தோசா கிங்!

"வேட்டையன்'’படத்தை தொடர்ந்து தெலுங்கில் நானியிடம் கதை கூறியிருந்தார் இயக்குநர் த.செ.ஞானவேல், அது அடுத்தகட்டத்திற்கு நகரவில்லை. இதனால் வேட்டையன் படத்திற்கு முன்னாடியே கமிட்டாகியிருந்த "தோசா கிங்'’படத்தை கையில் எடுத்துள்ளார். இப்படம் தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஒன்றான ராஜகோபால் -ஜீவஜோதி  -சாந்தகுமார் வழக்கை மையப்படுத்தி உருவாகிறது. ஜீவஜோதியின் 18 வருட சட்டப் போராட்டத்தில், அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றத்திற்காக பிரபல ஹோட்டல் தொழிலதிபர் ராஜகோபால் ஆயுள் தண்டனை பெற்றார். அந்த தண்டனை காலத்திலே ராஜகோபால் உயிரிழந்தார். ஜீவஜோதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் உரிமையை ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் மோகன்லாலை சந்தித்து கதை கூறினார் ஞானவேல். மோகன்லாலுக் கும் பிடித்திருந்தது. ஆனால் எதுவும் முடிவாகாமல் இருந்தது. இந்தநிலையில் மோகன்லால் நடிக்க ஒப்புக்கொண் டுள்ளதாக மலையாள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜகோபால் கேரக்டரில் அவர் நடிக்கிறாராம்.

Advertisment

tt1

படு குஷி!

இந்தியாவில்  சூப்பர் ஹீரோ கதையில் முதல் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "லோகா சாப்டர் 1: சந்திரா'’ படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து... தற்போது ரூ.200 கோடியை நெருங்கியுள்ளது. படத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷனை டாப் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, சமந்தா, ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகள் பாராட்டியுள்ளதால், கல்யாணி பிரியதர்ஷன் மகிழ்ச்சியில் இருக்கிறார். பாராட்டு ஒருபுறமிருக்க, இந்த பட வெற்றியால் கோலிவுட் உட்பட பல்வேறு மொழி திரைத் துறையில் பெண் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். தான் நடித்த படம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என படுகுஷியில் இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். 

ரொம்ப பிஸி!

தமிழில் முன்னணி நடிகர்களில் அதிகப்படியான படங்களில் நடித்து வருபவர் தனுஷ். இந்தியில் "தேரே இஷ்க் மெய்ன்'’படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது ‘"போர் தொழில்'’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக "அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம், அப்துல் கலாமின் "பயோ-பிக்' என அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வைத்துள்ளார். இந்த லிஸ்டில் தற்போது இன்னொரு படமும் சேர்ந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வேணு உடுகுலாவை கமிட் செய்துள்ளார் தனுஷ். இவர் ராணா, சாய் பல்லவி நடித்த தெலுங்குப் படமான "விராட பருவம்'’படத்தை இயக்கியவர். தனுஷை இவர் இயக்கும் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

மறுப்பு!

Advertisment

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரிடம் உதவியாளராக இருந்ததாகவும், சில பாடல்களுக்கு உதவி புரிந்ததாகவும் சில பேட்டிகளில் கூறி வந்தார். குறிப்பாக நா.முத்துக்குமாரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் நடத்திய "ஆனந்த யாழை'’நினைவு இசை நிகழ்ச்சியில் நா.முத்துக்குமாருடன் மிகுந்த நெருக்கமாக இருந்ததாகக் கூறியிருந்தார். இவரது தொடர் பேச்சுக்கு தற்போது நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். “எங்கள் அண்ணன் நா.முத்துக்குமாருக்கு உதவியாள ராக கார்த்திக் நேத்தா ஒரு போதும் இருந்ததில்லை. அதோடு பாடல் எழுதவும் உதவி புரிந்ததில்லை. அவருக்கு ஒரே ஒரு உதவியாளர்தான் இருந்தார். அது கவிஞர் வேல் முருகன் மட்டுமே” என்று விளக்கம் அளித்துள்ளார். கவிஞர் வேல்முருகன் 'நேரம்' படத்தில் ஹிட்டடித்த ‘"காதல் என் னுள்ளே வந்த நேரம் அறியா மல்...'’பாடலை எழுதியவர். தற்போது படங்களில் பாடல்கள் எழுதுவதோடு படம் இயக்குவதற் கான முயற்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிதாசன் ஜெ.