ஹாரர் தமன்னா!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/tt1-2026-02-23-17-30-00.jpg)
பாலிவுட்டில் அடுக்கடுக்கான படங்களை கைவசம் வைத்துள்ளார் தமன்னா. இதில் ஹிட் பாகங்களான "ராகினி 3'’ படமும் இணைந்துள்ளது. இதன் முதல் பாகத்தில் கைனாஸ் மோடி வாலா இரண்டாம் பாகத்தில் சன்னி லியோன் நடித்திருந் தனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் பாகத்தில் தமன்னா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமிர்கானின் மகன் ஜூனைத் கான் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் காமெடி கலந்து உருவாகிறது. தமிழில் இதே ஹாரர் ஜானர் ஹிட் பாகங்களான ‘"அரண்மனை 4'’ படத்தில் தமன்னா நடித்திருந் தார். அது ரூ.100 கோடி வசூலை ஈட்டி வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல் அந்த ஹாரர் செண்டிமெண்ட் இதிலும் ஒர்க்கவுட்டாகும் என தமன்னா நம்புகிறார்.
கிராமத்துப் பெண்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/tt2-2026-02-23-17-30-30.jpg)
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் "சேயோன்'’படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து மதுரையில் தொடங்குகிறது. ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் நாயகி கமிட்டாகவில்லை. ஆனால் தற்போது தென்னிந்திய அளவில் பிரபல மாகி வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸை அணுகியுள்ளனர். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதனால் விரைவில் இது இறுதி செய்யப் படவுள்ளது. முன்ன தாக இவர் துல்கர் சல்மான் நடித்த "காந்தா'’படம் மூலம் தமிழில் அறிமுக மானார். படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை என்றாலும் பாக்யஸ்ரீயின் நடிப்பு பலராலும் பாராட்டப் பெற்றது. இதை தொடர்ந்து தற்போது நேரடி தமிழ்ப் படமாக சிவகார்த்திகேயன் படம் மூலம் அறிமுகமாக வுள்ளார். ஒரேகட்டமாக முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள் ளது. இந்தாண்டு அக்டோபரில் படம் ரிலீஸாகவுள்ளது.
துருவ் ஓ.கே!
"பைசன்'’பட வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்திற்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்ட துருவ் விகரம் ஏகப்பட்ட இயக்குநர்களிடம் கதை கேட்டார். ஆனால் எதையும் டிக் அடிக்காமல் இருந்தார். இதில் சுதா கொங்கரா, டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு உள்ளிட்ட சில பிரபல இயக்குநர்களும் அடங்கு வார்கள். இப்போது தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை அவர் தேர்வு செய்துள்ளார். அவர் அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி என்கிறது திரை வட்டாரம். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாயகியாக நடிக்க இன்றைய ட்ரெண்டிங் ஹீரோயின்ஸ் ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இசையமைப்பாளராக இளம் இசையைமைப்பாளர் சாய் அபயங்கர் கமிட்டாகியுள்ளார். ரொமான்ஸ் காமெடி ஜானரில் படம் வெளியாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
நேரடி தெலுங்கு!
"தோழா'’ படம் மூலம் தெலுங்கில் நுழைந்திருந்தாலும் நேரடியாக இன்னும் ஒரு படமும் நடிக்கவில்லை கார்த்தி. அதனால் அதை நிறைவேற்ற ‘ஹிட்’ படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க ஓகே சொல்லியிருந்தார். இதன் காரணமாகவே ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் தலை காண்பித்திருந்தார். இந்த நிலையில் புதிதாக ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் கார்த்தி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ‘மேட்’ பட இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கவுள்ளார். இப்படமும் தோழா படம் போல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்படவுள்ளது. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/23/tt-2026-02-23-17-29-49.jpg)