கருத்து வேறுபாடு!
அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகாபடுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த படம், ‘"கல்கி 2898 ஏடி'.’இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்க, வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்கவிருந்த நிலையில், சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகாபடுகோன் நீக்கப்படுவதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்தது. எட்டுமணி நேர பணி, 25 சதவீத சம்பள உயர்வு, அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் என தீபிகா கேட்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, இந்தி நடிகை ஆலியாபட்டிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம் படக்குழு.
மூன்றாவது சான்ஸ்!
ரஜினி - நெல்சன் கூட்டணியில் வெளியான "ஜெயிலர்'’படத்தின் வெற்றி யைத் தொடர்ந்து, தற்போது ரஜினி யை வைத்து "ஜெயிலர் 2'’ படத்தை இயக்கிவருகிறார். படப்பிடிப்பின் போது ரஜினியிடம் இன்னொரு புதுக்கதையை கூறி அதற்கான ஒன்-லைனை மட்டும் விவரித்துள்ளார். ரஜினிக்கு அது பிடித்துப்போக கதையை டெவலப் பண் ணச் சொல்லி யுள்ளார். அதனால் "ஜெயிலர் 2' பணிகள் முடிந்ததும் அதற் கான வேலைகளில் தீவிரமாக இறங்க திட்ட மிட்டுள்ளாராம் நெல்சன். இதனால் அவர் அடுத்து இயக்க கமிட்டாகியிருந்த ஜூனியர் என்.டி.ஆர் படக்குழுவிடம் கொஞ்சம் டைம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருப்பதால் ரஜினிக்கான கதையை கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் முழுக்கவனம் செலுத்த பிளான் பண்ணியுள்ளாராம். அதேசமயம், கிடைக்கும் கேப்பில் ரஜினிக்கான கதையின் மீதும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளவர், ரஜினியை மூன்றாவது முறை இயக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.
புதிய அடையாளம்!
சமீபகாலமாக சறுக்கல்களை சந்தித்துவரும் இயக்குநர் சுசீந்திரன், வழக்கம்போல் அடுத்தடுத்து உடனடியாக படம் பண்ணாமல், தரமான படம் மூலம் கம்-பேக் கொடுக்க வேண்டும் என நினைக் கிறாராம். அதற்காக தற்போது சூரியிடம் ஒரு கதை சொல்லி ஓ.கே. வாங்கியுள்ளார். ஆனால் சூரியிடம் அடுத்த ஆண்டு வரை தேதிகள் இல்லாததால் கொஞ்சம் வெயிட்பண்ணுங்கள், படத்தை நானே தயாரிக்கிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார். இதனால் தெம்பான சுசீந்திரன் கதையை மெருகேற்றி வருகிறார். சூரியின் ஆரம்பகட்டத்தில் "வெண்ணிலா கபடிக்குழு'’ மூலம் அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்த சுசீந்திரன், புதிய படம் மூலம் அவருக்கு இன்னொரு புதிய அடையாளத்தைத் தர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகிறாராம்.
சிக்கலில் சிம்பு!
தொடர்ந்து நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என நிறைய படங்களை கமிட் செய் துள்ளார் சிம்பு. ஆனால் எதிரான சூழல்களாகவே அமைகிறது. "பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க கமிட் டாகியிருந்தார், அது சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. அவரது 50வது படமான தேசிங் பெரியசாமி படம் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. வெற்றி மாறனுடன் "அரசன்' படம் கமிட்டானார். அதன் படப்பிடிப்பும் தள்ளிப்போய் ஒருவழியாக விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு சிம்பு தற்போது ஒரு புதுப் படத்தை கமிட் செய்துள்ளார். அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி படத்தை இயக்க, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
காத்திருப்பு!
"சர்தார்' படத்துக்குப் பிறகு "பைசன்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ள மலையாள நடிகையாக ரஜிஷா விஜயன், நாயகியாக மட்டுமில் லாமல் துணை கதாபாத்திரத்திலும் தயக்கமின்றி நடிப்பதால், தற்போது அவரை நிறைய தமிழ் சினிமா இயக்குநர்கள் அணுகி வருகின்றனர். தொடர்ந்து வாய்ப்புகள் வருவதால் தமிழில் சிறிது காலம் முழுக் கவனத்தையும் செலுத்தும் நோக்கத்தில் இருக்கிறா ராம் ரஜிஷா விஜயன். "சர்தார் 2' படம் தனக்கு இன் னும் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெரி விக்கிறார். ஆனால் அப் படம் சில காரணங் களால் தீபாவளிக்கு வெளியாகவிருந்து தள்ளிப்போனது சற்று வருத்தம்தான் என தனது நெருங்கிய வட் டாரத்தில் சொல்லி வரும் அவர், அந்தப் படத்தின் ரிலீஸுக் காக காத்திருக் கிறாராம்.
-கவிதாசன் ஜெ.