நெக்ஸ்ட் தனுஷ்!
தீபாவளி ரேசில் முத-டம் பிடித்துள்ள 'அமரன்', அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு ஒரு மைல்கல் படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, கவனிக் கப்படும் இயக்குநராக மாறியிருக்கிறார். அவர் அடுத்ததாக தனுஷை வைத்து இயக்க கமிட்டாகி யுள்ளார். கோபுரம் ஃபி-ம்ஸ் அன்புச்செழியன் இப்படத்தை தயாரிக்கிறார். முன்னதாக அன்புச் செழியன் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தை செல்லா அய்யாவு இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் செல்லா அய்யாவு விலக, அவருக்குப் பதிலாக ராஜ்குமார் பெரியசாமி உள்ளே வந்திருக்கிறார். தனுஷின் கமிட்மெண்டு கள் முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடரும். இப்போதைக்கு ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
ஜெயம் உண்டாகட்டும்!
ஜெயம் ரவிக்கு சமீபகாலமாக ஜெயம் இல்லாமல் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிக்கும் படங்கள் பெரிதளவு போகவில்லை. கைவசம் "ஜீனி' மற்றும் "காத-க்க நேர மில்லை' ஆகிய இரண்டு படங்களை வைத்திருக்கும் நிலையில் அதனை பெரிதும் நம்பியிருக்கிறார். இரண்டும் ரிலீஸுக்கு தயாராகிவருகின்றன. இந்தச் சூழ-ல் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிக்கு காத்திருக்கும் ஜெயம் ரவி, "தனி ஒருவன் 2' படத்தை ஆரம்பிக்க அவரது அண்ணன் ஜெயம் ராஜாவிடம் கேட்டுள்ளார். வில்லன் கதாபாத்திரத்துக்கு ஃபகத் பாசில், அபிஷேக் பச்சன் பெயர்கள் அடிப்பட்டது. இந்த சூழ-ல் "தனி ஒருவன்' படப்பிடிப்பை விரைவில் தொடங்க தீவிரம் காட்டிவருகிறார் ஜெயம் ரவி. தம்பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த அண்ணன், படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக நயன்தாரா கமிட்டாகியுள்ளார்.
வெப்சீரிஸ் சமந்தா!
கோ-வுட் மற்றும் டோ-வுட்டில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு படங்களில் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் அவர் நடித்த "சிட்டாடெல்' வெப் தொடர் நீண்ட காலமாக உருவாகிவந்த நிலையில், அண்மையில் ரிலீஸாகியுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக முத்தக் காட்சி, ஆக்ஷன் காட்சி, கூடுதல் கவர்ச்சி என சமந்தா தாராளம் காட்டியிருக்கிறார். இதனால் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார் சமந்தா. சிட்டாடெல் தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இயக்கத்தில் ஏற்கனவே "தி ஃபேமி- மேன்' சீசன் 2-வில் நடித்திருந்தார். இதுதான் சமந்தா நடித்த முதல் வெப் தொடர். இதில் அவர் தமிழீழப் போராளியாக நடித்திருந்த நிலையில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது சமந்தாவை லைம்லைட்டில் வைத்திருக்க ஒரு காரணமாக அமைந்தது. இதையடுத்து இரண்டாவது தொடரான "சிட்டாடெல்' வெப் தொடரும் சமந்தாவை மீண்டும் லைம்லைட்டுக்கு வர உதவியாக மாறியுள்ளது.
மீதா மகிழ்ச்சி!
"முதலும் நீ முடிவும் நீ', "குட் நைட்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மீதா ரகுநாத், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இடையில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சித்தார்த்தின் 40வது படத்தில் நடிக்க கமிட்டானார். இப்போது சசிக்குமார் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ் முருகன் இயக்கி வர, படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளதால் தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மீதா ரகுநாத்.
-கவிதாசன் ஜெ.