மியூஸிக் ஹீரோ!
இசையமைப்பாளர் டூ ஹீரோ என்ற லிஸ்டில் தற் போது புது வரவாக இணைந்துள் ளார் நிவாஸ் கே.பிரசன்னா. இவர் ஆரம்பகட்டத்தில் தெகிடி, சேதுபதி, தேவராட்டம் என தொடர்ந்து பல படங்களில் நல்ல பாடல்களை கொடுத்தாலும் அதற்கு அடுத்து இசையமைத்த பாடல்கள் சுத்தமாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் கடைசியாக அவர் இசையமைத்த "பைசன்' பட பாடல்கள் படத்தோட வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. குறிப்பாக அப்பட புரொ மோஷனில் ‘தீக்கொளுத்தி’ பாடலுக்கு நடனமாடிக்கொண்டே பாடிய விதம் உணர்வுபூர்வமாக அமைந்தது. இது தற்போது அவரை ஹீரோ மெட்டீரியலாக மாற்றியுள்ளது. பா.ரஞ்சித் தயாரிப்பில் குமரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இ
மியூஸிக் ஹீரோ!
இசையமைப்பாளர் டூ ஹீரோ என்ற லிஸ்டில் தற் போது புது வரவாக இணைந்துள் ளார் நிவாஸ் கே.பிரசன்னா. இவர் ஆரம்பகட்டத்தில் தெகிடி, சேதுபதி, தேவராட்டம் என தொடர்ந்து பல படங்களில் நல்ல பாடல்களை கொடுத்தாலும் அதற்கு அடுத்து இசையமைத்த பாடல்கள் சுத்தமாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் கடைசியாக அவர் இசையமைத்த "பைசன்' பட பாடல்கள் படத்தோட வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. குறிப்பாக அப்பட புரொ மோஷனில் ‘தீக்கொளுத்தி’ பாடலுக்கு நடனமாடிக்கொண்டே பாடிய விதம் உணர்வுபூர்வமாக அமைந்தது. இது தற்போது அவரை ஹீரோ மெட்டீரியலாக மாற்றியுள்ளது. பா.ரஞ்சித் தயாரிப்பில் குமரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இயக்குநர் குமரன், இதற்கு முன்பாக கதிரை வைத்து "ஜடா' என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நிவாஸ் கே.பிரசன்னாவுக்கு ஜோடியாக அதிதிஷங்கர் கமிட்டாகியுள்ளார்.
டைரக்டர் யாரு?
ரஜினி -கமல் -சுந்தர் சி. கூட்டணியில் கடந்த வாரத்துக்கு முன்பு ஒரு படம் அறிவிக்கப்பட்டது. அதாவது ரஜினி நடிப்பில், கமல் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினியின் 173வது படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டு, 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்ற அளவுக்கு பக்காவாக பிளான் போட்டு அறி விக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அண்மையில் சுந்தர் சி விலகினார். கனத்த இதயத்துடன் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். அதனால் இப்போது சுந்தர் சி-க்கு பதில் யார் இப்படத்தை இயக்கு வார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் வட்டமடித்து வருகிறது. இப்போதைக்கு இதற்கு பதிலாக மூன்று டைரக்டர்களின் பெயர்கள் அடிபடுகிறது. அதாவது வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், ராஜேஷ் செல்வா. இந்த மூணு பேரில் யாராவது ஒருவர் இறுதி செய்யப்படலாம். முதல் முறையாக கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த இப்படத்தில் ஆரம் பத்திலேயே இப்படி ஒரு குழப்பம் நீடிக்கிறதே என ரசிகர்கள் முணு முணுக்க இரு ஜாம்பவான்கள் பணியாற்றும் படம் என்பதால் எல்லாமே சரியாக இருக்கவேண்டுமென்று பார்த்துப் பார்த்து செய்கிறோம் என விளக்கமளிக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/17/tta-2025-11-17-16-54-48.jpg)
நெகடிவ் நாயகி!
கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில், வரும் 28ஆம் தேதி வெளியா கவுள்ள படம் ‘"மாஸ்க்'. இப்படத்தை பெரிதும் நம்பி யிருக்கிறார் ஆண்ட்ரியா. காரணம் இதில் முதல்முறையாக தயாரிப்பாளராகவும், வில்லியாகவும் நடித்துள்ளார். என்னுடைய படம் விரைவில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி என தனது ஆதங்கம் கலந்து சந்தோஷத்தை வெளிப் படுத்தியுள்ளார். அதாவது அவர் நடிப்பில் "பிசாசு 2' மற்றும் "மனுசி' படங்கள் கிடப்பில் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க "மாஸ்க்' படம் ஹிட்டா னால் தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களி லும் நடிக்கத் தயாராகவும் இருக்கிறாராம்.
க்ரீன் சிக்னல்!
"விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து விக்ரமை வைத்து படம் எடுக்க முயற்சித்தார் இயக்குநர் மகிழ்திருமேனி. ஆனால் அது கைகூடவில்லை. இத னால் பல்வேறு ஹீரோக்களை அணுகிய அவர், தற்போது விஜய்சேதுபதியிடம் க்ரீன் சிக்னல் பெற்று பட வேலைகளை ஆரம்பித்துள்ளார். இதில் நாயகியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தாகபூரை கமிட் செய்துள்ளனர். இவர் தமிழில் முதன் முறையாக இப்படத் தில் கமிட்டாகியுள் ளார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது. படப் பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியிலிருந்து தொடங்கப் படுகிறது. அதே போல் இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க சஞ்சய் தத் திடம் பேச்சு வார்த்தை நடந்துவருவது கூடுதல் தகவல்.
-கவிதாசன் ஜெ.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us