Advertisment

டூரிங் டாக்கீஸ்! 28.02.26

tt


சமந்தாவின் அதிரடி!

tt1

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சிக்கிறார் சமந்தா. கைவசம் ஒரு இந்தி வெப் தொடர் மற்றும் ஒரு தெலுங்கு படத்தை வைத்திருக்கும் அவர், சமூக வலை தளங்களில் தனக்கு வரும் கமெண்டுகள் குறித்து பேசியுள்ளவர், “பாராட்டுகள் என்னை ஒருபோதும் அசைக்காது... அதேபோல்தான் ட்ரோல்களும். ஆனால் அந்த நெகட்டிவிட்டி என்னு டைய வீட்டிற்குள் வரும் அளவுக்கு இருந்தால் அவரை நான் ப்ளாக் செய்துவிடுவேன். எனது இடத்தை சுத்தமாக வைத்திருப்பது போலவே, என்னுடைய பேஜையும் சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறேன். "நான் ப்ளாக் செய்வதால் நீங்கள் என்னை காயப்படுத்திவிட்டீர்கள் என்று அர்த்தமில்லை. மாறாக உங்களுக்


சமந்தாவின் அதிரடி!

tt1

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சிக்கிறார் சமந்தா. கைவசம் ஒரு இந்தி வெப் தொடர் மற்றும் ஒரு தெலுங்கு படத்தை வைத்திருக்கும் அவர், சமூக வலை தளங்களில் தனக்கு வரும் கமெண்டுகள் குறித்து பேசியுள்ளவர், “பாராட்டுகள் என்னை ஒருபோதும் அசைக்காது... அதேபோல்தான் ட்ரோல்களும். ஆனால் அந்த நெகட்டிவிட்டி என்னு டைய வீட்டிற்குள் வரும் அளவுக்கு இருந்தால் அவரை நான் ப்ளாக் செய்துவிடுவேன். எனது இடத்தை சுத்தமாக வைத்திருப்பது போலவே, என்னுடைய பேஜையும் சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறேன். "நான் ப்ளாக் செய்வதால் நீங்கள் என்னை காயப்படுத்திவிட்டீர்கள் என்று அர்த்தமில்லை. மாறாக உங்களுக்கு என் பக்கத்தில் வரவேற்பு இல்லை என்று அர்த்தம்'’என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 

Advertisment

சிம்பு ஓ.கே!

tt2

"டியூட்'’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இன்னும் அடுத்த படத்தை கமிட் செய்யாமல் இருக்கிறார். ஆனால் டியூட் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட்டடித்ததால் அவரது அடுத்த படத்தையும் முதல்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமே சிம்புவிடம் கீர்த்தீஸ்வரனை கதை சொல்ல அனுப்பியுள்ளது. கதையை கேட்ட சிம்பு, க்ரீன் சிக்னல் கொடுத் திருக்கிறார். ஆனால் அடுத்தடுத்து அவருக்கு தேசிங் பெரியசாமி, அஷ்வத் மாரிமுத்து படங்கள் இருப்பதால், அதை அட்ஜஸ்ட் செய்து தேதிகள் ஒதுக்குவதாக சொல்லியிருக்கிறாராம். இப்படத்திற்கு இசை சாய் அபயங்கர்.

Advertisment

பாலிவுட் என்ட்ரி!

நடிகை அனுபமா பரமேஸ்வரன், இதுவரை தென்னிந்திய அளவிலே கவனம் செலுத்தி வந்தவர், அடுத்தகட்டமாக பாலிவுட்டுக்கு செல்கிறார். அங்கு இயக்குநர் ஷான் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு வெளியான ‘"ஃப்ரீடம் அட் மிட்நைட்'’ எனும் குறும்படத்தில் நடித்திருந்தார். அந்த நட்பின் காரணமாகவும் அவரது புதுப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ‘"ரஸ்டம்', "டாய்லெட்', "பேட் மேன்', ‘"பரி'’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரேர்னா அரோரா தயாரிக்கிறார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகிறதாம்.

ஹீரோயின் மாற்றம்!

"தக் லைஃப்'’ படத்தை தொடர்ந்து மீண்டும் இளைஞர்களை கவரும் வகையில் ஒரு காதல் கதையைப் படமாக்க முயற்சியெடுத் தார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக சிம்புவிடம் முதலில் ஓ.கே. வாங்கியிருந்தார். ஆனால் அது சில காரணங்களால் நடைபெறாமல் போக பின்பு துருவ்விக்ரமை அணுகினார். அதுவும் சில காரணங்களால் தள்ளிப்போக தற்போது விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரொமாண்டிக் ட்ராமா ஜானரில் இப்படம் உருவாகிறது. நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

மீண்டும் நாயகி! 

"லப்பர் பந்து'’ மூலம் பலரது கவனத்தை ஈர்த்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் "டிசி'’படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத் தவிர்த்து நாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அதாவது கவினின் 10வது படத்தில் அவருக்கு ஜோடியாக கிராமத்துப் பெண்ணாக நடிக்கவுள்ளார். இப்படத்தை "தண்டட்டி'’ பட இயக்குநர் ராம் சங்கையா இயக்க, ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டாலும், நாயகி இறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது நாயகி யார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். "லப்பர் பந்து'க்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கவுள்ளார் சஞ்சனா.

nkn280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe