காரணம் இதுதான்!

பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது அதிகம் அடிபடும் பெயர் ருக்மிணி வசந்த். அதுவும் சர்பிரைஸ் எலிமெண்டாக திடீரென இடம்பெறுகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆர். -பிரசாந்த் நீல் காம்போ வில் உருவாகும் இன்னும் பெயரிடாத படம், ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் "காந்தாரா 2'’படம் என அடுத்தடுத்து கமிட்டான நிலையில் தற்போது மற்றொரு பெரிய பட்ஜெட் படமான கே.ஜி.எஃப். யஷ் நடிக்கும் "டாக் ஸிக்'’படத்தில் இணைந்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், ஏற்கனவே இரண்டுகட்ட படப்பிடிப்பில் நடித்துவிட்டாராம். ஹீரோயினாக உயர்ந்து வரும் அவர் திடீரென முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக் காரணம், இந்தப்படம் கன்னடம், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவா கிறது. மேலும் பல் வேறு இந்திய மொழி கள் உட்பட உலக மொழிகளிலும் வெளியாக வுள்ளதால் தனது மார்க்கெட் விரிவாகும் என நினைக் கிறார். அதுபோக அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் வலுவாக இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணத்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா போன்ற நடிகைகள் நடித்து வருகின்றனர். 

மீசைய முறுக்கு 2

Advertisment

ஹிப்ஹாப் ஆதி, "கடைசி உலகப்போர்'’ படத்தை இயக்கி நடித்திருந்தார், அதோடு தயாரித்தும் இருந்தார். ஆனால் அப்படம் சரியாக போகாததால் பொருளாதாரத் தில் சறுக்கினார். இதனால் நடிப்பை விட்டுவிட்டு கொஞ்ச காலம் இசையிலே கவனம் செலுத்த முடிவெடுத்தார். ஆனால் இசையிலும் அவருக்கும் பெரிதாக வாய்ப்பு வரவில்லை. இதனிடையே தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார். அதுகுறித்தும் எந்த அப்டேட் டும் பெரிதாக வெளிவர வில்லை. அடுத்த ஆண்டு வெளி யிடத் திட்ட மிடப்பட்டுள்ளது. இதனால் தொடர் சறுக்கல்களை சந்தித்துவரும் அவர், விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முயற்சித்து வருகிறார். அதனால் தன்னை இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியவருமான சுந்தர் சி.யிடம் மீண்டும் சென்றுள்ளார். இருவரும் .தற்போது தங்களது காம்போ வில் வெளியான ஹிட் படமான "மீசைய முறுக்கு'’ பட இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆரம்பகட்ட வேலைகள் விறுவிறுவென நடந்து வருகிறது. ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஹிப்ஹாப் ஆதி இறங்கியிருக்கிறார்.  

tt1

காதல் கிசுகிசு!

அர்ஜுன்தாஸ் -ஐஸ்வர்யா லெட்சுமி இருவரும் முன்பு காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் இருவரும் அதை மறுத்திருந்தனர். ஒரு படத்திற்காக இருவரும் சந்தித்தோம் என்றும், மற்றபடி நாங்கள் இரு வரும் நல்ல நண்பர்கள் என்றும் தெரிவித் திருந்தனர். இந்த நிலையில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். ரியல் லைஃபில் இல்லை, ஒரு வெப் தொடரில். பாலாஜி மோகன் இயக்கத்தில் காதல், காமெடி கலந்த ஜானரில் இந்த வெப் தொடர் உருவாகிறது. படப்பிடிப்பு முழுமூச்சாக நடைபெற்று வரும் நிலையில் அர்ஜூன் தாஸுக்கும் ஐஸ்வர்யா லெட்சுமிக் கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் கவுட் ஆவதாக சொல் கிறார்கள் பட யூனிட் வட்டாரத்தினர். அத னால் வெப் தொடர் வெளியான பிறகு மீண்டும் காதல் வதந்தி வந்து விடுமோ என இரு வரும் யோசிக்கின்ற னர். அதனால் அதற்கு இடம் கொடுக் காமல், செய்தியாளர்கள் சந்திப்பிலே தெளிவுபடுத்த விரும்பும் அவர்கள், இந்த வதந்தி புரமோஷனுக்கும் பயன்படும் என்பதால் இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறார்கள்.

மீண்டும் போலீஸ்!

Advertisment

ஒரு பிளாக் பஸ்டர் வெற்றிக் காகப் போராடி வரும் சூர்யா, கை வசம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் "கருப்பு'’மற்றும் வெங்கி அட்லூரி இயக் கத்தில் இன்னும் பெய ரிடப்படாத படம் ஆகிய வற்றை கைவசம் வைத் துள்ளார். இதில் கருப்பு படம் ரிலீஸூக்கு தயா ராகிவருகிறது. இன் னொரு படம் படப் பிடிப்பில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ள சூர்யா, மலையாளத்தில் ‘"ரோமாஞ்சம்'’ மற்றும் ‘"ஆவேஷம்'’ படத்தை இயக்கிய ஜித்துமாதவனை கமிட் செய்து, தனது 2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரிக்க வும் உள்ளார். படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இசை சுஷின் ஷ்யாம். இவர் இயக்குநரின் ஆஸ்தான இசையமைப்பாளர். "மஞ்சும்மல் பாய்ஸ்' படத்திற்கு இசையமைத் திருந்தவர். இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரி யாக நடிப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி யிருக்கிறது.

-கவிதாசன் ஜெ.