"தூக்கம் போச்சு...' 

தெலுங்கில் "அர்ஜுன் ரெட்டி'’ படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. தமிழில் "100% காதல்', "கொரில்லா', தனுஷின் "இட்லி கடை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துவருகிறார். தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்திப் படமான ‘"தேரே இஷ்க் மே' சமீபத்தில் பார்த்த ஷாலினி பாண்டே, தனுஷை பாராட்டிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தனுஷின் தேரே இஷ்க் மே' படத்தை பார்த்துவிட்டு 48 மணி நேரமாகத் தூங்கவில்லை. அந்தப் படம் இன்னும் என் மனதில்  ஓடிக்கொண்டேயிருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisment

மீண்டும் இணை!

"குக்கூ', "ஜோக்கர்', "ஜிப்ஸி' என கவனிக்கத்தக்க படங்களை கொடுத்து பிரபலமான ராஜூ முருகன், கார்த்தியை வைத்து எடுத்த "ஜப்பான்'’பட தோல்வியால் சற்று துவண்டுபோனாலும், அடுத்து சசிக்குமாரை வைத்து இயக்கிவரும் ‘"மை லார்ட்'’ படத்தை ஹிட்டாக்க வேண்டும் என தீவிரமாக பணியாற்றி வருகிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. படக்குழுவினர் எதிர்பார்த்தது போல் நன்றாக வந்துள்ளதாம். இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரவ... அதனால் ராஜூமுருகன் -சசிக்குமார் கூட்டணி புதிதாக ஒரு படத்திற்கு மீண்டும் இணைந்துள்ளது. படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படமும் இயக்குநரின் முந்தைய படங்கள் போல் அழுத்தமான ஒரு அரசியலை மையப்படுத்தப்பட்டு உருவாகவுள்ளதாம்.

Advertisment

பாலிவுட் என்ட்ரி!

தனது கணீர்க் குரலால் கவனம் ஈர்த்த அர்ஜுன்தாஸ் வில்லனாக தனக்கென ஒரு இமேஜை உருவாக்கியுள்ளார். அஜித்துடன் ‘"குட் பேட் அக்லி'’, பவன் கல்யாணுடன் "ஓஜி'’என நடித்து வந்தவர், தற்போது மேலும் ஒரு பெரிய நடிகருடன் மோதவுள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர், அடுத்தகட்டமாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார். அங்கு ஹிட் பட தொடரான ‘"டான் 3'’ ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் நிலையில் அதில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அர்ஜுன்தாஸ். இதன் மூலம் பாலிவுட்டிலும் தனக்கு கணிசமான வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கிறாராம். அத்துடன் தொடர்ந்து தனது இமேஜ் உயர்ந்து வருவதால் இனிமேல் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் வில்லனாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம். 

tt1

புது பிரபலம்!

"ஜெயிலர் 2'’ படத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பிரபலங்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு பிரபலம் இணைந்துள்ளார். படத்தில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறதாம். அதற்காக பல நடிகைகளை படக்குழு அணுகியுள்ளது. ஒரு பாடலுக்கா... என சிலர் தயக்கம் காட்ட இன்னும் சிலர் கால்ஷீட் பிரச்சனைகளால் பின்வாங்கியுள்ள     னர். இறுதியாக நிறைய குத்துப்பாடல்களுக்கு நடன மாடியுள்ள நோரா ஃபதேஹி ஓ.கே. ஆகியுள்ளார். முதல் பாகத்தில் தமன்னா நடனமாடிய ‘"காவாலா'’பாடல் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்தது. அதே போல் இப்பாடல் அமைய வேண்டும் என்ற நோக்கில் நோரா ஃபதேஹியின் வருகை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என நம்புகிறதாம் படக்குழு.
 
புது விருது!

Advertisment

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு துறைகளில் பணியாற்றிய சித்ரா லட்சுமணன், ‘"டூரிங் டாக்கீஸ்'’ என்ற யூட்யூப் சேனலை நடத்திவரும் நிலையில், அதன் சார்பில் தற்போது விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தவுள்ளார். ‘ஃப்ரேம் & ஃபேம் (எதஆஙஊ & எஆஙஊ)’ என்ற பெயரில் நடக்கும் இந்த விழா 2025 ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் நடக்கவுள்ளது. விழாவிற்கு கே. பாக்யராஜ் தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட குஷ்பூ சுந்தர், இளவரசு, முரளி ராமசாமி, டி. சிவா, ஆர். கே. செல்வமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் விருதுக் குரியவர்களை தேர்ந்தெடுக்கின்ற குழுவில் இடம் பெற்றுள்ளனர். பத்திரிகை தொடர்பாளர் தொடங்கி, இயக்குநர் கதாநாயகன், கதாநாயகி என 50 கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 25ஆம் தேதி இவ்விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.

-கவிதாசன் ஜெ.