ஹீரோவான கென்!

"அசுரன்' படம் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நடிப்பைத் தாண்டி தனுஷ் நடித்த "திருச்சிற்றம்பலம்', "வாத்தி', "ராயன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்துள்ளார். இதன் விளைவாக தற்போது இயக்குநராக களமிறங்கவுள்ளார். இதில் இவரே லீட் ரோலிலும் நடிக்கவுள்ளார். நாயகியாக தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீதேவி கமிட் டாகியுள்ளாராம். இவர் நானி தயாரிப்பில் வெற்றிபெற்ற ‘"கோர்ட்'’ தெலுங்கு படம் மூலம் கவனம் ஈர்த்தார். தமிழில் தயாரிப்பாளர் ராஜேஷ் நடிகராக நடிக்கும் புதுப் படத்தில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் இந்த படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisment

சூரி அதிரடி!

நாயகனாக மாறியதில் இருந்து தொடர் வெற்றிகளை கொடுத்து அடுத்த கட்டத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார் சூரி. சமீபத்தில் "மாமன்' படத்தில் நடித்தது மட்டு மில்லாமல் கதையும் எழுதியிருந்தார். இத னைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளார். அதன் முதற்கட்டமாக இனி மேல் நடிக்கும் படங்களில் சம்பளம் வாங்குவதற்குப் பதில், தயாரிப்பாளராக இணைந்து வியாபாரத்தில் பங்கு என்ற முறையில் வேலை பார்க்கத் திட்ட மிட்டிருக்கிறார். இதையடுத்து சொந்த பேனரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் வழக் கம்போல் தனக்கு பொருத்த மான கதைகளை தேர்ந் தெடுத்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணம் சூரி தனது சம்பளத்தை அதிகப்படுத்தியுள்ளதுதானாம். ஆனால் அதை தரத் தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதால் இந்த அதிரடி முடிவுக்கு இறங்கியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

Advertisment

tt1

அடுத்தடுத்து கமிட்!

"வீர தீர சூரன்'’ படத்தைத் தொடர்ந்து இன்னும் அடுத்த பட வேலைகளில் கலந்து கொள்ளவில்லை விக்ரம். முதலில் ‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இத னால் "96' பிரேம்குமார் இயக்கத்தில் புது படம் நடிக்க கமிட்டானார். கமிட்டான படங்களில் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே, அடுத்த படங்களை கமிட் செய்துவரும் விக்ரம் தற்போது மேலும் ஒரு படத்தை கமிட் செய்துள்ளார். சமீபத்தில் தேசிய விருது பெற்ற ‘"பார்க்கிங்'’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ் ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ள விக்ரம், இந்தாண்டு இறுதியில் படப் பிடிப்பிற்கான தேதியை ஒதுக்கி வைத்துள்ளார்.

நம்பிக்கை!

தமிழில் ‘"நெஞ்சில் துணிவிருந்தால்'’, ‘"நோட்டா'’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந் தாலும், தனுஷின் ‘"பட்டாஸ்'’ படம் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. ஆனால் அதன் பிறகு ஆளே காணவில்லை. தற்போது வசந்த் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘"இந்திரா'’ படத்தில் நடித்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், “இப்படத்தில் நடித்தது மிக மிக சுவாரஸ்யமாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. நான் நடித்த கயல் கதாபாத்திரம் என்  மனதுக்கு மிகவும் நெருக்கமான ரோல்''’என்றார். 

Advertisment

சர்ச்சை அனுபமா!

தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்திவரும் அனுபமா பரமேஸ்வரன், "பரதா'’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வந்தார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவான இப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது வருகின்ற 22ஆம் தேதி வெளியாக வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை "ஒரு கிராமத்தில் பாதி முகம் மறைத்தபடி பர்தா அணியும் வழக்கத்தை கொண்டிருக்கும் பெண்கள், அந்த பர்தாவால் எந்தளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்' என்பதை பேசும் படமாகத் தெரிகிறது. அதனால் சர்ச்சையில் சிக்குமோ என்ற யோசனையில் இருக்கிறார் அனுபமா. ஏற்கனவே கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘"ஜானகி ஸ்ள் ஸ்டேட் ஆஃப் கேரளா'’ படம் சர்ச்சையானதால் இதுவும் அப்படி ஆகிவிடுமோ என யோசிக்கிறார். இப்படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கதாபாத்திரத்திற்கு கடவுள் பெயர் வைத்திருப்பது மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என சென்சார் போர்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

-கவிதாசன் ஜெ.