மீண்டும் தெலுங்கு!
தெலுங்கில் சரசரவென முன்னேறிய நடிகை க்ரித்தி ஷெட்டி, தமிழில் சரிவை சந்தித்து வருகிறார். இவர் கமிட்டான மூன்று படங்களும் தொடர் பிரச் சனையில் சிக்கிவருகிறது. இதில் கார்த்தியுடன் நடித்த "வா வாத்தியார்' மட்டும் பல்வேறு சிக்கல்களை தாண்டி கடந்த பொங்கலுக்கு வெளியான போதும், போதிய வரவேற்பை பெறவில்லை. மீதமுள்ள இரண்டு படங்களில் ‘"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'’ தயாராகியும், ரிலீஸுக்கு தள்ளிப்போகிறது. இன்னொரு படமான ‘"ஜீனி'’ எந்த நிலையி-ருக்கிறது எனத் தெரிய வில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பியுள்ளார் க்ரித்தி ஷெட்டி. அங்கு சிரஞ்சீவி நடிக்கும் புது படத்தில் மகள் கதாபாத்தி ரத்திற்கு நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். தனது இமேஜ் தொடர்ந்து சரிந்து வருவதால் அதை மீட்டெடுக்கவே இந்த முடிவாம். நாயகியாக இல்லாமல் கதையில் முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திற்கு இனி முன்னுரிமை கொடுக்க முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே சிரஞ்சீவியை வைத்து ‘"வால்டர் வீரய்யா'’படத்தை இயக்கிய பாபி கொல்லி இப்படத்தை இயக்குகிறார். இசைக்காக ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
வாரிசு நடிகர்!
பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவாவின் மகன் ரிஷிராகவேந்திரா தேவா. இவரை கடந்த ஆண்டு சென்னையில் தனது தலைமையில் நடைபெற்ற நேரடி நடன நிகழ்ச்சியில் பிரபுதேவா அறிமுகப்படுத்தி யிருந்தார். அதில் தந்தையோடு "பேட்ட ராப்'’பாடலுக்கு இவர் நடனமாடியிருந்தார். இது பலரது கவனத்தை பெற்ற நிலையில், அது தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இவர் தற்போது சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தந்தையைப்போல் இவரும் நடனத்தில் தீவிர ஈடுபாட்டோடு இருப்பதால், அதற்கு இடமளிக்கும் வகையில் படத்தில் இரண்டு பாடல்கள் இருப்பதாக சொல்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனால் தந்தையிடம் டிப்ஸும் பயிற்சியும் எடுத்து வருகிறார் ரிஷிராகவேந்திரா தேவா.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/27/tt1-2026-01-27-13-17-49.jpg)
குவியும் வாய்ப்பு!
தனது செகண்ட் இன்னிங்ஸில் ஏராளமான படங்களில் நடித்துவந்த சிம்ரன் இதுவரை முக்கிய கதாபாத்திரம் மற்றும் சிறப்பு தோற்றத்திலே அதிகம் நடித்துவருகிறார். ஆனால் சமீபத்தில் நடித்த ‘"டூரிஸ்ட் ஃபேமிலி'’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியால் அவருக்கு தொடர்ந்து முதன்மை கதாபாத்திரம் வந்து குவிகிறது. ஆனால் அதை அளவோடு தேர்ந்தெடுத்து சம்மதம் தெரிவிக்கிறார் சிம்ரன். இதனிடையே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார் சிம்ரன். கவின் - பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இவர் சம்பந்தமான படப்பிடிப்பு உடனடியாக தொடங்கி சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வானத்தில் ஃபைட்!
கார்த்தி -பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் பல மாதங்களாக உருவாகிவரும் படம் "சர்தார் 2'. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதால் இந்தியாவைத் தாண்டி சீனா, கம்போடியா, அஜர்பைஜன், பாங்காங் என பல்வேறு நாடுகளில் படமாக்கி வருகின்றனர். படத்தின் முழு படப்பிடிப்பும் கடந்த ஆண்டு ஜூனில் நிறைவு பெற்றதாக அறிவிக் கப்பட்ட நிலையில், அது இன்னும் முடியவில்லை என ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி யுள்ளது. சமீபத்தில் ஒரு ஆக்ஷன் காட்சியை படக்குழு படமாக்கியுள்ளதாம். அதாவது, நடுவானில் விமானத்திற்குள் சண்டை நடப்பது போலவும், அதில் கார்த்தி மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிக்காக இரண்டுபேரும் கடுமையான உடற் பயிற்சியும், நிறைய முறை ரிகர்சல் எடுத்தும் நடித்துள் ளனராம். இது படத்தின் சிறப்பு பகுதிகளில் ஒன்றாக இருக்கும் எனச் சொல் கிறார்கள். இதனால் படம் இன்னும் முழுமையாக நிறை வடையவில்லை எனத் தெரி யும் சூழலில், இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/tt-2026-01-27-13-17-39.jpg)