Advertisment

டூரிங் டாக்கீஸ்! 17.12.25

tt

வில்லன் ரிட்டர்ன்ஸ்!

ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தாலும் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் விஜய்சேதுபதி. அதனால் வில்லன் கதாபாத்திரங்களும் வந்து குவிக்கின்றன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தியிலும் தொடர்கிறது. அந்த வகையில் விஜய் தேவரகோண்டா -கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புது படத்தின் வில்லன் வாய்ப்பு விஜய்சேதுபதிக்கு வந்துள்ளது. கதை கேட்டு விஜய்சேதுபதியும் நடிக்க ஒப்புக்கொள்ள, பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். தற்போது ஹைதராபாத்தில் நடந்துவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே "உப்பெனா' தெலுங்கு படத்தில் அவர் வில்லனாக ந

வில்லன் ரிட்டர்ன்ஸ்!

ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தாலும் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் விஜய்சேதுபதி. அதனால் வில்லன் கதாபாத்திரங்களும் வந்து குவிக்கின்றன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தியிலும் தொடர்கிறது. அந்த வகையில் விஜய் தேவரகோண்டா -கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புது படத்தின் வில்லன் வாய்ப்பு விஜய்சேதுபதிக்கு வந்துள்ளது. கதை கேட்டு விஜய்சேதுபதியும் நடிக்க ஒப்புக்கொள்ள, பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். தற்போது ஹைதராபாத்தில் நடந்துவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே "உப்பெனா' தெலுங்கு படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார்.

Advertisment

அதிரடி முடிவு!

இயக்குநர்கள் ஹீரோவாக மாறுவது அவ்வப்போது நடந்துவந்தாலும் சமீபகாலமாக அது அதிகரித்துள்ளது. "லவ் டுடே பிரதீப் ரங்கநாதன்', ஸ்டார் பட இயக்குநர் "இளன்', டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் "அபிஷன் ஜீவந்த்' ஆகியோர் அடுத்தடுத்து ஹீரோவாக மாறிய நிலையில் தற்போது புதிதாக "மாமன்' பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோவாக உருவெடுத்துள் ளார். ஆனால் இவர் படம் அல்லாது வெப்சீரிஸில் நடிக்கிறார். "மாமன்' படத்திற்கு பிறகு, இவரது உதவி இயக்குநர் இயக்கும் வெப்சீரிஸில், மேற்பார்வையாளராக இவர்  பணியாற்றவிருந்தார். முதலில் நாயகனாக பாலசரவணன் நடிக்க கமிட்டாகி பின்னர் அவர் விலகியதால் அதிரடி முடிவு எடுத்த பிரசாந்த் பாண்டிராஜ், தானே ஹீரோவாக களம் இறங்க முடிவு செய்து நடிக்கவுள்ளார். 

Advertisment

சித்தி நம்பிக்கை!

கன்னக்குழி அழகால் ரசிகர்களை கவர்ந்த சித்தி இத்னானி, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். தமிழில் "வெந்து தணிந்தது காடு' மூலம் அறிமுகமான இவர், பின்பு ‘"காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'’ படத்தில் நடித்தார். தற்போது அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘"ரெட்ட தல'’ படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக அல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஒரு  வருடத்திற்கு மேலாகியும் படம் ரிலீசாகாமல், இப்போது ஒரு வழியாக வரும் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அதுவும் மாற்றப்பட்டு தற்போது கிறிஸ்துமஸ் வெளியீடாக படம் திரைக்கு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது படம் வெளியாகவுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சித்தி இத்னானி. 

tt1

சாரா ஹேப்பி!

"தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சாரா அர்ஜுன் தொடர்ந்து "சைவம்', "சில்லுக் கருப்பட்டி' படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் நாயகியாகவும் நடித்திருந்தார். நாயகியாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் "துரந்தர்' படத்தில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இருப்பினும் தன்னைவிட 20 வயது அதிகமான ரன்வீர் சிங்குடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது.  "துரந்தர்' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கைவசம் வைத்துள்ள சாரா, அதில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தவுள்ளாராம். துரந்தர் பட வெற்றியால் அங்கு அவருக்கு டிமாண்ட் அதிகமாக, ஏகப் பட்ட பாலிவுட் தயாரிப்பாளர்களும் இயக்கு னர்களும் அணுகி வருகின்றனர். அதோடு அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றார் களாம். இதனால் ஏகத்துக் கும் சந்தோஷத்தில் இருக் கிறார் சாரா அர்ஜுன். 

-கவிதாசன் ஜெ.

nkn171225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe