வயது தடையல்ல!
கவர்ச்சி ஃபோட்டோ ஷூட்டாலும் தன் அழகாலும் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகும் ‘"தி ராஜா சாப்'’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இதில் அவரது ஃபோட்டோ ஷூட்டை போலவே கவர்ச்சியான கதாபாத்திரத்தில்தான் தோன்றுகிறார். இப்படம் வெளியாகும் முன்னே தற்போது தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ளார். அங்கு சீனியர் நடிகரான சிரஞ்சீவியுடன் ஜோடி போடவுள்ளார். இப்படத்தை சிரஞ்சீவியை வைத்து ‘"வால்டர் வீரய்யா'’ படத்தை இயக்கிய பாபி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மாளவிகா மோகனன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘"ஹிருதயபூர்வம்'’ படத்தில் 65 வயதுள்ள மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந் தா
வயது தடையல்ல!
கவர்ச்சி ஃபோட்டோ ஷூட்டாலும் தன் அழகாலும் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகும் ‘"தி ராஜா சாப்'’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இதில் அவரது ஃபோட்டோ ஷூட்டை போலவே கவர்ச்சியான கதாபாத்திரத்தில்தான் தோன்றுகிறார். இப்படம் வெளியாகும் முன்னே தற்போது தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ளார். அங்கு சீனியர் நடிகரான சிரஞ்சீவியுடன் ஜோடி போடவுள்ளார். இப்படத்தை சிரஞ்சீவியை வைத்து ‘"வால்டர் வீரய்யா'’ படத்தை இயக்கிய பாபி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மாளவிகா மோகனன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘"ஹிருதயபூர்வம்'’ படத்தில் 65 வயதுள்ள மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந் தார். இது சமூக வலைத்தளங்களில் சிலரால் விமர்சிக்கப்பட்டது. அதனால் இப்போது 70 வயதுள்ள சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதால் அதே விமர்சனம் எழும் சூழல் இருக்கிறது. ஆனால் நடிப்பதற்கு வயது தடை இல்லை எனவும், கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தோற்றத்தில் யார் வேண்டுமானாலும் உடல் மொழியை மாற்றி நடிக்கலாம் எனவும் 32 வயதுள்ள மாளவிகா மோகனன் பதிலடி கொடுக்கிறார்.
மூவாயிரம் கோடி!
ஷாருக்கானை வைத்து "ஜவான்' படம் மூலம் ஆயிரம் கோடி வசூலை அடித்த அட்லீ தற்போது அல்லு அர்ஜூனை வைத்து இயக்கும் படம் மூலம் இரண்டாயிரம் கோடி வசூலை பிளான் போட்டுள்ளார். இது தற்போது பெரிய தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அட்லீ -யஷ் கூட்டணியில் ஒரு மெகா படத்தை எடுக்கலாமா என பொறி தட்டியுள்ளது. அதனால் இருவரையும் மீட் செய்ய வைக்கும் முயற்சிகளை பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் மேற் கொள்கின்றனர். வசூல் டார்கெட்டை மூவாயிரம் கோடி வரை ஃபிக்ஸ் செய்துள்ளனர். மேலும் அட்லீயின் அல்லு அர்ஜூன் படம் இரண்டாயிரம் கோடி அடிக்கும் என்றும் யஷ்ஷின் டாக்ஸிக் மற்றும் ராமாயணம் படங்கள் இரண்டாயிரம் கோடி அடிக்கும் என்றும் அடித்துக் கூறும் தயாரிப்பாளர்கள், அதற்கடுத்து அட்லீ -யஷ் காம்போ உருவானால் நிச்சயம் மூவாயிரம் கோடி சாத்தியம் என்றும் கணக்கு போடுகின்றனர்.
28 வருடங்கள்!
"ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ரஜினியிடம் நெல்சன் புதுக்கதை சொல்லி ஓகே வாங்கியிருந்தார். ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி சுந்தர் சி. ரேஸில் முந்திக்கொண்டார். அதாவது ரஜினியும் சுந்தர் சி-.யும் சந்திப்பு மேற்கொண்டு புதுப்படம் குறித்து பேசியுள்ளனர். அப்போது சுந்தர் சி.யின் கதைக்கு ரஜினி உடனடியாக ஓ.கே. சொல்லியுள்ளார். சுந்தர் சி, குறுகிய காலத்தில் வேகமாக படம் எடுத்து முடித்து விடுவதால் "ஜெயிலர் 2' முடிந்தவுடனே படத்தை ஆரம்பிக்கலாம் என ரஜினி சொல்லியுள்ளார். இதனால் கமலுடன் அவர் நடிக்க வேண்டிய படத்துக்கு முன்பே இந்தப் படத்தில் நடிக்க அவர் திட்டமிட்டுள் ளார். ஏற்கனவே ரஜினி -சுந்தர் சி. கூட்டணி ‘"அருணாச் சலம்'’ என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்துள்ளதால் அதே போன்று இப்படமும் அமையுமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேபோல் 28 வருடங்களுக்கு பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் அதே மேஜிக்கை மீண்டும் செய்யுமா என்று ஆர்வத்திலும் இருக்கின்றனர்.
மீண்டும் ஜோடி!
விக்ரம் அடுத்த படம் கீஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள் ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதை முடித்துவிட்டு பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க தேதிகளை ஒதுக்கியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் விஷ்ணு எடவன் கவின் -நயன் தாராவை வைத்து ‘"ஹாய்'’ என்ற படத்தை இயக்கி வருவதால், நயன் தாராவையே விக்ரம் படத்திற்கும் நாயகியாக அணுகலாமா என்ற யோசனை யில் இருக்கிறார். அதனால் விக்ரம் -நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைய வாய்ப் புள்ளதாகத் தெரி கிறது. இருவரும் ஏற்கனவே "இரு முகன்'’படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-கவிதாசன் ஜெ.