குத்தாட்ட ஸ்ரேயா!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பெரிய நடிகரான ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா சிலகாலம் காணாமல் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான "ரெட்ரோ' படத்தில் ‘"லவ் டீடாக்ஸ்'’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இந்த பாடல் பெரியளவு ரசிகர்களின் கவனத்தைப் பெறவில்லை. இந்தச் சூழலில் மீண்டும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ‘"நான்வய லன்ஸ்'’ என்னும் தலைப்பில் ‘"மெட்ரோ'’ பட ஹீரோ ஷிரிஷ் நடிக்கும் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள ‘"கனகா'’ எனும் பாடலுக்கு கவர்ச்சி நட னம் போட்டுள்ளார். இப்பாடல் ரசிகரின் கவனத்தைப் பெறும் என நம்புகிறார். மேலும் தனது தமிழ் பட வாய்ப்பை மீண்டும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கிறார். முன்னதாக நடிகையாக நடித்துக்கொண் டிருக்கும்போதே பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள் ளார்.

Advertisment

செலக்டிவ் சஞ்சனா!

"லப்பர் பந்து'’ மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ‘"தக் லைஃப்'’ படத்தில் மட்டும் துணை கதாபாத்திரத்தில் தோன்றி யிருந்தார். அவருக்கு தொடர்ந்து அடுக்கடுக்கான படங்களில் நடிப்பதில் விருப்பம் இல்லையாம். தனக்கு சரியான கதாபாத்திரமாக கதைக்கு வலுசேர்க்கும்படி இருக்கும்பட்சத்தில்தான் நடிப்பாராம். அந்த வகை யில் அவர் அடுத்து லோகேஷ் கனகராஜ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் ‘"டிசி'’ படத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடிக்கும் நிலையில், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கவுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துவரும் நிலையில் இரண்டாம்கட்ட படப் பிடிப்பில்தான் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்படுகிறது. ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் ஜானரில் காதல் கலந்த படமாக இப்படம் உருவாகிறது.

Advertisment

tt1

பார்ட்டி ரெடி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சனா ஷெட்டி என ஒரு பெரிய பட்டாளமே நடித்த திரைப்படம் ‘"பார்ட்டி.' படப்பிடிப்பு முழுவதும் ஃபிஜி தீவில் நடந்தது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித் திருந்த இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருந்தார். இவரது இசையில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் பாடிய ‘"சாரே'’ பாடல் முன்ன தாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படத்தில் அனைத்து பணிகளும் முடிந்து 2018ஆம் ஆண்டு ரிலீஸுக்கு தயாரானது. ஆனால் ஃபிஜி தீவிலிருந்து சான்றிதழ் வராத தால் படம் வெளியாகாமலே கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடத்திய பர்த்டே பார்ட்டியில் இந்த படம் தொடர்பான டிஸ்கஷன் நடந்துள்ளது. அதனால் படத்தை வெளியிட முடிவெடுத்த படக்குழு, சான்றிதழை பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். திட்டமிட்டபடி சான்றிதழ் கிடைத்தால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட பிளான் போட்டுள்ளனர். விஷால் -சுந்தர் சி கூட்டணியில் உருவான ‘"மதகஜராஜா'’ படம் 12 வருடங்கள் கழித்து வெளியாகி வெற்றி பெற்றதால் இந்தப்படமும் அப்படி அமையும் என படக்குழு நம்புகிறது.


கவலை தீரும்!

சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் சரியாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் தெலுங்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக அவர் நடித்த "சங்கராந்திகி வஸ்துனம்' ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. இதனால் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்துவரு கிறது. இப்போது புதிதாக பரத் தர்ஷன் இயக்கத்தில் வீர் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் வாய்ப்பு குவிந்தாலும் தமிழில் அது வர வில்லையே என கவலைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், அக்கவலை இனி தீரும் என சொல்கிறார். காரணம், அவர் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த ‘"தீயவர் குலை நடுங்க'’ படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. இது தனக்கு தமிழில் வெற்றிப்படமாக அமைந்து தனக்கு மீண்டும் ஒரு நல்ல பாதையை அமைத்துக் கொடுக்கும் என ஐஸ்வர்யா ராஜேஷ் நம்புகிறார். 

Advertisment

-கவிதாசன் ஜெ.