நெகட்டிவ் நாயகி!

அட்லீ -அல்லு அர்ஜுனின் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தால் நாளுக்கு நாள் படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் லேட்டஸ்ட் தகவலின்படி, படத்தில் அல்லு அர்ஜூன் 4 கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த கதா பாத்திரங்கள் தாத்தா, அப்பா மற்றும் இரண்டு மகன்கள் எனச் சொல்கின்றனர். இந்த நான்கு கதாபாத்திரத்துக்கும் ஜோடியாக தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் கமிட்டாகியுள்ளனர். ராஷ்மிகா மந்தனாவும் மற்றொரு  நாயகியாக கமிட்டாகியுள்ளார். அவர் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க வில்லையாம். மாறாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளா ராம். இந்த தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

tt1

Advertisment

கூட்டணி ரெடி!

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் லிஸ்ட்டில் ஏகப்பட்ட இளம் இயக்குநர்கள் வந்து போகின்றனர். மாரி செல்வராஜ் தொடங்கி அ.வினோத், எஸ்.யு.அருண்குமார் என பெயர்கள் இருந்தன. ஆனால் எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த நிலையில் புதிதாக "மகாராஜா' பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன், பட்டியலில் இணைந்துள்ளார். சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், அதற்கு ரஜினி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதனால் ரஜினி -நித்திலன் சாமிநாதன் கூட்டணி உருவாக அதிக வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘"ஜெயிலர் 2'’ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத் தில் ‘"கூலி'’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இப்போது விஜய் சேதுபதி யுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணத் தயாராகி வருகிறார் நித்திலன் சாமிநாதன். ஒருவேளை ரஜினி படம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால் விஜய் சேதுபதி படத்தைதள்ளி வைத்துவிட்டு ரஜினி படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

Advertisment

சௌத்ரி 100

"சூர்ய வம்சம்'’ படம் வெளியாகி 28 வருடங்கள் கடந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் பற்றி 2023ஆம் ஆண்டு அறிவித்திருந்தார் சரத்குமார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் சரத்குமாரோடு இணைந்து ஜீவாவும் நடிக்க வுள்ளார். ஜீவாவின் தந்தையான ஆர்.பி.சௌத்ரி தனது சூப்பர் 
குட் பிலிம்ஸ்’ பேனரில் "சூர்ய வம்சம்' படத்தை தயாரித் திருந்தார். இந்நிறுவனத்தின் 100வது படமாக ‘"சூர்ய வம்சம் 2'’ உருவாகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, முதல் பாகம் இயக்கிய விக்ரமன் இயக்கவில்லை. வேறொரு புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். ஆரம்பகட்டப் பணிகள்  தொடங்கியுள்ளது.

நித்யா ஹேப்பி!

மலையாளம், தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்துவரும்  நித்யா மேனன், தமிழில் அவ்வப்போது நடித்து வந்த நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தால் தேசிய விருது வாங்கிய பிறகு தொடர்ச் சியாக தமிழில் நடிக்கத் திட்டமிட் டார். அந்த வகையில் கைவசம் தனுஷுடன் ‘"இட்லி கடை',’ விஜய் சேதுபதியுடன் "தலைவன் தலைவி'’ ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இதில் "தலைவன் தலைவி' வருகின்ற 25ஆம் தேதி ரிலீஸுக்கு ரெடியாகி யுள்ளது. "இட்லி கடை'யும் அக்டோ பர் 1ஆம் தேதி வெளியாக வுள்ளது. திட்டமிட்டபடி, தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து எந்த இடையூறு மில்லாமல் வெளியாகவுள்ள தால் மகிழ்ச்சியில் இருக் கிறார் நித்யா மெனன். 

-கவிதாசன் ஜெ.