Advertisment

டூரிங் டாக்கீஸ்! 28.06.25

tt


அடுத்த அறிவிப்பு!

அட்லீ -அல்லு அர்ஜூன் படம் சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவா கிறது. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப் பட்டது. இப்போது மும்பையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஷெட்யூலில் பல்வேறு முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுகிறது. மொத்தம் மூன்று மாதம், கேப் விடாமல் ஒரே ஷெட்யூல் திட்டமிடப் பட்டுள்ளது. இதை முடித்துவிட்டு படக்குழு அமெரிக்கா பறக்கிறது. அங்கு அல்லு அர்ஜூன் சம்பந்தப்பட்ட வி.எப்.எக்ஸ். காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. எல்லாத்தையும் பக்காவாக பிளான் போட்டுள்ள அட்லீ படத்தில் கமிட்டான பிரபலங்களை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளார். ஒவ்வொன்றாக குறுகிய இடைவெளி யில் அதை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் முன்னதாகவே கமிட்டாகியிருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அறிவிப்பை இந்தமாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே லுக் டெஸ்ட் எடுக்கப்பட்ட மிருணாள் தாக்கூர்தான் அடுத்த அறிவிப்பாக இருக்குமென திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜூன், தீபிகா படுகோனே அறிவிப்பைப்போல் ஒரு புரொமோ வீடியோவுடன் மிருணாள் தாக்கூர் அறிவிப்பையும் வெளியிடும் ப்ளானில் இருக்கிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக ஜான்வி கபூர் அறிவிப்பு இருக்கும் எனவும் சொல்கிறார்கள்.

Advertisment

எகிறும் எதிர்பார்ப்பு!

"ஜெயிலர் 2' படத்தில் நடித்து வரும் ரஜினி, தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களி டம் கதை கேட்டு வந்தார். அந்த வகையில் அ.வினோத் மற்றும் எஸ்.யு.அருண் குமார் இருவரிடமும் கதை கேட்டார். அதற்கு இப்போது ரஜினியிடமிருந்து இருவருக்கும் பதில் கிடைத்துள்ளது. எஸ்.யு.அருண் குமாருக்கு ரெட் சிக்னலும் வினோத்துக்கு க்ரீன் சிக்னலும் சென்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் வினோத், ‘"ஜனநாயகன்'’ படப் பணிகளை முடித்துவிட்டு ரஜினி பட ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்தவுள்ளார். தொடர்ந்து அஜித், விஜய் என டாப் நடிகர்களுடன் பயணிக்கும் வினோத் அடுத்து ரஜினியை இயக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

tt1

ரம்யா நம்பிக்கை!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய்.ஜி.மகேந் திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "சாருகேசி'’. அருண் ஆர். இந்தப் படத்தை தயாரிக்க, தேவா இசையமைத்துள் ளார். இந்தப் படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தோன்றுகிறார் ரம்யா பாண்டியன். படம் குறித்து பேசிய அவர், “"இந்தப் படம் பார்த்துட்டு அனைவரும் உறவுகளை மதிப்பார்கள். முதல்நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சுரேஷ்கிருஷ்ணா சார் என்னை பாராட்டினார், அது எனக்கு மிகவும் ஊக்கத்தை கொடுத்தது. ரஜினி சாரை இயக்கிய ஒருவர், என்னை வைத்து இயக்குவது எனக்கு பெருமிதமாக இருந்தது'' என்றவர், இந்தப் படம் தனக்கு ஒரு நல்ல பாதையை அமைத்துக் கொடுக்கும் என்றும் நம்புகிறார்.

சூப்பர் கணக்கு!

"கங்குவா' பட தோல்வியையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான "ரெட்ரோ' அவருக்கு ஆறுதல் வெற்றியைத் தந்தது. இதனால் கொஞ்சம் உற்சாகத் தோடு காணப்படுகிறார். இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘"கருப்பு'’ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் என நம்புகிறார். இதனையடுத்து அவர் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்துவருகிறார். இப்படம் விமர்சன ரீதியாக தனக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுக்கும் எனவும் நம்பு கிறார். இந்த படத்தை முடித்து விட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்த சூர்யா சில காரணங்களால் அப்படம் டிராப் ஆக... தற்போது மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். இது தொடர்பாக சமீபகாலமாக பேச்சுவார்த்தை நடந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. படம் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அமையும் என நம்புகிறார். ஃபேமிலி ஆடியன்ஸ், விமர்சகர்கள், ரசிகர்கள் என ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பார்வையாளர்களை கவர்ந்து, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதும் சூர்யாவின் கணக்காம்          

 -கவிதாசன் ஜெ.

nkn280625
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe