புது ஹீரோயின்!
"பராசக்தி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அடுத்த மாதம் படப் பிடிப்பு தொடங்குகிறது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவை முன்னதாகவே கமிட்செய்து வைத்திருந் தது படக்குழு. ஆனால் அவரிடம் தற்போது படப்பிடிப் பிற்கான தேதி இல்லாததால் அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரீலீலாவை கமிட் செய்துள் ளது படக்குழு. இவர் பராசக்தி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர்த்து வில்லன் ரோலுக்கு ஏற்கனவே டான் படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவை கமிட் செய் துள்ளனர். இசையமைப்பாளராக வழக்கம்போல் சிவகார்த்தி கேயனின் நெருங்கிய நண்பரான அனிருத் தை கமிட் செய்திருக் கிறார்கள்.
பாலிவுட்டுக்கு குறி!
ஒரே படத்தில் ஓஹோவென பிரபலமானவர் நடிகை கயாடு லோஹர். "டிராகன்' படம் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்த அவர், அடுத் தடுத்து பல படங்களில் கமிட்டானார். சிம்புவுடன் ஒரு படம், ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படம், அதர்வா வுடன் ஒரு படம் என பிஸியானார். இதில் அதர்வா வுடனான ‘"இதயம் முரளி'’ படம் "டிராகன்' படத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு இன்னமும் படப்பிடிப்பில் இருக்கிறது. சிம்பு படம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதுபோக ஏகப்பட்ட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது. இந்த வரிசையில் புதிதாக விஷால் -சுந்தர் சி. கூட்டணியில் உருவாகும் படத்தில் அவர் கமிட்டாகியுள்ளார். இதில் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிக்கிறாராம். ஆனால் அது முகம் சுளிக்கும்படி இருக்காது எனச் சொல்கிறார்.
நீண்ட இடைவெளி!
பிரபல சீனியர் நடிகையான தபு இந்தியில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி -தெலுங்கு இயக்குநர் பூரிஜெகன்நாத் படம் மூலம் தென்னிந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இடை யில் அல்லு அர்ஜூன் நடித்த "ஆலா வைகுந்த புரமுலோ'’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் தற்போது மீண்டும் ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தமிழ் இயக்குநர் இரா.கார்த்திக் இயக்கத்தில் நாகர்ஜூனா நடிக்கும் அவரது 100வது படத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடித்துவரும் வழக்கமான கதாபாத்திரத்தைவிட மிகவும் முக்கியம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரும் நாகர்ஜூனாவும் ஏற்கனவே ஜோடியாக இணைந்து நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ளனர். முன்னதாக அஜித்தின் "குட் பேட் அக்லி' படத்தில் தபுவிடம் பேச்சுவார்த்தை நடந்து, அது தோல்வியில் முடிந்தது.
கெமிஸ்ட்ரி!
தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் "பைசன்' பட ரிலீஸிற்காக காத்திருக்கும் மாரி செல்வராஜ். அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படமும் தனுஷை வைத்து ஒரு படமும் இயக்க கமிட்டானார். இதில் கார்த்தி படம் தற்காலிக மாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக தனுஷ் பட வேலைகளைத் தொடங்கி யுள்ளார். படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை கவனித்து வரும் அவர், அதேசமயம் நடிகர், நடிகைகளுக்கான தேர்வையும் ஆரம்பித்துள்ளார். நாயகியாக தற்போது சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். தனுஷும் சாய் பல்லவியும் ஏற்கனவே ‘"மாரி 2'’ படத்தில் நடித்துள்ளதால், அந்த கெமிஸ்ட்ரி இதிலும் நன்றாக ஒர்க்காகும் என நினைக்கிறார். அதேபோல் வில்லனாக புது முகத்தையோ அல்லது தனுஷுடன் கர்ணனில் நடித்த நட்டியையோ போடலாமா என யோசித்து வருகிறார். மற்ற துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் படங்களில் நடித்த நடிகர்களையே கமிட் செய்யும் ப்ளானில் இருக்கிறார். படப்பிடிப்பை அடுத்த ஆண்டு திட்டமிட்டிருக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
-கவிதாசன் ஜெ.