மைல் கல்!

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, தனக்கென ஒரு இமேஜை உருவாக்கியுள்ள விஷ்ணு விஷால்,  25வது படத்தில் நடிக்கவுள் ளார். இப்படத்தை லோகேஷ் அஜில்ஸ் இயக்கவுள்ளார். இவர் இந்தாண்டு சீரியல் கில்லர் ஜானரில் வெளியான ‘"லெவன்'’ படத்தை இயக்கியவர். இப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறு வனம் தயாரிக்கிறது. இப் படமும் விஷ்ணு விஷா லுக்கு கைகொடுத்த சஸ்பென்ஸ் த்ரில் லர் ஜானரில் உருவாகிறது. 25வது படம் ஒரு மைல் கல் என்பதால், இதற்காக தனது கூடுதல் உழைப்பை விஷ்ணு விஷால் செலுத்த விருக்கிறாராம். சமீபகாலமாக பிரபல நாயகர்களாக இருக்கும் விஜய்சேதுபதி, விஷால், ரவிமோகன், கார்த்தி, ஜீவா உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் 25வது படங்களும் படுதோல்வியடைந்ததால் இந்த லிஸ்டில் இணைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் விஷ்ணு விஷால்.

Advertisment

குத்தாட்டம்!

tt1

"கூலி' படத்தில் ‘மோனிகா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே அப்பாடலுக் காக பெரிய தொகையை சம்பளமாக பெற்றார். தற்போதும் அட்லீ -அல்லு அர்ஜூன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கமிட்டாகியுள்ளார். இதற்காக கதாநாயகிக்கு இணையான  சம்பளம் கேட்டுள்ளார். படக்குழுவும் அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் என மூன்று நாயகிகள் இருக்கும் நிலையில் பூஜா ஹெக்டேவும் இருந்தால் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என படக்குழு நினைக்கிறதாம்.

Advertisment

கூடுதல் மகிழ்ச்சி!

கடந்த இரண்டு வருடங் களாக தமிழில் தலை காண் பிக்காமல் இருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது முழு கவனத்தையும் செலுத்த முடிவெடுத்து அதில் தீவிரமாக இறங்கியுள்ளார். கடந்த மே மாதம் அவர் நடித்த ‘"கலியுகம்'’ படம் வெளியானது. இதையடுத்து ‘"தி கேம்'’ என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது. இதன் மூலம் வெப்சீரிஸில் அவர் காலடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘"ப்ரோ கோட்'’ படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்து வரு கிறார்.  அவர் நடிப்பில் நீண்ட காலமாக உரு வாகி வந்த "ஆர் யன்' படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வருவதால்  கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார். தமிழில் கேப் விட்டதால் அதை பூர்த்தி செய்து முன்னணி நடிகை அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாம்.

தீவிர ஆலோசனை!

தொட்டதெல்லாம் வெற்றி என பிரதீப் ரங்கநாதனின் இமேஜ் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. தீபாவளி வெளியீடாக சமீபத்தில் வெளியான ‘"டியூட்'’ படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்ததால், அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம்காட்டி வருகிறார் கள். இதில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் முன்கூட்டியே முந்திய நிலையில்... அந்நிறுவனம் தயாரிப்பில் டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் முன்னதாகவே பேச்சு வார்த்தை அடிப்படையில் கமிட்டாகியிருந்தார். ஆனால் இவரது அடுத்தடுத்த கமிட்மெண்டு களால் படம் தள்ளிப் போனது. இந்த நிலையில் "டியூட்' பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உடனடியாக ஒரு படம் நம்ம பேனரில் பண்ணவேண்டும் என்றும் அதற்காக எவ்ளோ சம்பளம் வேண்டுமானா லும் தரத் தயாராகவுள்ளதாகவும் ஆஃபர் கொடுத்துள்ளனர். இவர் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவான ‘"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'’ டிசம்பரில் வெளியாகிறது. அதன் ஹிட்டைப் பொறுத்து அடுத்த படத்தை முடிவு செய்யலாம் என பிரதீப் ரங்கநாதன் திட்டமிட்டுள்ளாராம்!

Advertisment

-கவிதாசன் ஜெ.