Advertisment

டூரிங் டாக்கீஸ்! 25.10.25

tt


ஆக்ஷன் ரோல்!

மலையாள நடிகையான சம்யுக்தா, தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் தெலுங்கில் மட்டும் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பலனாக ‘"தி பிளாக் கோல்ட்'’ என்ற படத்தில் லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இதில் கூடுதல் போனஸாக ஆக்ஷன் அவதாரமும் எடுத்துள்ளார். அதற்காக கடுமையாக உடற்பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். முதன்முறையாக ஆக்ஷன் + லீட் ரோலில் நடிப்பதால் சவால் நிறைந்ததாக இருப்பதாக சொல்கிறார். மேலும் கடும் மெனக் கெடல்களை கொட்டி வருவதாகவும் இந்த உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் எனவும் நம்புகிறார். அதோடு இப்படம் தனக்கு மனதுக்கு நெருக்கமான படம் என்றும், நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறுகிறார


ஆக்ஷன் ரோல்!

மலையாள நடிகையான சம்யுக்தா, தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் தெலுங்கில் மட்டும் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பலனாக ‘"தி பிளாக் கோல்ட்'’ என்ற படத்தில் லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இதில் கூடுதல் போனஸாக ஆக்ஷன் அவதாரமும் எடுத்துள்ளார். அதற்காக கடுமையாக உடற்பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். முதன்முறையாக ஆக்ஷன் + லீட் ரோலில் நடிப்பதால் சவால் நிறைந்ததாக இருப்பதாக சொல்கிறார். மேலும் கடும் மெனக் கெடல்களை கொட்டி வருவதாகவும் இந்த உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் எனவும் நம்புகிறார். அதோடு இப்படம் தனக்கு மனதுக்கு நெருக்கமான படம் என்றும், நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறுகிறார். இப்படம் பான் இந்தியா படமாக தெலுங்கைத் தாண்டி தமிழ், இந்தி உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தைத் தவிர்த்து தமிழில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் "பென்ஸ்'’மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் என இரண்டு படங்களை சம்யுக்தா வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நல்ல பாதை!

தனுஷ் இயக்கிய ‘"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான அவரது சகோதரி மகனான பவிஷ் நாரா யண், அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார். இதனால் தனுஷே அவருக்கான கதையையும் கடந்த சில மாதங்களாக கேட்டுவந்தார். இதில் புதுமுகம் மற்றும் முன்னணி நடிகர்களும் இருந்தார்கள். ஆனால் எதுவுமே இறுதி செய்யப்படாத சூழல் நீடித்த நிலையில்... இப்போது இயக்குநர் ஃபைனல் செய்யப் பட்டுள்ளது. மகேஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். நாயகியும் புதுமுகம் என்கிறார்கள். தெலுங்கு திரைத் துறையைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது.  இப்படமும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் போல் காமெடி கலந்த காதல் படமாக உருவாகிறது. இந்த படத்தில் தனுஷின் நடிப்பு சாயல் இல்லாததுபோல் பவிஷ் நடிக்க விருக்கிறார். இப்படம் தனக்கு நல்ல பாதையை அமைத்து கொடுக்கும் என மலைபோல் நம்பியிருக்கிறார்.

Advertisment

tt1

நிறைவேறிய ஆசை!

முன்னணி இசை யமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத், நடிப்பதிலும் ஆர் வம் இருப்பதாக அவ்வப் போது தனது ஆசையை தெரிவித்திருந்தார். இத னால் சில பாடல்களில் சிறப்பு தோற்றத்தில் நடனமும் ஆடியிருந்தார். இந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறியுள் ளது. தெலுங்கில் ‘"எல்லம்மா'’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் அவர் ஹீரோவாக களமிறங்குகிறார். இப்படத்தை ‘பாலகம்’(தெலுங்கு) என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் வேணு எல்டண்டி இயக்குகிறார். இப்படத் திற்காகத் தேவிஸ்ரீ பிரசாத் தனது உடல் கட்டமைப்பை மாற்றவுள்ளார். இவருக்கு முன் ஹீரோ கதாபாத்திரத் திற்கு நிதின், நானி, சர்வானந்த், பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். 

முதல் முறை!

சூர்யா அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அடுத்த மாதத்தி-ருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. அதனால் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடை                    பெற்று வருகிறது. நாயகி கதாபாத்திரத்தில் நஸ்ரியாவை அணுகியது படக்குழு, ஆனால் இன்னும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து  நஸ்ரியாவின் கணவரும் பிரபல நடிகருமான பகத்பாசிலை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதனால் முதன்முறையாக சூர்யா -பகத்பாசில் கூட்டணி அமையவுள்ளதாகத் தெரியும் சூழலில் இப்போதிலிருந்தே படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

-கவிதாசன் ஜெ.

nkn251025
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe