்பட, மீண்டும் வண்டியை பாலிவுட்டிற்கே திருப்பி சூட்டோடு சூடாக சல்மான்கானை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால், மற்றொரு பவர்புல் நடிகரையும் தேடி வந்த அட்லீ இறுதியாக ரஜினிகாந்த்தையே இதில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார். எப்படியாவது ரஜினியை நடிக்கவைக்க வேண்டும் என ஆர்வம் காட்டும் அட்லீ, அதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டிவருகிறார்.

Advertisment

அனுஷ்கா அப்செட்!

அழகாலும், வசீகர தோற்றத்தாலும் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட அனுஷ்கா, "பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவிற்கு, பின்பு எடை குறையாததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் அப்செட்டான அனுஷ்கா, சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு கடும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்தார். மீண்டும் பட வாய்ப்புகள் வரத்தொடங்கிய நிலையில், முக்கியத்துவம் இருந்தால் தான் நடிப்பேன் என்று கறார் காட்டி வருகிறாராம் அனுஷ்கா.

அண்மையில், தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, முதலில் கதையைக் கூறுங்கள் என்று இயக்குநரிடம் கேட்டு, "எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இல்லை' என்று புறக்கணித்துவிட்டாராம் அனுஷ்கா. ரூ.5கோடி வரையில் சம்பளம் தருகிறோம் என்று சொன்னபோதும், "நோ மீன்ஸ் நோ...'’என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம்.

-அருண்பிரகாஷ்