அசத்தல் ஸ்ரேயா!

இளம் நடிகர் "மெட்ரோ' சிரிஷ் நடிப்பில் பரபரப் பான த்ரில்லுடன் உருவாகி வருகிறது "நான் வயலன்ஸ்' (சர்ய் யண்ர்ப்ங்ய்ஸ்ரீங்). இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "கனகா' என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் ரிலீ ஸாகியிருக்கிறது. இந்த பாடலில், ஸ்ரேயா சரண் செமையாக நட னம் ஆடியிருக் கிறார். இந்த பாடல், சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில்... 24 மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து,  பாடலை கொண்டாடிவருகிறது "நான்-வயலென்ஸ்' டீம்.

Advertisment

சிக்கலோ சிக்கல்!

"மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கிவரும் சுந்தர்.சி, அதை முடித்துவிட்டு விஷாலை வைத்து ஒரு படம் மற்றும் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதற்கு  திட்டமிட்டிருந்தார்.  திடீரென ரஜினி பட அழைப்பு வந்ததால் அந்த திட்டத்தை தள்ளிவைத்துவிட்டு அங்கே போனார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காததால், கமலிடம் சொல்லாமலே அதிரடியாக அறிக்கை வெளியிட்டு வெளியே வந்தார். இதனால் தற்போது முத-ல் கார்த்தி படத்தை முடித்துவிட்டு அதன்பிறகு விஷால் படத்தை தொடங்கவிருப்பதாக கோ-வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

வலுவான ரீ-என்ட்ரி!

நடிகை பிந்து மாதவி தமிழில் பிரபலமாக அறியப்பட்டாலும் தெலுங்கில்தான் தன் சினிமா கரியரை தொடங்கினார். இப்போது தமிழிலும் அவருக்கு பெரிதளவு வாய்ப்பு வரவில்லை. இதனால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கலாம் என தெலுங்கு பக்கம் திரும்பி யுள்ளார். ‘"தண்டோரா'’ என்ற படம் மூலம் தெலுங்கில் ரீ எண்ட்ரி கொடுக்கும் அவர், பாலியல் தொழிலாளி சம்பந்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து கூறும் அவர், “"இந்தப் படம் சமூகத்தில் விவாதத்தை கிளப்பும், அர்த்தமுள்ள விஷயங்களை வழங்குவதோடு ரசிக்கவும் வைக்கும்' என்கிறார். 

tt

27 ஆண்டுகளுக்குப் பின்...!

"அட்டக்கத்தி' தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘"லப்பர் பந்து'. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்த இப்படம் தற்போது தெலுங் கில் ரீமேக்காகிறது. தினேஷ் கதாபாத்திரத்தில் ராஜசேகரும், ஸ்வாசிகா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும் ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் விஸ்வதேவும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்கு நர் ஐ.வி.சசியின் மகன், அனி சசி இயக்குகிறார். இப்படம் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜசேகரும் ரம்யா கிருஷ்ணனும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Advertisment

சூர்யா டார்கெட்!

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் "கருப்பு'’ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மலையாள இயக்குநர் ஜீத்து மாத வன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தை தொடர்ந்து தெலுங்கில் "அந்தே சுந்த ரானிகி', "சரிபோதா சனிவாரம்' ஆகிய படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள் ளாராம். தொடர்ந்து மற்ற மொழி இயக்குநர்களை சூர்யா டார்கெட் செய் வதற்கு, பான் இந்தியா மார்கெட்டை உருவாக்குவதுதான் காரணமாம். 

ரவுடி படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் கவனம் செலுத்திவரும் ராஷி கண்ணா,  சித்தார்த்துக்கு ஜோடியாக "ரவுடி அண்ட் கோ'’ படத்தில் நடித்து வருகிறார். "டக்கர்'’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்குகிறார். இப்படம் பான் இந்தியா படமாக  5 மொழி களில் வெளியாகிறது. 

-கவிதாசன் ஜெ