இன்கிரிமென்ட்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருவதோடு, கடந்த ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான "தேவரா'’ படம் மூலம் தெலுங்கில் காலடி வைத்தார். அதில் வழக்கம்போல் தனது கவர்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர், குறைவான நேரமே வந்தாலும் அதற்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியிருக் கிறாராம். இதையடுத்து தற்போது மீண்டும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் "பெடி'’படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக படம் முழுக்க வருகிறாராம். இப்படத்தை அடுத்து அட்லீ -அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்க கமிட்டாகி யுள்ளார். தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜூன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடுவதால் தெலுங்கு சினிமாவில் தனக்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதை உணர்ந்த ஜான்வி கபூர், தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ரூ.5 கோடியில் இருந்து இப்போது ரூ.6 கோடி கேட்கிறார் என்று  சொல்கிறது தெலுங்கு வட்டாரம்.

இலக்கு!

Advertisment

நடிகைகள் பெரும்பாலும், தங்களது வளர்ந்துவரும் காலகட்டத்தில் ஹீரோயின் ரோலையே விரும்பும் சூழலில், மகள் ரோலை செலக்ட் செய்துள்ளார் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன். பெரிய பட்ஜெட் படமான ‘"கண்ணப்பா'’ படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தவர், தமிழில் "இதயம் முரளி' மற்றும் மலையாளத்தில் "மைனே பியார் கியா' என இரு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் "இதயம் முரளி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் "மைனே பியார் கியா' படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் புது படத்தில் அவருக்கு மகளாக நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவர் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க வுள்ளது. இப்படம் அப்பா -மகள் உறவை மையப்படுத்தி உருவாகிறது. இதில் மகள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதால்,  அதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக ப்ரீத்தி முகுந்தன் சொல்கிறார். 

tt1


ப்ளான் சேஞ்ச்!

Advertisment

2015ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறைதான் பிந்துமாதவி படம் வெளியாகிறது. அதுவும் பெரிதாக அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் ஹீரோயின் இல்லையானாலும் பரவாயில்லை தனக்கு பெயர் பெற்று கொடுக்கும் ரோல் என்றால் போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம். அந்த முடிவின் முதற்கட்டமாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "ப்ளாக்மெயில்' ’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து பேசிய பிந்து மாதவி, “"ரொம்ப நாள் கழித்து அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்'’என்கிறார். 

புரொடியூஸர் சமந்தா!

தசை அலர்ஜி நோயால் சினிமாவில் இருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது கம்பேக் கொடுக்க முயற்சித்துவருகிறார். இந்தியில் ‘"ரக்த் பிரம்மாந்த்’' என்ற வெப் தொடர், தெலுங்கில் ‘"பங்காரம்'’ என்று லீட் ரோலில் நடிக்கும் படம் ஆகிய புராஜெக்டுகளை கைவசம் வைத்துள்ள சமந்தா, கடந்த மே மாதத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் படத்தை வெளியிட்டிருந்தார். ‘"சுபம்'’ என்ற தலைப்பில் வெளியான அப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள சமந்தா, இதில் சிறப்பு தோற்றத்தில் அல்லாமல் படம் முழுக்க வரும் லீட் ரோலில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரின் நண்பரும் இயக்குநருமான நந்தினி ரெட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து "ஜபர்தஸ்த்'’ மற்றும் "ஓ பேபி'’படங்களை இயக்கியவர். 

-கவிதாசன் ஜெ.