Advertisment

டூரிங் டாக்கீஸ்! ஜாதி வெறிக்கு சாட்டையடி! அழகிய கண்ணே - திரைப்பார்வை

dd

ட்டிமன்ற உலகின் சூப்பர் ஸ்டாரான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே'. விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குந ரான சீனு ராமசாமியின் உடன்பிறந்த சகோதரர் ஆர்.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகியிருக் கும் இப்படம் இருவருக்கும் கை கொடுத்ததா?

Advertisment

cc

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோ சிவகுமார் சிறந்த எழுத்தாளராகவும், நாடக இயக்கு நராகவும் இருந்துகொண்டு ஊரில் புரட்சிகரமான நாடகங்களை இயக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு சினிமாவில் இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக பிரபு சாலமனிடம் தொடர்ந்து கடிதம் மூலம் வேலை கேட்கிறார். இதற்கிடையே அவரின் எதிர்த்த வீட்டு பிராமண பெண்ணான சஞ்சிதா செட்டி, லியோ மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்

ட்டிமன்ற உலகின் சூப்பர் ஸ்டாரான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே'. விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குந ரான சீனு ராமசாமியின் உடன்பிறந்த சகோதரர் ஆர்.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகியிருக் கும் இப்படம் இருவருக்கும் கை கொடுத்ததா?

Advertisment

cc

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோ சிவகுமார் சிறந்த எழுத்தாளராகவும், நாடக இயக்கு நராகவும் இருந்துகொண்டு ஊரில் புரட்சிகரமான நாடகங்களை இயக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு சினிமாவில் இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக பிரபு சாலமனிடம் தொடர்ந்து கடிதம் மூலம் வேலை கேட்கிறார். இதற்கிடையே அவரின் எதிர்த்த வீட்டு பிராமண பெண்ணான சஞ்சிதா செட்டி, லியோ மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு பெண் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது. அந்த நேரம் பார்த்து லியோவுக்கு பிரபு சாலமனிடம் இருந்து வேலைக்கான அழைப்பு வந்துவிடுகிறது. இதற் காக அவர் சென்னை செல்கிறார். சஞ்சிதா செட்டிக்கும் சென்னை யில் வேலை கிடைக்க அவரும் லியோவை பார்க்கச் சென்று விடுகிறார். வேலைக்குப் போன இடத்தில் வேலைப் பளு அதிகமாவதால் இரண்டு பேருக்கும் இடையே இடை வெளி ஏற்படுகிறது.

அதை சரி செய்ய இருவரும் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. இதையடுத்து ஒரு பக்கம் தன் குழந்தையை எப்படி உடனிருந்து பார்த்துக் கொள்வது என்ற குழப்பம் நிலவ, இன்னொரு பக்கம் பெண் வீட்டார் தரப்பில் லியோவை எப்படியாவது ஆணவக் கொலை செய்ய வேண்டும் என்று சஞ்சிதாவின் மாமா வில்லன் களோடு சேர்ந்து திட்டமிடுகின்றார். இந்தத் திட்டம் நிறைவேறியதா, இல்லையா? இறுதியில் லியோ இயக்குநர் ஆனாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

Advertisment

சீனு ராமசாமியின் படத்தில் வருவது போலவே எதார்த்த வாழ்வியலை மிகவும் எளிமையாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆர்.விஜயகுமார். எந்த ஒரு இடத்திலும் ஏற்ற இறக்கம் இல்லாமல் திருப்புமுனைகள் எதுவும் இல்லாமல் மிகவும் பிளாட்டான திரைக்கதை மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். நம் வீட்டில் அல்லது நம் பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவங்களை அப்படியே கண்முன் நிறுத்துவது போன்ற திரைக்கதை அமைப்பை இப்படம் மூலம் கொடுத்து சாமானிய ரசிகர்களையும் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். நம் வாழ்வில் தினசரி நடக்கும் சம்பவங்களைத் தொகுத்து வழங்கும்படி யான காட்சி அமைப்புகளைக் கொடுத்து, அது நம் வாழ்க்கையுடன் ஒன்றிப் போகும்படியான திரைக்கதை அமைத்திருக்கிறார். ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் தாய் தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டால் குழந்தையின் பராமரிப்பு என்னவாகும் என்ற நடைமுறைச் சிக்கலை இப்படம் காட்டி யிருக்கிறது.

cc

அறிமுக நாயகன் என்ற உணர்வைத் தர மறுக்கும்படியான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் லியோ சிவகுமார். இவரது அழகான சிரிப்பும், சிறப்பான முக பாவனைகளும் அந்த கதா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. நம் பக்கத்து வீட்டுப் பையன் என்ற உணர்வைத் தரும்படி யான நடிப்பை மிக எதார்த்த மாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். நாயகி சஞ்சிதா ஷெட்டிக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். இதுவரை கிளாமர் கதாபாத் திரங்களில் மட்டுமே பெரும் பாலும் நடித்துக் கொண்டிருந்த சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் இயக்குநராகவே நடித்திருக்கும் இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கதைக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி படத்திற்கு வலுக் கூட்டி இருக்கிறார். லியோவின் தாயாக நடித்திருக்கும் டான்ஸர் விஜயா எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு உயர்ஜாதி பெண்ணை திருமணம் செய்யும் சூத்திரன். அவளை திருமணம் செய்ய காத்திருந்த உயர்ஜாதி பிராமணன். தண்ணி அடிக்கிறான். கூட்டுச் சேர்ந்து சூத்திரனை உயர் ஜாதிய வெறியில் எரித்தே கொல்கிறான்.

ஆக மதம் ஓங்கி மதம் பிடித்து அலையும் இந்தியாவில் ஜாதிவெறி என்பது ஊக்குவிக்கப்படும் தேசத்தில் ஜாதி... ஜாதி...ய மீறி எந்த கட்டமைப்பும் கிடையாது. அப்படி ஜாதி இல்லைன்னு சொல்ற வன் நம்மை ஏமாற்றும் போக்கிரிகள்னு அடிச்சு சொல்றாரு டைரக்டர். எப்பொழுதும் பின்னின்று வேலை செய்யும் மேற்படி உயர் ஜாதியினன் முகமூடி கழட்டி ஜாதிவெறியில் அவனே எரித்துக் கொல்வதாக முடிகிறது... டைரக்டரின் துணிச்சலுக்கு மீண்டும் சபாஷ். இதை தயாரிக்க தைரியத்துடன் முன்வந்த தயாரிப்பாள ருக்கும் ராயல் சல்யூட்.

ஜாதியில்லாமல் எதுவும் இல்லைன்னு புதிய கோணத்தில் வெளுத்து வாங்கும் அழகிய கண்ணே... துணிச்சல் முயற்சி!

- சந்தோஷ்

nkn280623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe