Advertisment

டூரிங் டாக்கீஸ்! 270925

tt


கேமியோ கம்பேக்!

காமெடி பக்கம் மீண்டும் தலை காண்பிக்க நினைக்கும் சந்தானம், அப்படி கமிட்டான படங்கள் எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் தனக்கு எதிராக அமைந்ததால் சற்று வருத்தத்தில் இருக்கிறார். முதலில் அஜித் -விக்னேஷ் சிவன் காம்போவில் உருவாகவிருந்த படத்தில் கம்பேக் கொடுக்க நினைத்தார். படம் டிராப் ஆனது. பின்பு சிம்பு, "பார்க்கிங்' பட டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மீண்டும் வரநினைத்தார். படம் தள்ளிப்போய்விட்டது. இதனால் தனக்கு ராசியில்லையோ என நினைத்த சந்தானம், சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இதனிடையே சந்தானத்தின் ராசியான டைரக்டரான ராஜேஷ் எம். மீண்டும் ‘"சிவா மனசுல சக்தி'’ பட கூட்டணியை வைத்து ஒரு படம் எடுப்பதாக அறிவித்தார். இதில் ஜீவா நடிப்பதாகவு


கேமியோ கம்பேக்!

காமெடி பக்கம் மீண்டும் தலை காண்பிக்க நினைக்கும் சந்தானம், அப்படி கமிட்டான படங்கள் எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் தனக்கு எதிராக அமைந்ததால் சற்று வருத்தத்தில் இருக்கிறார். முதலில் அஜித் -விக்னேஷ் சிவன் காம்போவில் உருவாகவிருந்த படத்தில் கம்பேக் கொடுக்க நினைத்தார். படம் டிராப் ஆனது. பின்பு சிம்பு, "பார்க்கிங்' பட டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மீண்டும் வரநினைத்தார். படம் தள்ளிப்போய்விட்டது. இதனால் தனக்கு ராசியில்லையோ என நினைத்த சந்தானம், சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இதனிடையே சந்தானத்தின் ராசியான டைரக்டரான ராஜேஷ் எம். மீண்டும் ‘"சிவா மனசுல சக்தி'’ பட கூட்டணியை வைத்து ஒரு படம் எடுப்பதாக அறிவித்தார். இதில் ஜீவா நடிப்பதாகவும் யுவன் இசையமைப்பதாகவும் உறுதிசெய்த அவர், சந்தானத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இப்படம் "சிவா மனசுல சக்தி பார்ட் 2' படமாக இல்லாமல் புதுக்கதையாக உருவாவதால், சந்தானத்தை வரவழைக்க முடியாத அவர், அட்லீஸ்ட் கேமியோ ரோலிலாவது நடிக்க வைக்கலாம் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சந்தானமும் தனது காமெடி கம்பேக்கிற்கு இது அச்சாரமாக அமையும் என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

Advertisment

தூக்கிட்டாங்க!

அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த "கல்கி 2898 ஏ.டி.'’ படம், பாக்ஸ்ஆபீஸில் 1000 கோடி ரூபாயைக் கடந்ததால், அதன் இரண்டாம் பாகத்தை முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாக எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த பிரமாண்டத்துக்கு தகுதியான அர்ப்பணிப்பு வேண்டும் என தீபிகாபடுகோனை சமீபத்தில் தூக்கினர். இதற்கு காரணம் தீபிகாபடுகோன் கேட்ட குறைவான பணி நேரம், 25 சதவீத சம்பள உயர்வு மற்றும் தன்னுடன் வரும் டீமிற்கு தங்குமிடம் எனும் கோரிக்கை. இதனால் தற்போது தீபிகாவுக்குப் பதில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் தீரயோசித்து வருகின்றனர். இப்போ தைக்கு அவர்கள் லிஸ்டில் பூஜா ஹெக்டே, ஆலியாபட், பிரியங்கா சோப்ரா, க்ரித்தி சனோன் மற்றும் அனுஷ்கா ஆகிய நடிகைகள் இருக்கிறார்கள். 

Advertisment

tt1

தளபதி கச்சேரி!

விஜய் தற்போது தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் ‘"ஜனநாயகன்'’ படம் தொடர்பான தகவல்கள் அதிகம் வெளிவருவ தில்லை. ஆனால் தற்போது படத் தின் முதல் பாடல் குறித்தான தகவல் வெளி யாகியுள்ளது. வரும் தீபா வளிக்கு இப்பாடல் வெளியாகிறது. இதில் சிறப்பு அம்சமாக விஜய்யே இப்பாடலை பாடி யுள்ளார். அவரது ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையில் குத்துப்பாடலாக இப் பாடல் அமைந்துள்ளது. மேலும் தியேட்டரில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் அனிருத் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எஃபர்ட் போட்டே பாடலை உருவாக்கியுள்ளார். இப்பாடல் ‘"தளபதி கச்சேரி'’ எனும் பெயரில் வெளியாகவுள்ளதாகவும் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ பாடலில் விஜய்யுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் விருந்திற்காக காத்திருக்கிறார்கள்.

பாலிவுட் என்ட்ரி!

கணீர்க்குரலால் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கிய அர்ஜுன்தாஸ், அடுத்து பாலிவுட் செல்லவுள்ளார். அங்கு ரன்வீர்சிங் நாயகனாக நடிக்கும் ‘"டான் 3'’ படத்தில் வில்லனாக நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். இவர்தான் மெயின் வில்லனாக நடிக்கிறார். முன்னதாக இந்த ரோலுக்கு "12த் ஃபெயில்' பட நடிகர் விக்ராத் மாஸியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தற்போது அர்ஜூன்தாஸ் நடிக்கிறார். இவருக்கு இந்த பட வாய்ப்பு அஜித்துடன் "குட் பேட் அக்லி',’ பவன் கல்யாணுடன் ‘"ஓஜி'’ படங்களில் வில்ல         னாக நடித்துள்ளதால் கிடைத் துள்ளதாம். அவருடைய கணீர்க்குரல் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கும் என படக்குழுவினர் நம்புகின்றனர். கோலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் அர்ஜுன் தாஸ் கால் பதிக்க வுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி யில் இருக்கிறார். 

-கவிதாசன் ஜெ.

nkn270925
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe