க்ரீன் சிக்னல்!

இயக்குநராக அறிமுகமாகி நடிகராக கால்பதித்து தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். தான் நடித்த "டியூட்'’ படத்தில் ‘"சிங்காரி'’ எனும் பாடலை பாடி பாடகராக முயற்சி செய்தார். தொடர்ந்து தற்போது தயாரிப்பாள ராக அவதாரம் எடுத்துள்ளார். மேலும் தன்னுடைய டீமில் உள்ள ஒருவரை இயக்குநராக அறிமுகப்படுத்த முடிவெடுத்து அவரது இணை இயக்குநர் ஒருவர் கூறிய கதையை டிக் செய்துள்ளார். அத்துடன் மமிதா பைஜூவை தொடர்புகொண்டு கதையை சொல்லி, சம்மதம் பெற்றுள்ளாராம் பிரதீப் ரங்கநாதன். ‘"டியூட்'’ படத்திற்கு பிறகு, பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ அவருடன் ‘இணைந்து நடிக்கவுள்ளார்.  

Advertisment

ரியல் பட்டர்ஃப்ளை!

அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி யுள்ள படம் ‘"ஓ பட்டர்பிளை'. நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைசாக் சோமநாத் இசையமைத்துள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் விஜய் பேசுகையில், “"உறவுகளின் சிக்கலை மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் வழங்கியிருக்கிறோம். இந்தப் படத்தில் பட்டர்ஃப்ளை ஒரு கேரக்டராக வருகிறது. அதை முடிந்த அளவு ரியலாக அனிமேஷனில் எடுத்திருக்கிறோம். எல்லாருக்கும் நமது வாழ்க்கை நமது கையில் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கும். அதைத்தான் இப்படம் பேசுகிறது''’என்று கூறியுள்ளார். 

Advertisment

tt1

இணைந்த இயக்குநர்கள்!

இயக்குநர் பாலாவின் "வணங்கான்',’அவர் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இதனால் அடுத்த படத்தை இயக்காம-ருக்கிறார். ஆனால் தனது அடுத்த படத்திற்காக தற்போது திருவண்ணாமலையில் ஒரு அலுவலகம் திறந்து அங்கு தனது டீமுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் இயக்குநர் மாரி செல்வராஜும் கலந்து கொண்டுள்ளார். ‘"வாழை'’ படத் தாக்கத்தால் மாரி செல்வராஜ் மீது மிகுந்த அன்புகொண்ட பாலா, இந்தக் கதை கிராமத்துப் பின்னணியில் ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசுவதாக திட்டமிட்டுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளார். பாலா அழைத்ததால் தன்னுடைய அடுத்த பட பணிகளை கவனித்துகொண்டே இதிலும் ஈடுபட்டு வருகிறார். இரு பெரிய இயக்குநர்களும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது. 

ரஜினி பாராட்டு!

மமிதா பைஜூ, கயாடு லோஹர் வரிசையில் தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் அனஸ்வரா ராஜன். இவர் நடித்த ‘"ராங்கி'’ மற்றும் ‘"தக்ஸ்'’ ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், சமீபத்தில் வெளியான "வித் லவ்' படம் பெரிதும் பேசப்படுவதால் படு குஷியில் இருக்கிறார். மேலும் ரஜினிகாந்தின் பாராட்டால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கும் அவர், இனிமேல் தமிழில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம். இவர் ஏற்கனவே செல்வராகவன் இயக்கும் "7ஜி ரெயின்போ காலனி'’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியானால் தனது மார்க்கெட்டும் பட வாய்ப்பும்  இன்னமும் அதிகமாகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் அனஸ்வரா ராஜன்.

Advertisment