ரெஜினா ஹேப்பி!

அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் புதிய படமானது, இந்த கூட்டணியின் முந்தைய படமான "குட் பேட் அக்லி'’படத்தை விட வேறு களத்தில் உருவாகிறது. ஸ்கிரிப்ட் பணிகளை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி முடித்துவிட்டார். படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஆனால் தயாரிப்பில் குழப்பம் நீடித்துவருகிறது. இதற்கு காரணம் அஜித்தின் சம்பளம் எனக் கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, படத்தின் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா, "லப்பர் பந்து' புகழ் ஸ்வாசிகா உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளனர். இதன் வரிசையில் தற்போது லேட்டஸ்டாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் "விடாமுயற்சி' படத்தில் நடித்திருந்தார். இதில் நெகட்டிவ் ரோலில் நடித்த இவர் புதிய படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். 

Advertisment

முக்கிய முடிவு!

ஒருகட்டத்தில் பிஸியாக நடித்து வந்த அஞ்சலி, சமீபகாலமாக முக்கிய கதாபாத்திரம் அல்லது கேமியோ ரோல்களில் தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் தமிழில் கடைசியாக ‘"பறந்து போ'’படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தற்போது முதன்மை கதாபாத்தி ரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மைக்கேல் என்பவர் இயக்கி வருகிறார். பெண்களை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படம் மூலம் இரண்டாவது முறையாக லீட் ரோலில் அஞ்சலி நடித்து வருகிறார். முதலாவதாக 2019ஆம் ஆண்டு ‘"லிசா'’ என்ற பேய் படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்த நிலையில் புதிதாக நடிக்கும் படம் வெற்றிபெறும் என நம்புகிறார். இனிமேல் தொடர்ந்து லீட் ரோல் கதாபாத்திரம் வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

Advertisment

செகன்ட் ரவுண்ட்!

திருமணத்திற்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்ட காதல் சந்தியா திடீரென சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இப்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார். புதுப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்க, படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. கிட்டத்தட்ட 10ஆண்டுகளுக்கு பின் சினிமாவுக்கு வந்துள்ளதால் இன்னொரு ரவுண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

cinema1

பல்லவிக்கு சம்மதம்!

பிரபல கர்நாடக இசைக்கலைஞரும் பாரத ரத்னா விருது வாங்கிய முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்க வுள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தற்போது சுப்புலட்சுமிக்கான கதாபாத்திரத் தேர்வு நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் ராமாயண இந்தி படத்திற்கு அதிகப்படி யான தேதிகளை ஒதுக்கியுள்ளார். மேலும் ராஜ் குமார் பெரியசாமி இயக்கும் படத்தில், இரண்டாவது முறை யாக தனுஷுடன் இணைய வுள்ளார். அதனால் அடுத்த ஆண்டு இறுதிதான் தேதி இருப்பதாக சொல்லியுள் ளார். படக்குழுவும் அதற்கு சம்மதம் தெரி வித்து டேட்டை லாக் செய்துள்ளனர்.

Advertisment

விரைவில் படப்பிடிப்பு!

"டாடா'’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு தற்போது ரவி மோகனை வைத்து "கராத்தே பாபு'’என்ற படத்தை இயக்கிவரும் நிலையில் "டிராஃப்ட் பை ஜிகேபி'’என்ற தயாரிப்பு நிறுவனத் தையும் நடத்திவருகிறார். இதில் முதல் படமாக கௌதம் கார்த்திக் நடிக்கும் அவரது 19ஆவது படத்தை தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது. இதனிடையே இயக்குநர் கணேஷ், தன்னுடைய இரண்டாம் படத்தை தயாரிக்க ரெடியாகியுள்ளார். இப்படத்தில் நாயகனாக அஜய் கார்த்திக் என்பவர் நடிக்கவுள்ளார். 

-கவிதாசன் ஜெ.