"காதல் கண் கட்டுதே' படம் மூலம் ஹீரோ யினாக அறிமுக மான அதுல்யா ரவி, தொடர்ந்து "அடுத்த சாட்டை', "நாடோடிகள் 2', "முருங்கைக்காய் சிப்ஸ்' என பல் வேறு படங்களில் நடித்தார். கிளாமரிலும் தாராளம் காட்டிவந்த அவர், தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு "மீட்டர்' என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் ஹரிஷ்கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த "டீசல்' படம் நீண்டகாலமாக உருவாகிவருகிறது. இதனிடையே லைம்லைட்டில் இருந்து காணாமல்போன அதுல்யா ரவி, சோசியல் மீடியாவில் மட்டும் போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ஆக்டிவாக இருந்துவந்தார்.
இந்த நிலையில் சிறிது இடைவெளிக்க

இந்த நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு ஆர்யா -கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துவரும் ‘"மிஸ்டர் எக்ஸ்'’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். "எஃப்.ஐ.ஆர்.' பட இயக்குநர் மனுஆனந்த் இப்படத்தை இயக்க, மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். சரத்குமார் மற்றும் அனகா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடித்துவரும் நிலையில், அஜர்பைஜானில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
மருது கூட்டணி!
"மார்க் ஆண்டனி' தந்த வெற்றியை "ரத்னம்' மூலம் தக்கவைக்க நினைத்தார் விஷால். ஆனால் படம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் சற்று அப்செட்டில் இருக்கும் விஷால், அடுத்து அவர் இயக்கவுள்ள "துப்பறிவாளன்-2' படத்தின் மூலம் சரிக்கட்ட முடிவெடுத் திருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் முத்தையாவுடன் இணைகிறார். ஏற்கனவே "மருது' படத்தில் இருவரும் கூட்டணி வைத்த நிலையில், முத்தையாவின் பாணி, விஷாலுக்கு பிடித்துப்போய்விட்டதால், மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண முடிவெடுத்திருக்கின்றனர். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் முத்தையா ஈடுபட்டு வருகிறார்.
காத்திருக்கும் சிவகார்த்திகேயன்!
விஜய்யை வைத்து ‘"தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'’ படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. படப்பிடிப்பு படுவேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தினை தொடங்குவதற்கு முன்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப் மற்றும் சிவகார்த்திகேயன் என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்திருந்தார் வெங்கட்பிரபு. இதில் கிச்சா சுதீப் படத்தை தொடங்கத் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென விஜய்யிடம் கதை கூறி, அப்படம் கைகூடி வந்ததால் உடனே அந்த படத்தை தொடங்கினார். விஜய் படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யவுள்ளதால், இப்படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் படத்தை தொடங்கத் திட்டம் தீட்டியுள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக் கிறது.
அட்லியின் அறிவிப்பு!
அட்லி, அல்லு அர்ஜுனை இயக்க வுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ரன்வீர் சிங்கை அட்லி இயக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிந்துள்ளது. அதனால் இரண்டு பெரிய ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓ.கே. வாங்கியுள்ள அட்லி, யாருடைய டேட் உடனடியாக இருக்கிறதோ அவர்களுடைய படத்தை முதலில் தொடங்கத் திட்ட மிட்டுள்ளார். இரண்டு படமுமே பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக விரைவில் அதற்கான அறிவிப்பை அட்லி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கவிதாசன் ஜெ.