ரஜினி யோசனை!

இளம் இயக்குநர்களுடன் சமீபகாலமாக பயணிக்கும் ரஜினி, தற்போது நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இதனை அடுத்து மீண்டும் ஒரு இளம் இயக்குநரிடம் குறிப்பாக, இதுவரை அவர் படம் பண்ணாத ஒரு இயக்குநரிடம் படம் பண்ண முடிவெடுத்திருக் கிறார். அதனால் அதற்கான தேடுதல் வேட்டையை ஆரம்பித்த வர், முதற்கட்டமாக அ.வினோத்தையும், எஸ்.யு.அருண்குமாரையும் அழைத்து கதை கேட்டுள்ளார். இருவரும் அவர்களது ஒன் லைனை கூறியுள்ளனர். அதைக் கேட்ட ரஜினி பதில் எதுவும் சொல்லவில்லை. யோசனையில் இருக்கிறார். இருப்பினும் ரஜினியிடமிருந்து கிரீன் சிக்னல் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் வினோத்தும், அருண் குமாரும் கதையை டெவலப் செய்து வருகிறார்கள். வினோத் தற்போது விஜய்யை வைத்து "ஜன நாயகன்' படத்தை இயக்கி வருகிறார். அருண்குமார் கடைசியாக விக்ரமை வைத்து "வீர தீர சூரன் பாகம் 2' படத்தை இயக்கி யிருந்தார்.

tt

கிரீன் சிக்னல்!

சிவகார்த்திகேயன் - "குட் நைட்' பட டைரக்டர் விநாயக் சந்திரசேகரன் கூட் டணியில் ஒரு படம் உருவாவ தாக பேச்சுவார்த்தை அளவில் முன்னதாக முடிவு செய்யப்பட்டது. திரைக் கதை எழுதும் பணியிலும் விநாயக் சந்திரசேகரன் ஈடுபட்டிருந்தார். இப்போது அதை முடிந்துள்ளார். அப்பா - மகன் உறவை பேசும் படமாக இப்படத்தை எழுதியிருக்கிறார். இத னால் அப்பா கேரக்டருக்கு வலுவான நடிகரை தேடிய அவர், மலையாள முன்னணி நடிகர் மோகன் லாலை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் என்ன சொல்லியிருக் கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இப்போது ஒரு லேட்டஸ்ட் தகவல்படி மோகன் லால், படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம். ஏற்கெனவே "ஜில்லா' படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்ததை எண்ணிப் பார்த்து அந்த சென்டி மெண்ட் இதிலும் ஒர்க்கவுட் ஆகும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக மோலிவுட் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்தி கேயன் தற்போது நடித்துவரும் "மதராஸி' படத்தில் மோகன்லாலை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சிகள் நடந்து, பின்பு சில காரணங்களால் அது கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி நம்பிக்கை!

திருமணத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு பெரிதாக பட வாய்ப்பு வரவில்லை. ஆனால் அவர் தென் னிந்திய அளவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டதால் அடுத்து பாலிவுட்டை குறிவைத்து பணிகளை மேற்கொண்டுள்ளார். தெறி பட இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தாலும் படம் சரியாகப் போகாத தால் எப்படியும் ஒரு வெற்றியாவது கொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறார். இப்போது அங்கு "அக்கா' எனும் ஒரு வெப் தொடரை கைவசம் வைத்திருக்கும் அவர், அதை பெரிதும் நம்பியிருக்கிறார். இருப்பினும் ஒரு தியேட்டர் வெற்றி முக்கியம் என்ப தால் பல வாய்ப்புகளை தேடி வந்தார். அதற்கு பலனாக சமீபத்தில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் ஒரு படம் நடிக்க கமிட் டாகியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டாகியுள் ளார். கல்வித் துறையில் நடக்கும் மோசடிகளை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் தனது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என நம்புகிறார்.

சமந்தா தேசபக்தி!

காஷ்மீரின் பஹல்ஹாம் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ் தான் மீது ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி இந்தியா வின் கௌரவத்தை நிலைநாட்டி யுள்ளதாக பெருமையாக புகழ்ந்து தள்ளியுள்ளார் சமந்தா. வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு எல்லை யில் நமக்காக நம்மை காப்பதற்காக காத்து நிற்கிறார்கள். பிறந்து வளர்ந்த நாட்டிற்காக தேசத்தின் பாரத்தை தங்கள் தோளில் சுமந்து நிற்கிறார்கள். நாங்கள் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருப்போம் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதி விட்டுள்ளார். இது அவரது ரசிகர் களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

- கவிதாசன் ஜெ