நான்காவது முறை!
தனுஷை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்ற ஆனந்த் எல்.ராய், இதுவரை "ராஞ்சனா', ‘"அட்ராங்கி ரே', "தேரே இஷ்க் மே'’ என தனுஷை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் சமீபத்தில் வெளியான "தேரே இஷ்க் மே' ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த காம்போவை ஒரு கவனிக்கத்தக்க வெற்றி காம்போவாக மாற்றியுள்ளது. இதனால் இந்தக் கூட்டணி நான் காவது முறையாக இணைந்துள்ளது. இந்தமுறை மிகப்பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஜானர் மற்றும் ஆக்ஷன் காதல் கதைக்கு இருவரும் கைகோர்க்க, இவர்களோடு மூன்று படங்களிலும் பயணித்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவை அனைத்தும் தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உறுதியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு மற்றும் அடுத்தகட்ட நடவட
நான்காவது முறை!
தனுஷை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்ற ஆனந்த் எல்.ராய், இதுவரை "ராஞ்சனா', ‘"அட்ராங்கி ரே', "தேரே இஷ்க் மே'’ என தனுஷை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் சமீபத்தில் வெளியான "தேரே இஷ்க் மே' ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த காம்போவை ஒரு கவனிக்கத்தக்க வெற்றி காம்போவாக மாற்றியுள்ளது. இதனால் இந்தக் கூட்டணி நான் காவது முறையாக இணைந்துள்ளது. இந்தமுறை மிகப்பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஜானர் மற்றும் ஆக்ஷன் காதல் கதைக்கு இருவரும் கைகோர்க்க, இவர்களோடு மூன்று படங்களிலும் பயணித்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவை அனைத்தும் தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உறுதியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.
பதில் வருமா?
வெற்றிமாறன் -சிம்பு கூட்டணி யில் உருவாகும் "அரசன்'’படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இன்னும் ஹீரோயின் கமிட்டாகவில்லையாம். சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால் அது அடுத்தகட்டத்துக்கு போகவில்லை. சமந்தா எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார். அதனால் வேறு ஹீரோ யின் தேடும் பட லத்தை ஆரம்பித் துள்ளது. முதற் கட்டமாக த்ரிஷாவை அணுகியுள்ளனர். அவர் பச்சைக் கொடி காட்டும் பட்சத்தில் விரைவில் தொடங்கவுள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பிலே ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க திட்டமாம். இரண்டுபேரில் யார் முதலில் பதில் சொல்கிறார்களோ அவரை கமிட் செய்து உடனடியாக படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
மீண்டும் பாக்யராஜ்!
இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் திரையுலகில் 50வது ஆண்டில் பயணிப்பதையொட்டி சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையை எமோஷனலோடு பகிர்ந்திருந்தார். இனி வரும் காலங்களிலும் அதே உத்வேகத்தோடு செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இவர் கடைசியாக இவரது மகன் சாந்தனுவை வைத்து 2010-ல் ‘"சித்து +2'’ படத்தை இயக்கியிருந்தார். 16ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளதால் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/tt1-2026-01-12-17-46-09.jpg)
வில்லன் கமல்!
அரசியலில் தீவிரம் காட்டி வரும் கமல், சினிமாவிலும் பிஸியாக இருக்கிறார். அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவுள்ள அவர், படப்பிடிப்பு இன்னும் தொடங்கபடாததால் நடிக்காமல் இருக்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே வில்லனாக நடித்த "கல்கி 2898 ஏ.டி', படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதத்தி-ருந்து தொடங்குகிறது. அதற்கு தற்போது தேதிகள் ஒதுக்கியுள்ளார். மொத்தம் 70 நாட்கள் தொடர்ச்சியாக இவரது காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இதில் நாயகன் பிரபாஸுடன் மோதும் காட்சிகள் இருப்பதால் அதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அதாவது வழக்கத்தை விட கூடுதலாக கடுமையான உடற்பயிற்சியும் பயங்கரமான டயட்டையும் பின்பற்றி வருகிறாராம். 71 வயதிலும் இவரது டெடிகேஷனைக் கண்டு படக்குழு வியக்கிறதாம்.
நடனத்துக்கு குட்பை!
நடிப்பை விட நடனத்துக்கு பிரபலமான ஸ்ரீலீலா, தனக்கு தொடர்ந்து நடனம் சம்பந்தமான கேரக்டரே வருவதாக ஃபீல் பண்ணுகிறார். அவருக்கு நடனத்துக்கு இணையாக நடிப்பும் பிடிக்குமாம். அதனால் ஒரு நல்ல நடிகையாகவும் பெயரெடுக்க விரும்புகிறார். அதனால் இனிமேல் நடனத்தை விட நடிப்பிற்கு முக்கியத்துவம் இருக்கும் கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். நாயகியாக மட்டுமில்லாமல் முக்கியமான ரோலாக இருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்கிறாராம்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us