அப்படி ஒரு அழைப்பு!

ss

இரண்டாவது பிரசவத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் சமீராரெட்டி... தான் வெற்றிப் படங்களின் நாயகியாக வலம்வந்தபோதே... தனக்கு பட வாய்ப்புகள் அமையாமல் போனதற்கான பரபரப்பான காரணங்களை பட்டியலிட்டு வருகிறார்.

""வாய்ப்புகள் தருவதற்காக பாலியல் ரீதியான அழைப்புகளை விடுத்தனர். நான் உடன்படாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதிலும்... நான் கர்ப்பமாக இருந்தபோதும், பாலியல் ரீதியாக அழைப்பு விடுத்தனர்.

Advertisment

தெலுங்கு திரையுலகில் எனக்கு ஜூனியர் என்.டி.ஆருடன் மட்டுமே நட்பு ரீதியாக பழக்கமிருந்தது. ஆனால்... எனக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கும் இடையே நட்பைத் தாண்டிய தொடர்பு இருப்பதாக தொடர்ந்து தகவல் களைப் பரப்பி வந்தனர். இதனால் மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என் வீட்டிலும் இதனால் பிரச் சினை ஏற்பட் டது. வேறு வழி யில்லாமல் நானே தெலுங்கு சினி மா உலகைவிட்டு விலக நேர்ந்தது.

"வெற்றிப் படங்களில் நடித்து வந்த ஒரு நடிகைக்கு திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது ஏன்?' என இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களும் யோசிக்கவில்லை... மக்களும் கவலைப்படவில்லை.

sss

Advertisment

அப்படி ஒரு தவிப்பு!

""ஹோட்டல் அதிபர் ஒருவர் தன்னை கண்ணாலேயே பலாத்காரம் செய்துவிட்டதாக பகீர் குற்றச்சாட்டைச் சொல்லியுள்ளார் பாலிவுட் நடிகை இஷாகுப்தா.

""டெல்லியில் ஒரு ஹோட்டலுக்கு என் தோழி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் சாப்பிடச் சென்றேன். நானும் என் தோழியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது... அந்த ஹோட்டல் ஓனர் எனக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு... என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரை எச்சரித்தபோதும் பொருட்படுத்தாமல் என்னையே ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டிருந்தார். கண்ணா லேயே என்னை கற்பழித்துக்கொண்டிருந்தார்.

அதன்பிறகு எனது பாதுகாவலர்கள் இருவரையும் கூப்பிட்டு என்னை மறைத்து நிற்கும்படிச் சொன்னேன்.''

அப்படி ஒரு நினைப்பு!

""எனக்கு பதினைந்து கணவர்கள் இருப்பதாக அப்போது உணர்ந்தேன்'' எனச் சொல்லியுள்ளார் அமலாபால்.

""நான் ஆடையில்லாமல் நடித்த "ஆடை' படக் காட்சியை எடுத்தபோது... யூனிட்டிலிருந்த எல்லோருடைய செல்போனும் வாங்கி வைக்கப்பட்டது. லைட்மேன்கள் உட்பட எல்லோரையும் வெளியேற்றினர்.

பதினைந்து ஆண்கள் அந்த இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.

பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள்தான். எனக்கோ பதினைந்து கணவர்கள் இருப்பதாக அப்போது உணர்ந்தேன். அவர்களின் பாதுகாப்பால்தான் என்னால் நிம்மதியாக அந்தக் காட்சியில் நடிக்க முடிந்தது.''

tt

அப்படி ஒரு லயிப்பு!

ஓவியா, நடிகர் ஆரவ்வுடன் ஒண்ணா திரிவதாக செய்திகள் சொன்னாலும்... "திருமண பந்தத்தில் ஆசையில்லை' என்றே சொல்கிறார்.

""பேச்சிலராக இருக்கிறதுதான் சுதந்திரமா, ஜாலியா இருக்கு. அதுலதான் மனசு லயிக்குது. திருமண பந்தத்துல எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் திருமணம் செஞ்சுக்கமாட்டேன்.''

-ஆர்.டி.எ(க்)ஸ்