ஸ்ரீலீலா நம்பிக்கை!
கோலிவுட்டில் "பராசக்தி' படம் தனக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியதாக சந் தோஷப்படும் ஸ்ரீலீலா, அதே மகிழ்ச்சியுடன் தனது அடுத்த படத்தையும் கமிட் செய்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாகவும் நடிக்கும் புது படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள், ஒரு ஹீரோ யினாக இவர் நடிக்க, இன்னொரு ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க, படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முழு படப்பிடிப்பையும் மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டு படத்தையும் இந்த வருடத்திற்குள் ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் போட்டுள்ளது. சயின்ஸ்பிக்சன் ஜானரில் படம் உருவாகிறது. முதல் படம் போல் இப்படமும் தனக்கு வலுச் சேர்க்கும் என ஸ்ரீலீலா நம்புகிறார்.
யாருக்கு டிக்?
சூர்யா தற்போது மூன்று படங்களை அடுத்தடுத்து கைவசம் வைத்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு, இரண்டாவதாக தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படம், மூன்றாவதாக மலையாள இயக்குநர் ஜீத்து மாத வன் இயக்கத்தில் ஒரு படம். இந்த மூன்று படங்களின் பணி களும் மும்முரமாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி யுள்ளார் சூர்யா. இப்போதைக்கு மூன்று இயக்குநர்கள் ரேஸில் முந்துகின்றனர். மலையாள இயக்குநர் நகாஷ் ஹிதாயத். இவர் "ஆர்டிஎக்ஸ்'’ படத்தை இயக்கியவர். அடுத்ததாக ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர் "பார்க்கிங்' படத்தை இயக்கியவர். அடுத்ததாக பாண்டிராஜ், இவர் ஏற்கனவே சூர்யாவை வைத்து "பசங்க 2' மற்றும் "எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கியிருந்தார். இந்த மூவரில் யாராவது ஒருவரை சூர்யா டிக் அடிக்க உள்ளார். மேலும் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான "ழகரம் ஸ்டுடி யோஸ்'’பேனரில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/22/tt1-2026-01-22-17-23-40.jpg)
மூன்றாவது படம்!
முதல் படத்திலேயே சர்வதேச அளவு சென்றவர் இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ். இவர் இயக்கிய "கூழாங்கல்' படம் ஆஸ்கர் போட்டிக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட, விருது பெறாமல் வெளியேறியது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது படமான "கொட்டுக்காளி' படமும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவனிக்கத்தக்க இயக்குநர் பட்டியலில் இணைந் துள்ள இவர், அடுத்த படத்திற்கான கதை எழுதி முடித்திருப்பவர், நாயக னாக "ரெட்ரோ' பட வில்லன் விதுவை அணுகியிருக்கிறார். விதுவும், ரத்னகுமார் இயக்கத்தில் ‘29’ மற்றும் இன்னொரு படம் என கைவசும் வைத்துள்ளார். அதனை முடித்து விட்டு வருவதாக கூற, பி.எஸ். வினோத்ராஜும் சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இவருடைய உறவினர்தான் நாயகன் விது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பேக் மீரா!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுக்க முயற்சித்துவருகிறார் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளியான "டெஸ்ட்' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். மீண்டும் நடிக்க வந்தாலும் நாயகியை விட முக்கிய கதாபாத்திரங்களே அவருக்கு அதிகம் வருகிறது. அவற்றிலும் மனம் தளராமல் வெற்றி பெறவேண்டும் என நடித்துவருகிறார். ஆனால் அவருக்கு தற்போது பெரிய நடிகர் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. மலையாளத்தில் "துடரும்' பட இயக்குநருடன் மோகன்லால் நடிக்கும் புதுப்படத்தில் நடிக்க படக்குழு மீரா ஜாஸ்மினை அணுகியுள்ளது. மீரா ஜாஸ்மினும் பச்சைக்கொடி காட்டியுள்ளார். தனது செகண்ட் இன்னிங்ஸில் பெரிய ஹீரோவுடன் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததால், இப்படம் தன்னுடைய கம்பேக்குக்கு சரியான படமாக இருக்கும் என நம்புகிறார். இவர் மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘"ஹிருதயபூர்வம்'’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/tt-2026-01-22-17-23-25.jpg)