நம்பிக்கையுடன் கீர்த்தி!
தென்னிந்திய ரசிகர்களின் விருப்ப நாயகிகளின் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஹிட் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான "சாணிக்காயிதம்', "குட்லக்', "சகி' உள்ளிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்வதில் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறாராம். இந்தநிலையில்தான் ஆண்டனி பரத்வாஜ் இயக்கும் "ஜெ.ஆர்.31' படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளாராம். படத்தில் அவருக்கு ஜெயம் ரவிக்கு இணையான கதாபாத்திரமாம். அதனால்தான் கதையை கேட்ட உடனேயே ஓ.கே. சொல்லி கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டாராம்
"வெந்து தணித்தது காடு 2'
திரைத்துறையில் இழந்த மார்க்கெட்டை "மாநாடு' படத்தின் மூலம் மீட்டெடுத்துள்ள சிம்பு "வெந்து தணிந்தது காடு' மற்றும் "பத்து தல' படங்களில் நடித்து வருகிறார். இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள "வெந்து தணிந்தது காடு' படம் அனைத்து பணிகளும் முடிந்து செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக வுள்ளது. இந்த நிலையில், "வெந்து தணிந்தது 'காடு படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். முதலில் இந்த படத்தை ஒரே பாகமாக எடுக்கத்தான் கௌதம் மேனன் திட்டமிட்டிருந்தாராம். படத்தின் ஃபைனல் அவுட்டை பார்த்த பிறகு அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை வரவே, தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முடிவு செய்துள்ளாராம். முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுப்பதற்காக கூடுதலான காட்சிகளை தற்போது லக்னோவில் படக்குழு படமாக்கி வருகிறதாம். 20 நாட்களுக்குள் அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்பது கௌதம் மேனனின் திட்டமாம்.
மீண்டும் காமெடி!
கடந்த 2010-ஆம் ஆண்டு ஆர்யா -சந்தானம் கூட்டணியில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த படம் "பாஸ் (எ) பாஸ்கரன்'. 10 ஆண்டு களாகியும் இந்த படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் பலரையும் கவர்ந்து வருகிறது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே காமெடி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாகி விட, இனி நடித்தால் ஹீரோதான் என்று ஸ்ட்ரீட்டான கண்டிஷனுடன் தனக்கென ஒரு பாணியை தொடர்கிறார். "பாஸ் (எ) பாஸ்கரன் 2' உருவாகவுள்ள நிலையில் முதல் பாகத்தில் காமெடியனாக நடித்திருந்த சந்தனம் இரண்டாம் பாகத்தில் காமெடியனாக நடிப்பாரா என்று கேள்வி இருந்தது. தனக்கு வந்த காமெடி ரோலை தொடர்ந்து தவிர்த்து வந்த சந்தானம், தன்னு டைய நண்பன் ஆர்யாவுக்காக இந்தப் படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்துள்ளார். இதனை சமீபத்தில் நடந்த விழாவில் அவரே மேடையில் தெரிவித்தார். ராஜேஷ் தற்போது ஜெயம் ரவி படத்தில் கவனம் செலுத்தி வருவதால், அந்த படத்தை முடித்த பிறகு "பாஸ் (எ) பாஸ்கரன் 2' படத்தின் பணியை தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
டானுக்கு அடித்த ஜாக்பாட்!
"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் "ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட் டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் "ஜெயிலர்' படத்தில் கேமியோ ரோலில் மட்டுமே தோன்றவுள்ளாராம், இதனிடையே ரஜினியின் 170-வது படத்தை "டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க வுள்ளாராம். "ஜெயிலர்' படத்திற்கு முன்பே சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்ட ரஜினி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு புக் செய்துள்ளா ராம். மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளதாம். அதற்கான பணியையும் சிபி சக்ரவர்த்தி தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
-அருண்பிரகாஷ்