சவால் பிடிக்கும்!
பாலிவுட்டில் கவர்ச்சி நடனத்துக்கு பெயர்போனவர் நோரா ஃபதேகி. தமிழில் "பாகுபலி' படத்தில் ‘"மனோகரி'’ மற்றும் "தோழா' படத்தில் ‘"டோர் நம்பர்'’ பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘"காஞ்சனா 4'’ படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக என்ட்ரி கொடுக்கிறார். இதில் முக்கியமான ரோலில் நடிக்கும் அவர், தனது கதாபாத்திரத்திற்காகத் தமிழ் கற்றுவருகிறார். இது தொடர்பாக கூறும் அவர், "இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது என்பது எப்போதுமே சவாலானது, ஆனால் சவால்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதற்கு முன்பு இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை கற்று, அந்தந்த படங்களுக்கு ஏற்றவாறு மாறியிருக்கிறேன். இப்போது தமிழுக்கு ஏற்றவாறு மாறியுள்ளேன்' எனச் சொல்கிறார். இவர் கனடா நாட்டை சேர்ந்த நடனக் கலைஞர் மற்றும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்பை நிரப்பு!
தெலுங்கில் ஹிட் நடிகை என்ற பெயர் பெற்று விட்டதால் அதற்கு கொஞ்சம் கேப் விட்டுவிட்டு தற்போது ஃபுல் போகஸையும் தமிழ் மற்றும் இந்தியில் செலுத்திவருகிறார் பூஜா ஹெக்டே. இரண்டு மொழிகளி லும் தலா ஒரு படத்தை கைவசம் வைத்திருக்கும் அவர், தற்போது மீண்டும் தெலுங்குத் திரையுலகிற்குத் திரும்பி யுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் ரவி நெலகுடிட்டி இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படம் ஒன்று உருவாகும் நிலையில் அதில்தான் நாயகியாக பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளார். இப்படம் சமகாலத்துக் காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் சூழலில் இதுவரை அவர் பெரிதாக நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. தெலுங்கில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் துல்கர் சல்மானுடன் நடிப்பதால், தான் விட்ட கொஞ்ச கேப்பை சரிக்கட்டும் என பூஜா ஹெக்டே நம்புகிறார்.
ஜோடி சேரும் ரஜினி -கமல்!
கோலிவுட்டின் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினியும் கமலும் ஒரு படத்தில் இணைந்து நடித்து 46 வருடங்கள் ஆகிறது. இருவரும் மீண்டும் இணைவார்களா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ருசிகர செய்தி யாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ் கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் இருவரும் இணைகிறார்கள் என சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இது கோலிவுட் டைத் தாண்டி பாலிவுட் வரை எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இந்த சூழலில் இவை அனைத்துமே ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையில் உள் ளது. இருவரும் லோகேஷ் கனக ராஜ் இயக்கத் தில் நடிக்க ஆர்வமாக இருக் கின்றனர். இருப் பினும் முழு ஸ்கிரிப்ட் ரெடியானதும் சம்பளம், பட்ஜெட் உள்ளிட்ட அடுத்தகட்ட நகர்வுகள் சரிபார்க்கப்பட்டு ஆரம்பிக்கப்படும். இந்த படத்தை பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க இப்போதைக்கு திட்டம் தீட்டப் பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவிருக்கிறது.
உலக
சினிமாவாம்!
அட்லீ -அல்லு அர்ஜூன் படம், இந்தியாவை தாண்டி உலக சினிமா மார்க்கெட்டை குறிவைத்து தயாராகி வருகிறது. அதற்கேற்றவாறு டாப் நட்சத்திரங்களை படக் குழுவினர் கமிட் செய்து வருகின்றனர். இதில் தீபிகா படுகோனே உறுதியாகியுள்ள நிலையில் இவரது போர்ஷன் வரும் நவம்பரில் இருந்து தொடங்கு கிறது. மற்றபடி மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகிய பெயர் கள் அதிகாரப்பூர்வ மாக இன்னும் அறிவிக்கப் படவில்லை. சமீபத்தில் ரம்யா கிருஷ்ண னும் கமிட்டாகியுள்ளார். பேரலல் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் சைன்ஸ் ஃபிக்சன் ஜானரில் இப்படம் உருவாகிறது. படத் தின் படப்பிடிப்பு அண்மையில் மும் பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய்சேதுபதி படப்பிடிப்பில் கலந்துகொண் டுள்ளார். இவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அது படத்தில் முக்கியமான இடத்தில் வருகிறது. இன்னும் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு தொடர்கிறது. அட்லீயின் முந்தைய படமான ‘"ஜவான்'’ படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித் திருந்தார். அந்த நட்பின் அடிப் படையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்துபோகிறார்.
-கவிதாசன் ஜெ.