தள்ளிப் போகாதே!

தொடர் வெற்றி மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய பிரதீப் ரங்கநாதன் தற்போது சற்று கலக்கத்தில் இருக்கிறார். காரணம் அவர் நடிப் பில் உருவாகியுள்ள ‘"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'’ படம் தொடர்ந்து ரிலீஸுக்கு தயாராகி தள்ளிப் போய்க்கொண்டே வருகிறது. இதனால் இந்த வருடம் ‘"டிராகன்', ‘"டியூட்'’படங்களைத் தொடர்ந்து மூன்றாவது ஹாட்ரிக் வெற்றி மிஸ்ஸாகிவிட்டது என கவலைப்படுகிறார். இருப்பினும் தனது அடுத்த படத்தை தொடங்க தயாராகிவிட்டார். இதை இவரே இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை அவரது விருப்ப தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதில் நாயகியாக நடிக்க பிரபல நடிகை மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சயின்ஸ் பிக்சன் ஜானரில் படம் உருவாகிறது. இந்தப் படமும் அவரது முந்தைய படங்கள் போல் ஜென் -சி தலைமுறையை குறிவைத்து எடுக்கப்படுகிறது.

Advertisment

கலகலப்பு!

குடும்பப் படங்களுக்கு பெயர்போன பாண்டி ராஜ், "தலைவன் தலைவி'’ படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இடிக்க, பின்பு ஹரிஷ்கல்யாணிடம் சென்றார். அவரும் சில காரணங்களால் விலக, தற்போது வேறொரு கதையுடன் தனது அடுத்த படத்தை சத்தமில்லாமல் துவங்கியுள்ளார். இதில் ஜெயராம் நாயகனாகவும் ஊர்வசி நாயகியாகவும் நடிக்கிறார்கள். குறுகிய கால இடைவெளியில் குறைவான பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படமும் அவரது ஸ்ட்ராங் ஏரியாவான கலகலப்பான குடும்ப பின்னணி யில் உருவாகிறது. இப்படத்தை முடித்துவிட்டுத்தான் விஜய்சேதுபதி நடிக்கவிருந்த படத்தை பாண்டிராஜ் தொடங்கவிருக்கிறார்.

Advertisment

ஆறு மாதங்கள்!

தென்னிந்திய அளவில் தற்போது பிஸியான நடிகையாக இருக்கிறார் கயாடு லோஹர். தமிழில் இரண்டு படம், மலையாளத் தில் இரண்டு படம், தெலுங்கில் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். இதில் தெலுங்கில் புதிதாக ஒரு படம் இணைந்துள்ளது. நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகிவரும் "தி பாரடைஸ்'’படத்தில் நடிக்கிறார். இதன்மூலம் தெலுங் கில் டாப் நடிகரான நானியுடன் முதல்முறையாக நடிக்கிறார். இவரது ரோலுக்கு முதலில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கமிட்டாகவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலக, தற்போது இந்த வாய்ப்பு கயாடு லோஹருக்கு சென்றுள்ளது. மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்ததால் அவரது கால்ஷீட்டிற்காக காத்திருந்து கமிட் செய்துள்ளது படக்குழு. கிட்டத்தட்ட கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது குறிப்பிடத் தக்கது. இப்படத்தில் கயாடு லோஹர் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

tt1

ஆக்ஷன் காமெடி!

காமெடி டூ ஹீரோ என பயணித்துவரும் சதீஷ் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் ஒரு திருப்புமுனை வெற்றிக்காகக் காத்திருக்கிறார். அதை நிறைவேற்றும் முனைப்பில் தீவிரமாக வேலை பார்த்துவரும் அவர், தற்போது புதிதாக ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத் திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்தை "கூகுள் குட்டப்பா'’பட இயக்குநர் குரு சரவணன் இயக்குகிறார். நாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கிறார். காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்து இப்படம் உருவாகும் நிலையில் சதீஷுக்கு காமெடியோடு சேர்த்து ஆக்ஷனும் இருக்கிறது. இதன் மூலம் முதல்முறையாக ஆக்ஷனுக்கு மாறும் அவர், இந்தப் படம், தான் எதிர்பார்த்த திருப்புமுனை வெற்றியைக் கொடுக்கும் என நம்புகிறார். அந்த நம்பிக் கையுடனே மிகுந்த ஆர் வத்துடன் படப்பிடிப்பில் நடித்துவருகிறார்.

Advertisment

-கவிதாசன் ஜெ.