50 முறை!
திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் தனது காதலருடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில், ‘திருப்பதி கோயி லுக்கு செல்வது இது 50வது முறை. அலிபிரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது பயணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது வாழ்க்கையின் இலக்கினை சொல்லித் தருவது. வாழ்க்கை என்பது முன்னேறுவதை பற்றியதுதான். திருப்பதி மலை ஏறும் அனு பவத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும்’என்று குறிப்பிட்டுள்ளார். 50ஆவது முறையாக தன் மனதுக்குப் பிடித்தவருடன் ஏழுமலையானை தரிசித்து அதை டாக்குமெண்டர
50 முறை!
திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் தனது காதலருடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில், ‘திருப்பதி கோயி லுக்கு செல்வது இது 50வது முறை. அலிபிரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது பயணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது வாழ்க்கையின் இலக்கினை சொல்லித் தருவது. வாழ்க்கை என்பது முன்னேறுவதை பற்றியதுதான். திருப்பதி மலை ஏறும் அனு பவத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும்’என்று குறிப்பிட்டுள்ளார். 50ஆவது முறையாக தன் மனதுக்குப் பிடித்தவருடன் ஏழுமலையானை தரிசித்து அதை டாக்குமெண்டரி படமாக வீடியோ பதிவு செய்துள்ளார்.
நல்ல பாதை!
"தெய்வத்திருமகள்'’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சாரா அர்ஜூன் தற்போது நாயகியாக உருவெடுத் துள்ளார். சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் இந்தியில் அவர் நடித்த ‘"துரந்தர்'’ படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் பாலிவுட்டில் டாக் ஆஃப்தி டவுனாக மாறி யுள்ளார் சாரா. இந்த பேச்சு அடங்குவதற் குள் அவரது அடுத்த படம் தெலுங்கில் ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. குணசேகர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘"யூபோரியா'’ படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கில் தனக்கு ஒரு நல்ல பாதையை அமைத்து கொடுக்கும் என மகிழ்ச்சி பொங்க சொல்கிறாராம் சாரா.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/tt1-2026-01-19-17-17-11.jpg)
மீண்டும் கிராமம்!
இயக்குநர் முத்தையா தனது கிராமத்து ஸ்டைலை விட்டு விட்டு, நகர ஸ்டைலில் ‘"ராம்போ'’ எனும் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார், அப்படம் சரியாக போக வில்லை. தற்போது தன் மகனை வைத்து "சுள்ளான் சேது'’எனும் படத்தை கைவசம் வைத்துள்ளார். இது பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்காக அருண் விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படமும் அவரது கிராமத்து ஸ்டைலிலேயே உருவாகிறதாம். மார்ச் மாதத்தி-ருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல் முறையாக முத்தையா -அருண் விஜய் கூட்டணி இணைந் துள்ளதால் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாம்.
ரஜிஷா ஸ்ட்ரிக்ட்!
பக்கத்து வீட்டு பெண்ணின் லுக், சாதுவான கதாபாத்திரம் என ட்ராவல் செய்து வந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். தமிழிலும் அதுபோன்ற கதாபாத்தி ரங்களையே தேர்ந்தெடுத்து நடித்துவந்தவர், இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘"மஸ்திஷ்கா மரணம்'’ படத்தில் "கோமலதாமரா' எனும் குத்துப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார். சமீபத்தில் வெளியான இப்பாடல் பயங்கர வரவேற்பை பெற, ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி யிருக்கிறார்கள். ரஜிஷாவின் இந்த அவதாரத்தை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து மழை பொழிய... மகிழ்ச்சியில் முகம் சிவந்திருக்கிறார். இது போன்ற ரோல்களிலும் அவர் நடிக்க முடிவெடுத்துள்ளதால், ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
சரிந்த இமேஜ்!
"கூலி'’ படத்தைத் தொடர்ந்து அல்லுஅர்ஜூனுக்கு கதை சொல்லி ஓ.கே. வாங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இது அவரது கனவு படமாகச் சொல்லப்படும் ‘"இரும்புக் கை மாயாவி'’ கதையாக இருக்கும் எனச் சொல்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு செலவு மட்டுமே ரூ.300 கோடியைத் தாண்டுமாம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 கோடிக்கும்மேலே இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இதில் லோகேஷ் கனகராஜுக்கு மட்டும் 75 கோடி சம்பளமாம். இந்தப் படம் மூலம் சரிந்த தன் இமேஜை மீட்டெடுக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us