Advertisment

டூரிங் டாக்கீஸ்! 14.02.26

touringtalkies

கயாடு உறுதி!

touringtalkies1

"டிராகன்'’படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கயாடு லோஹர், ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார். தென்னிந் திய அளவில் கவனம் செலுத்தி வரும் அவர் கை நிறைய படங்களை வைத்துள்ளார். இந்தச்சூழலில், ஒரு நிகழ்ச்சி யில் பேசிய அவர், "நான் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய ஆள். அதனால், எந்த ஒரு விஷயத்திற்கும் எளிதில் மனம்  உடைந்து விடுவேன். அந்த தன்மை யை மாற்றி உறுதிமிக்கவ ளாகவும், தடுமாற்றம் இல்லாமலும் மாற ஆசைப்படுகிறேன்''’ என்றிருக்கிறார்.

Advertisment

கெமிஸ்ட்ரி ஜோடி!

பாலிவுட்டில் தனது மார்கெட்டை உயர்த்த நினைக்கும் ராஷ்மிகா, தொடர்ந்து அங்கேயே கவனம்

கயாடு உறுதி!

touringtalkies1

"டிராகன்'’படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கயாடு லோஹர், ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார். தென்னிந் திய அளவில் கவனம் செலுத்தி வரும் அவர் கை நிறைய படங்களை வைத்துள்ளார். இந்தச்சூழலில், ஒரு நிகழ்ச்சி யில் பேசிய அவர், "நான் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய ஆள். அதனால், எந்த ஒரு விஷயத்திற்கும் எளிதில் மனம்  உடைந்து விடுவேன். அந்த தன்மை யை மாற்றி உறுதிமிக்கவ ளாகவும், தடுமாற்றம் இல்லாமலும் மாற ஆசைப்படுகிறேன்''’ என்றிருக்கிறார்.

Advertisment

கெமிஸ்ட்ரி ஜோடி!

பாலிவுட்டில் தனது மார்கெட்டை உயர்த்த நினைக்கும் ராஷ்மிகா, தொடர்ந்து அங்கேயே கவனம் செலுத்தி வருகிறார். இப்போது ‘"காக்டெய்ல் 2'’ படத்தில் நடித்து முடித்துள்ளவர், அதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக வருகிறார். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட்டாகியிருப்பதாக பட யூனிட் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலறிந்த மற்ற தயாரிப்பாளர்கள் இருவரையும் மீண்டும் ஒரு படத்தின் இணைக்க முயற்சி செய்தனர். அது இப்போது கைகூடி அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கும் புதுப்படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படம் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகிறது. பாலிவுட்டில் இந்த ஜோடிக்கு தனி மார்க்கெட்டே உருவாகியிருக்கிறதாம்.

Advertisment

80'ஸ் ஜோடி!

touringtalkies2

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமலும், ரஜினியும் ஆரம்ப காலங்களில் பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும்  இணைந்து நடிக்கத் திட்டமிட்டனர். இப் படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து படத்தின் இயக்குநர் தேடுதல் வேட்டை நடந்து தற்போது இறுதி செய்யப்பட்டுள் ளது. அந்த அதிர்ஷ்ட இயக்குநர், ரஜினியை வைத்து தற்போது "ஜெயிலர் 2'’ படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப்குமார். படத்திற்கு  இசை அனிருத். படத்தின் ப்ரோமோ ஷூட்டில் 80'ஸ் காலகட்ட பழைய கெட்டப்போடு ரஜினியும் கமலும் நடித்துள்ளனர். இவர்களோடு நெல்சன் மற்றும் அனிருத்தும்  நடித்துள்ளனர். விரைவில் இந்த ப்ரோமோ வெளியாகவுள்ளது.

இசை வாரிசு!

இசையமைப்பாளர் வித்யாசகரின் மகன் ஹர்ஷ வர்தன், பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருக் கிறார். இவர் நாயகனாக லிங்குசாமி இயக்கும் படத்தில் கமிட்டாகியிருந்தார்.நாயகியாக ருக்மிணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் இல்லை. இதனால் தற்போது ஹர்ஷவர்தன் தனது அடுத்த படத்தை கமிட்செய்துள்ளார். அறிமுக இயக்குநர் நேசன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

தள்ளிப்போகும்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ரிலீஸுக்கு தயாராகியும் படம் இன்னும் வெளியாகவில்லை. காதலர் தினத்தில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில்... "ஜன நாயகன்'’பட சென்சார் பிரச்சினை முடிவை நோக்கிச் சென்றுள்ளதால் அந்தப் பட ரிலீஸ் சமயத்தில் வேண்டாம் என படத்தின் தயாரிப்பாளர் லலித் நினைக்கிறாராம். காரணம் இவர் விஜய்யை வைத்து "லியோ'’படத்தை தயாரித்திருந்தார் என்பதுதான். அதனால் பட ரிலீஸை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார். அதற்குள் "ஜனநாயகன்' வெளியாகிவிடும் என கணக்கு போட்டுள்ளாராம். 

nkn140226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe