தீவிர யோசனை!

"கங்குவா'’பட தோல்வியால் அடுத்த படம் இயக்காமல் தவித்துவருகிறார் சிறுத்தை சிவா. அஜித்தை நம்பியிருந்தார், ஆனால் அவர் ரேஸில் பிஸியாகிவிட்டார். ரஜினியிடம் சந்தித்து கதை கூறினார். அது அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இதனிடையே விஜய்சேதுபதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து ஒரு ஒன்-லைன் கூறியிருந்தார். விஜய்சேதுபதியும் பிடித் திருப்பதாக தெரிவித்து முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லியிருந்தார். அதனால் இத்தனை மாதம் ஸ்கிரிப்ட் டெவலப்பில் இருந்த சிறுத்தை சிவா, ஒரு வழியாக முடித்துவிட்டு மீண்டும் விஜய்சேதுபதியை சந்தித்து ஸ்கிரிப்ட் கொடுத்துள்ளார். ஸ்கிரிப்டை படித்த விஜய்சேதுபதி, க்ரீன் சிக்னல் கொடுக்க... மகிழ்ச்சியில் திளைத்த சிவா, டேட் குறித்து கேட்டிருக்கிறார். அதில்தான் விஜய் சேதுபதி ட்விஸ்ட் வைத்துள்ளார். இந்த வருடம் அவரிடம் தேதிகள் இல்லை. அடுத்த வருட மத்தியில்தான் இருப்பதாக சொல்லியுள்ளார். அதனால்  வேறு யாரையாவது அணுகலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் சிறுத்தை சிவா.

Advertisment

விலக முடிவு!

பட வாய்ப்புக்காக, சமூக வலைத்தளங்களில் ஃபோட்டோ ஷூட்களை இறக்கும் காலத்தில், நடிப்பதற்காக சமூக வலைத்தளத்தை விட்டே செல்ல முடிவெடுத்துள்ளார் நடிகை ஒருவர். அவர் வேறு யாருமல்ல ‘"பொன்னி யின் செல்வன்', ‘"கட்டா குஸ்தி', ‘"மாமன்'’ படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி. சமூக ஊடகங்களில் இருந்து முற்றிலும் விலகுவதாக திடீரென ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளி யிட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளம் தன்னை திசை திருப்புவதாகவும் சிறிய இன்பத்தை கூட மகிழ்ச்சியற்றதாக மாற்றுவதாகவும் கவலை தெரிவித் துள்ளார். இதே போல் சீனியர் நடிகை அனுஷ்காவும் சமீ பத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். "வெற்றி பெற்ற இரண்டு சீனியர் நடிகைகள் சமூக வலைத் தளங்களில் இருந்து விலகுவது வியப்பாக உள்ளது' என்கிறார்கள் ரசிகர்கள்.

tt1

உயரும் இமேஜ்!

"3 பி.ஹெச்.கே'’ படத்திற்குப் பின் வெப் தொடர் ஒன்றை கமிட் செய்துள்ளார் நடிகர் சித்தார்த். இத்தொடர், அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹிரி எழுத்தில் பல்வேறு விருதுகளை குவித்த சிறுகதைகளைத் தொகுப்பாக்கி அதன் அடிப்படையில் உருவாகிறது. காதல் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்த தொடர் உருவாகும் நிலையில் மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்டு, "அன் அக்கஸ்டம்டு எர்த்'’(மய்ஹஸ்ரீஸ்ரீன்ள்ற்ர்ம்ங்க் ஊஹழ்ற்ட்) என்ற தலைப்பில் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. இதில்  ‘"ஸ்லம்டாக் மில்லியனர்'’ பட நடிகை ஃபிரீடா பிண்டோ முக்கிய கதாபாத்தி ரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் பிரபலங்களுடன் வேலை செய்வதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சித்தார்த். 

நம்பிக்கை!

"அயோத்தி' படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. அதன் பிறகு "உறியடி' விஜய்குமார் நடித்த ‘"எலக்சன்'’என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அது அவருக்கு தொடர் வாய்ப்பை பெற்றுத் தரும் அளவுக்கு வரவேற்பை பெற வில்லை. இருப்பினும் அவர் கவினுடன் "கிஸ்'’படத்தில் நடித்து வந்தார். இப் போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அவர் இயக்கி வரும் ‘"கில்லர்'’படத்தில் முதன்மையான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கிஸ் படம் 19ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகையாக ரசிகர்களை கவரும் வகையில் நடித்துள்ள தாகத் தெரிவிக்கும் அவர், இந்த படத்திற்கு பிறகு தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இவர் இதற்கு முன்னதாக தெலுங்கில் சில படங்களிலும்,  இடையே தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களிலும் நடித்து வந்தார்.

Advertisment

-கவிதாசன் ஜெ.