காத்திருக்கும் கல்யாணி!
தமிழ் மற்றும் மலையாளத்தில் தற்போது அதிக கவனம் செலுத்திவரும் கல்யாணி பிரியதர்ஷன், கைவசம் நான்கு படங்களை வைத்துள்ளார். தமிழில் ரவிமோகனுடன் ‘"ஜீனி',’ கார்த்தியின் ‘"மார்ஷல்'’ படங்களைத் தவிர்த்து தமிழில் ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம். யார் என விசாரித்தால் கமல்ஹாசன் படம் என்கிறார்கள் திரை வட்டாரத்தினர். "தக் லைஃப்' படத்தை அடுத்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல் கமிட்டாகியுள்ள நிலையில்... அப்படத்தில்தான், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கல்யாணி பிரியதர்ஷனுக்கு படக்குழு சார்பில் அழைப்பு போயுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கல்யாணி பிரியதர்ஷன், உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜெனிலியா!
தமிழில் குறைவான படங்களிலே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் ஜெனிலியா. கடைசியாக தமிழில் விஜய் நடித்த ‘"வேலாயுதம்'’ படத்தில் நடித்தவர், பின்பு இந்தி பக்கம் போய்விட்டார். அங்கும் குறைவான படங்களிலே நடித்துவந்தார். அமீர்கானுக்கு ஜோடியாக நடித்த ‘"சிதாரே ஜமீன் பர்'’, பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல் ஈட்டியது. இதன் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். இதனிடையே தென்னிந் திய மொழியான தெலுங்கில் கவனம் செலுத்தியவர், அங்கு ‘"ஜூனியர்'’ படத்தில் நடித்தார். இப்படம் கடந்த 18ஆம் தேதி வெளியான நிலையில் தென்னிந்தியா விலும் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்து, அடுத்து தமிழில் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார். ஹீரோயினாக அல்லாமல் வலுவான கதாபாத்திரம் என்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறாராம். இதனால் தற்போது தமிழ் பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/22/tt1-2025-07-22-10-32-22.jpg)
சலசலப்பு!
வெங்கட் பிரபு, ‘"தி கோட்'’ படத்திற்குப் பிறகு, சிவகார்த்தி கேயனை வைத்து படமெடுக்க கமிட்டாகியுள்ளதாக கூறினார். படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடந்த நிலையில் சில காரணங்களால் இணைய முடியாமல் போனது. இப்போது காலம் கைகூடி வந்ததால் இருவரும் கைகோர்த்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் படம் உருவா கிறது. இந்த படத்தில் அனிருத்தை இசையமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் வெங்கட் பிரபு. எப்போதும் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை புக்செய்யும் வெங்கட் பிரபு, இந்தமுறை அனிருத்தை அணுகி யிருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதாவது, வெங்கட் பிரபுவுக்கும் யுவன்சங்கர் ராஜாவுக்கும் எதாவது மனஸ்தாபம் உண்டாகியுள்ளதோ என்ற பார்வையில் பலரும் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
மீண்டும் ஹிட்!
ஜீவா, கடைசியாக பா.விஜய் இயக்கத்தில் "அகத்தியா'’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து எந்த படத்தையும் கமிட் செய்யாமல் இருந் திருந்தார். இப்போது இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இவர் ஜீவாவை வைத்து ஏற்கனவே ‘"பிளாக்'’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்போது மீண்டும் இருவரும் இணையும் படம், ஜீவாவின் 46வது படமாக உருவாகிறது. படத்தை கே.ஆர். குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜீவாவுக்கு ஜோடியாக ரபியா கட்டூன் நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே ஹிட் கொடுத்த டைரக்டர் என்பதால் இந்தப் படமும் தனக்கு ஹிட் படமாக அமையும் என ஜீவா நம்புகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/22/tt-2025-07-22-10-31-48.jpg)