ப்ளான் பி!
"தக் லைஃப்' படத்தைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படமும், ஒரு இளம் நடிகரை வைத்து காதல் படமும் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் இரண்டு படமுமே தக் லைஃப் பட தோல்வியால் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது இதில் சிம்பு படத்தில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது சிம்பு, வெற்றிமாறன் படத்திற்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதில் வேறொரு நாயகனைத் தேடி வந்த மணிரத்னம் தற்போது விஜய் சேதுபதியை கமிட் செய்துள்ளார். செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர். நாயகி, ஏற்கனவே மணிரத்னம் கமிட் செய்து வைத்திருந்த ருக்மிணி வசந்த். இவர் "ஏஸ்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்கிறார். ஆனால் படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்கப்படவில்லை. காரணம், விஜய் சேது
ப்ளான் பி!
"தக் லைஃப்' படத்தைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படமும், ஒரு இளம் நடிகரை வைத்து காதல் படமும் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் இரண்டு படமுமே தக் லைஃப் பட தோல்வியால் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது இதில் சிம்பு படத்தில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது சிம்பு, வெற்றிமாறன் படத்திற்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதில் வேறொரு நாயகனைத் தேடி வந்த மணிரத்னம் தற்போது விஜய் சேதுபதியை கமிட் செய்துள்ளார். செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர். நாயகி, ஏற்கனவே மணிரத்னம் கமிட் செய்து வைத்திருந்த ருக்மிணி வசந்த். இவர் "ஏஸ்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்கிறார். ஆனால் படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்கப்படவில்லை. காரணம், விஜய் சேதுபதியும் ருக்மிணி வசந்தும் அவர்களது லைனப்பில் படு பிஸியாக இருப்பதால் அடுத்தாண்டு கோடை வரை தேதிகள் இல்லை. அதே சமயம் அதற்குள் தனது இன்னொரு படமான காதல் படம் கைகூடினால் அதை எடுத்து முடித்துவிடலாம் என்றும் ஒரு ப்ளான் வைத்துள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரமை நடிக்க வைக்க பேசி வருகிறார்.
பெரிய ஹீரோ!
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் "கூலி படம்' எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அவர் அடுத்து இயக்கவிருக்கும் ‘"கைதி 2'’ படத்தை ஹிட்டாக்கும் முயற்சியில் இருக்கிறார். இதை முடித்துவிட்டு பாலிவுட்டில் அமீர்கானை வைத்து எடுக்கவிருந்த படம் கைவிடப்பட்டதால் மற்றொரு பெரிய ஹீரோவை தேடிவந்தார். அந்த பெரிய ஹீரோ அஜித் எனத் தெரியவந்துள்ளது. சமீபகால மாக அஜித்தின் மேனேஜரான சுரேஷ்சந்திராவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்துள்ளது. அதனால் அஜித்தின் 65ஆவது படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அஜித்தின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொம்ப ஸ்பெஷல்!
இந்தி மற்றும் தெலுங்கில் தலா இரண்டு படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தமிழில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘"காந்தா'’ படம் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். இப்படம் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாகவிருந்தது. ஆனால் துல்கர் சல்மானின் "லோகா' பட வெற்றியால் தள்ளிப்போனது. தனது முதல் தமிழ் படமே தள்ளிப்போனதால் கவலையி-ருந்த பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது மகிழ்ச்சியி-ருக்கிறார். படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. "இப்படம் குறித்து பேசிய அவர், “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றதும் அவருக்கு ஈடு கொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற பதட்டம் இருந்தது. ஆனால், எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு பெருமை'' ’என்றார். மேலும் இந்த படம் தனக்கு தமிழில் ஒரு நல்ல பாதையை அமைத்துக் கொடுக்கும் என நம்பு கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/tt1-2025-11-10-18-23-53.jpg)
செல்லப்பிள்ளை!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/tt2-2025-11-10-18-24-13.jpg)
"அருணாச்சலம்' படத்திற்குப் பிறகு ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதால், அதுவும் கமல் தயாரிப்பில் பெற்றுள்ளதால் கூடுதல் மெனக்கெடல்களை போட்டு வருகிறார் சுந்தர் சி. இதில் புதிதாக எதையும் முயற்சிக்காமல் தனது வெற்றி ஃபார்முலாவான காமெடி கலாட்டாவை இந்த படத்திலும் தொடரவிருக்கிறார். அதாவது காமெடி தூக்கலாகவும், ஆக்ஷன் குறைவாகவும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாகவும், ரஜினி ரசிகர் களுக்கென சில மாஸ் மொமெண்ட்ஸ்களை உருவாக்கி யும் கதை எழுதத் திட்டமிட்டிருக்கிறார். தற்போது நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வருவதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தி-ருந்துதான் முழுநேரப் பணியில் ரஜினி படத்தை கவனிக்கவுள்ளார். இப்போதைக்கு ரஜினி படத்திற்காக தமன்னாவை ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கவைக்கும் ப்ளானில் இருக்கிறார். இதைத் தவிர்த்து காமெடி ட்ராக்குக்கு அவரது விருப்பமான வடிவேலுவை கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். அதே சமயம் இசைக்கு ரஜினியின் செல்லப்பிள்ளை அனிருத்தை போடலாமா, இல்லை தனது செல்லப் பிள்ளை ஹிப்ஹாப் ஆதியை போடலாமா என யோசித்து வருகிறார். இப்படம் 2027 பொங்கலுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
-கவிதாசன் ஜெ.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us