ரீ-என்ட்ரி!
பாலிவுட்டில் அமீர்கானுக்கு ஜோடியாக ‘"சிதாரே ஜமீன் பர்'’ படத்தில் நடித்தது மூலம் மீண்டும் பிஸியான ஜெனிலியா, கடந்த மாதம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வெளியான ‘"ஜூனியர்'’ படத்தில் முக்கிய மான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழிலும் நடிக்க ஆர்வமுள்ளதாக அவர் தெரிவித்திருந்ததையடுத்து, மீண்டும் தமிழுக்கு அழைத்து வரும் முயற்சியில் கோலிவுட் பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஈடு பட்டனர். தற்போது தனுஷிடமிருந்து அழைப்பு வர, அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார் ஜெனி லியா. பாலிவுட்டிலும் தனுஷுக்கு மார்க்கெட் இருப்பதால் தமிழுக்கும் இந்திக்கும் இந்த படம் சரியாக இருக்கும் என யோசித்தே உடனே ஓ.கே. சொன்னாராம்.
இவரு புதுசு!
வினோத் -விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘"ஜனநாயகன்', படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது. இன் னும் சில பேட்ச் ஒர்க்குகள் இருக்கிறதாம். விஜய்யின் கடைசிப் படமாக பார்க்கப்படும் இப்படத்தில் ஏற்கனவே அவருக்கு விடை கொடுக்கும் வகையில் அவருக்கு நெருக்கமான இயக்குநர்களான அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இவர்கள் பத்திரிகையாளர்களாக வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு நெருக்கமான இன்னும் இரண்டு பேரும் படத்தில் தலை காண்பிக்கிறார்கள். ஒருவர் விஜய்யின் நீண்டகால நம்பிக்கைக்குரிய அவரது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றொருவர் விஜய்யின் சமீபத்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்துள்ள அனிருத்.
கவர்ச்சி ரூட்டு!
சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டிவரும் தமன்னா, தற்போது அந்த ரூட்டிலே தொடர்ந்து பயணிக்க முடிவெடுத்துள்ளார். அதாவது இதுவரை சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் என கவர்ச்சி காட்டிய தமன்னா, இப்போது கவர்ச்சியுடன் கூடிய முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தியில் ராஜ்குமார் ராவ், கைனஸ் மோடிவாலா ஆகியோர் நடிப்பில் 2011ஆம் அண்டு வெளியாகி ஹிட்டான படம் ‘"ராகிணி எம்.எம்.எஸ். அடல்ட் ஹாரர் ஜானரில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சன்னிலியோன் நடித்திருந்தார். இந்த படமும் ஹிட்டடிக்க தற்போது மூன்றாம் பாகம் உருவாகிறது. இதில்தான் தமன்னா, நடிக்கவுள்ளார். இப்படம் முந்தைய படங்களைப்போல் அடல்ட் ஹாரராக இல்லாமல் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகிறது. படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. சன்னி லியோன் நடித்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிப்பதால், தனது கவர்ச்சி ரூட்டுக்கு இது மேலும் வலுச்சேர்க்கும் என நம்புகிறாராம் தமன்னா.
நியூ என்ட்ரி!
ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கு ஏகப்பட்ட இயக்குநர் களை அணுகிவந்தார். இதில் அ.வினோத், எஸ்.யு. அருண்குமார், நித்திலன் சாமிநாதம், சிறுத்தை சிவா உள்ளிட்ட பெயர்களும் இருந்தன. தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயே பெயரும் இருந்தது. தற்போது மற்றொரு தெலுங்கு இயக்குநர் நாக்அஷ்வின் பெயரும் அடிபடுகிறது. சமீபத்தில் ரஜினியை சந்தித்தவர், ஒரு ஒன்லைனை சொல்லி யுள்ளார். ரஜினியும் அதைக் கேட்டு பாராட்டு தெரிவித்து, முழுக்கதையாக டெவலப் செய்யச் சொல்லியுள்ளார். இவர் கீர்த்தி சுரேஷை வைத்து தேசிய விருது வென்ற ‘"மகாநதி'’(தமிழில் -நடிகையர் திலகம்) படத்தை இயக்கியவர். கடைசியாக அமிதாப் பச்சன், பிரபாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்த ‘"கல்கி 2898 ஏடி'’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் கமல் வில்லனாக... சில காட்சிகளில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
-கவிதாசன் ஜெ.