ஆக்ஷன் ஹீரோயின்!
சிம்பு, ரவிமோகன் என பிரபல ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிதி அகர்வால். உதயநிதியின் "கலகத் தலைவன்' படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து அண்மையில் வெளியான பவன்கல்யாணின் ‘"ஹரி ஹர வீரமல்லு'’ படம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். ஆனால் படம் மோசமான விமர்சனங்களைச் சந்தித்ததால் கடும் அப்செட். இதனால் அடுத்து தான் பிரபாஸுடன் நடித்துள்ள ‘"தி ராஜா சாப்'’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். படம் இந்தாண்டு டிசம்பர் 5ல் வெளியாகிறது. இப்போது தனக்குத் தானே தடை போட்டுள்ளார். அதாவது "இனி வரும் காலங்களில் கவர்ச்சிக்கும் லிப் லாக் காட்சிகளுக்கும் நோ, கவர்ச்சி காட்டாமலே ஜெயிக்க முடியும்' என நம்பிக்கையுடன் சொல்லும் அவர், "ஆக்ஷன் ஹீரோயினாக வலம் வருவதே தனது இலக்கு' என்றும் சொல்கிறார்.
மலையாள நம்பிக்கை!
தனது படங்களைவிட ஃபோட்டோ ஷூட்டால் ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டும் எனப் போராடி வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனக் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துவந்தவர், சமீபமாக லைம்லைட்டுக்குள் வராமலே இருந்துவந்தார்.
தற்போது "பெங்களூர் ஹை'’(Bangalore High) என்னும் மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். சர்ச்சையில் சிக்கிய ஷைன் டாம்சாக்கோ படத்தின் நாயகனாக நடிக்கிறார். இப்படம் தனக்கு முக்கிய படமாக அமையும் எனக் கருதும் ஐஸ் வர்யா மேனன், தற்போது தன் முழு கவனத்தையும் மலையாள படங்களில் செலுத்துவதிலேயே முனைப்புடன் இருக்கிறாராம்.
கிறிஸ்துமஸ் வெளியீடு!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன்சஞ்சய், சந்தீப்கிஷனை வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதோடு லைகாவுடன் சேர்ந்து ‘ஜே.எஸ்.ஜே மீடியா என்டர்டெயின் மென்ட்’ என்ற பேனரில் தயாரித்தும் வருகிறார். படத்திற்கான பாதிக்கும் மேலான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சமீபத்தில் பாங்காக்கில் ஒரு ஷெட்யூல் முடிந்திருக்கிறது. அடுத்து சேலத்தில் சில நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சென்னையில் அடுத்த ஷெட்யூல் தொடங்கு கிறார். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இந்த ஷெட்யூல் தொடங்குகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் படத்தின் டைட்டில் டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடும் பிளானில் படக்குழு இருக்கிறது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்து படத்தை வெளியிடும் நோக்கில் பணிகளை விரைந்து நடத்தி வருகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ரக்கட் பாய்!
90-களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புது படத்தில் நடிக்க கமிட்டாகி யுள்ளார். அறிமுக இயக்குநர் மரியாராஜா இளஞ் செழியன் இயக்கவுள்ள இப்படத் தில் நாயகியாக கவுரிபிரியா நடிக்க பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக் கிறது. இதில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். லேட்டஸ்ட் தகவலின்படி வில்லன் வேடத்தில் அப்பாஸ் நடிக்கவுள் ளாராம். சாக்லேட் பாய் லுக்கில் இருந்து இதற்காக நீள முடி, தாடி என ரக்கட் பாய் லுக்கிற்கு மாறியுள் ளாராம் அப்பாஸ். இப் படத்தை தவிர்த்து புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க வுள்ளாராம்.
-கவிதாசன் ஜெ.